வாவ் டிஃபரன்ட் லுக்கில் ஆல்யா மானஸா.. என்ன விசேஷம்? அதிலும் அம்மணி எங்க போயிருக்காருனு தெரியுங்களா?
சென்னை: சீரியல் நடிகை ஆலியா மானஸா வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜா ராணி சீரியலில் நடித்தவர் ஆல்யா மானசா. இவருடன் நடித்த சஞ்சீவை காதலித்து கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் ராஜா ராணி சீரியல் 2 வில் நடித்து வந்த ஆல்யா, 2ஆவது முறையாக கர்ப்பம் தரித்தார். இதையடுத்து அவர் நிறைமாதமாக இருக்கும் போது அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

குழந்தை
இதையடுத்து அவருக்கு கடந்த மார்ச் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அர்ஷ் என பெயர் சூட்டியுள்ளார்கள். அண்மையில் கோத்தகிரிக்கு குழந்தைகளை அழைத்து கொண்டு சென்றிருந்தனர் ஆல்யா- சஞ்சீவ். பின்னர் பிளாக் தண்டர் போயிருந்த வீடியோவையும் தனது இன்ஸ்டாவில் அப்லோடு செய்திருந்தார்.

உடை, மேக்கப்
இந்த நிலையில் உடை, மேக்கப் சாதனங்கள், அணிகலன்கள் குறித்த ரிவ்யூ வழங்கி வரும் பணியையும் ஆல்யா செய்து வருகிறார். அவரது வீட்டுக்கு அனுப்பப்படும் சேம்பிள் பொருட்களை டிரை செய்து பார்த்து பின்னர் அந்த பொருளின் தரம் குறித்து விளக்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

தேனி
இந்த நிலையில் நேற்றைய தினம் தேனி சென்றிருந்த ஆல்யா மானசா, கோவைக்கும் சென்றுள்ளார். அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற அவர் பிரபல நிறுவனத்தின் சலூனுக்கு சென்றார். அங்கு தனது முடிக்கு கலரிங் செய்திருந்தார். இந்த கலரிங் செய்தவுடன் அவரது லுக் எந்த அளவுக்கு வித்தியாசமாக இருக்கிறது.

வாழ்த்து
புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள், அண்ணி, அக்கா சூப்பர் என வாழ்த்தி வருகிறார்கள். இரு குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் இவர் தற்போது நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். ஆனால் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். சஞ்சீவ் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications