யாரு ஆல்யா மானசா ஜோடியா?.. 2019ல ஒன்னு.. 2020ல இன்னொன்னு! 2021ல மற்றொன்று! இப்ப 2022 இல் வேறொன்னா?
சென்னை: மகன் பிறந்தவுடன் வேறு ஒரு புதிய காரை ஆல்யா மானசா- சஞ்சீவ் தம்பதி வாங்கியுள்ளதாக தெரிகிறது.
ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளானவர்கள் ஆல்யா மானசாவும் சஞ்சீவும். இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இவர்களிடையே காதல் ஏற்பட்டது.
இதையடுத்து இவர்கள் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து ஆல்யா மானசா சிறிது காலம் ஓய்வில் இருந்தார்.

கார் மீது அதிக ஆர்வம்
சஞ்சீவும் ஆல்யாவும் கார்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்களாம். இதனால் பல கார்களை வாங்கி குவிக்க தொடங்கியதாக தகவல்கள் வந்தனர். ஐலா எனும் பெண் குழந்தை பிறப்பதற்கு முன்னர் அதாவது 2020 ஆம் ஆண்டு ஒரு பென்ஸ் காரை சஞ்சீவ் வாங்கியிருந்தார். பின்னர் தனது மகளின் முதல் பிறந்தநாளின் போது ஒரு சொகுசு காரை வாங்கி பரிசாக கொடுத்தார்.

மூன்றாவது கார்
இதையடுத்து மூன்றாவதாக ஒரு புதிய காரை வாங்கினார் ஆல்யா. கியா கார்னிவல் லிமோசின் காரை அவர்கள் வாங்கியிருந்தனர். அதன் விலை ரூ 40 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆல்யாவை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பேர் பின்தொடர்வை கொண்டாடும் விதமாக சஞ்சீவ் 3 மில்லியன் அதாவது ரூ 30 லட்சத்தில் ஒரு கூபர் காரை வாங்கி ஆல்யாவுக்கு பரிசளித்தார்.

ஆண் குழந்தை
பின்னர் ஆல்யாவுக்கு ராஜா ராணி சீரியல் 2வில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. இதையடுத்து அந்த வாய்ப்பை ஏற்றார். இந்த நிலையில் இரண்டாவதாக ஆல்யா கர்ப்பமானார். இதனால் அவர் ராஜா ராணி 2விலிருந்து விலகினார். இந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அர்ஷ் என பெயரிட்டுள்ளார்கள்.

சஞ்சீவ்
இந்த நிலையில் சஞ்சீவி ஏற்கெனவே வைத்திருந்த மெர்சிடிஸ் சி கிளாஸ் எனும் காரை தனது சகோதரருக்கு பரிசாக கொடுத்துள்ளார். அதே போல் அண்மையில் வாங்கிய கூபர் காரை விற்றுவிட்டனராம். தற்போது மகன் பிறந்த நிலையில் புதிதாக ஒரு காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 2019, 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் புதிய கார்களை ஆல்யா ஜோடி வாங்கியுள்ளனராம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications