சிக்குன்னு உடம்பைக் குறைச்சு "கச்சிதமாக" திரும்பிய ஆலியா
சென்னை: திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் ஆளே மாறிப் போய் உருவத்தில் உரு மாறிப் போகிறார்கள். ஆலியா மானசா இந்த விஷயத்தில் ரொம்ப கெட்டி.
எப்படி மாறினாலும் தன்னால் பழையபடி வரமுடியும் என்று ரசிகர்களுக்கு மோட்டிவேஷன் கொடுக்கும் விதமாக ஒரு மாதத்திற்குள் உடம்பை குறைத்து கச்சிதமாக பழைய செம்பாவாக திரும்ப வந்திருக்கிறார் ஆலியா மானசா.
பழையபடி ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ராஜா ராணி சீரியல்
விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக செம்பா கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டவர் தான் ஆலியா மானசா. இந்த சீரியலை பார்த்து பல இளைஞர்களும் கூட இந்த மாதிரி பொண்ணு கிடைக்க வேண்டும் என்று ஏங்கித் தவித்தனர். அந்த அளவிற்கு அழகால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். அதுமட்டுமல்லாமல் சீரியலின் கேரக்டரும் அப்படித்தான் அமைந்தது.

காதல்
இந்த சீரியலில் பல சீரியல்களை போலத்தான் இதுவும் கதை இருந்தாலும் இவருக்கும் அந்த சீரியலில் கதாநாயகன் சஞ்சீவுக்கும் ஜோடிப் பொருத்தமும் பக்காவாக இருந்தது. அதனாலேயே பல ரசிகர்களும் இவர்கள் இருவரையும் ஜோடிப்பொருத்தம் அழகாக இருக்கிறது கல்யாணம் எப்போது என்று கேட்டு வந்தனர். இவர்கள் இருவரும் முதலில் நண்பர்களாக பழகி வந்தனர்.

மனசுக்குள் புகுந்து
பின்பு படிப்படியாக காதலர்களாக மாறி திருமணமும் செய்துகொண்டு தற்போது ஒரு குழந்தைக்கும் பெற்றோர்களாக மாறிவிட்டனர் .ஒன்றாக நடிப்பவர்கள் திருமணம் செய்து கொள்பவர்கள் புதியதாக அல்ல இருந்தாலும் பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு அதுவும் ஒரு குழந்தை பிறந்த பிறகு உருவமே மாறி மீண்டும் சீரியலுக்கு திரைப்படங்களுக்கு வருவது இல்லாமல் நின்று விடுகிறார்கள்.

செம்பா ரிட்டர்ன்
ஆனால் இவர் மீண்டும் அதே பழைய செம்பாவாக மாறி இருக்கிறார். ஒரு மாதத்திற்குள் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு உடம்பை குறைத்தார் என்பதையும் சில வீடியோக்களில் ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். இந்த வீடியோக்களை பார்த்ததும் பலர் உடம்பை குறைக்க வேண்டும் என்று எண்ணி கொண்டிருப்பவர்களுக்கு இந்த வீடியோ மோட்டிவேஷனல் ஆக இருக்கிறதாம்.

போட்டோஷூட்
மீண்டும் நடிக்க வந்தாலும் தனது குழந்தையின் மீது அதிக பாசம் வைத்திருக்கும் இவர்கள் இருவரும் அடிக்கடி குழந்தையுடனும் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்கள். தற்போதுகூட தீபாவளிக்கு இவர்கள் எடுத்த போட்டோக்களும் வீடியோக்களும் வைரலாக பரவி வருகிறது.
தற்போது சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலிலும் ஆலியா மானசா ராஜா-ராணி-சீரியல் இரண்டாம் பாகத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

செம டான்ஸ்
இருந்தாலும் தற்போது அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து திருமணம் முடியவும் செய்துவிட்டது ஆனாலும் அந்த சீரியலின் திருமண காஸ்ட்யூமில் இவர் ஆடிய கலக்கலான டான்ஸ் வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதுவும் கல்யாண கோலத்தில் இவர் எடுத்த போட்டோக்களும் வைரலாகி வருகிறது. இவருடைய போட்டோக்களை பார்த்து இவருடைய ரசிகர்கள் இவரிடம் எப்படி உடம்பை குறைத்தீர்கள் என்றுதான் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

சூப்பரா குறைச்சுட்டீங்களே
அவரும் அதற்கு பதிலை கூறி கொண்டுதான் வருகிறார். பிறகு குழந்தை பிறந்ததும் தற்போது மீண்டும் நடிகைகள் நடிக்க தொடங்கிவிட்டார்கள். மைனா நந்தினி ஆக இருந்தாலும் சரி பாண்டியன் ஸ்டோர் ஹேமா வாக இருந்தாலும் சரி ஆனால் இவர் அவர்களை எல்லாம் தாண்டி வேற ரகம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.. உண்மையில் ஆலியாவை பாராட்டியே ஆக வேண்டும்தான்.


Click it and Unblock the Notifications
