கல்யாணம் பண்ணாமயே இருந்திருக்கலாம்.. விரக்தியில் ஆலியா... ஷாக்கான சஞ்சீவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரையில் அறிமுகமாகி அந்த சீரியலில் பட்டையை கிளப்பி முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த ஆல்யா சஞ்சீவ் ஜோடி தற்போது மீண்டும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள்.

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக புகழின் உச்சிக்கு போன இவர்கள் இருவரும் சீரியல்களில் லவ் பண்ணுவது போலவே நிஜத்திலும் லவ் பண்ணி ரொம்பவும் கஷ்டப்பட்டு திருமணத்தையும் முடித்திருந்தார்கள்.

இருவர் வீட்டிலும் வேறு காஸ்ட் என்பதால் சம்பாதிக்காமல் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் இவர்கள் காதலில் உறுதியாக இருந்து வெற்றியும் அடைந்து இருக்கிறார்கள்.

 தொடரும் சீரியல் நடிப்பு

தொடரும் சீரியல் நடிப்பு

திருமணத்திற்கு பிறகும் இந்த சீரியலில் இவர்கள் இருவரும் நடித்துக் கொண்டிருந்தார்கள். இந்த சீரியல் முடிவடைந்ததும் இருவரும் அதே விஜய் டிவியில் வேறு வேறு நிகழ்ச்சியில் நடிக்கலாம் என்று இவருடைய டைரக்டர் சொல்லியதால் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் ஆலியா கர்ப்பமாக இருந்திருக்கிறார்.

 காற்றின் மொழி

காற்றின் மொழி

அந்த நேரத்தில் சஞ்சீவ் ராஜா ராணி தொடர்ந்து காற்றின்மொழி சீரியலில் நடிக்க தொடங்கிவிட்டார். ஆலியாவும் வேறு சீரியலில் நடிப்பதற்காக ஒர்க் அவுட் பண்ணிக் கொண்டிருக்கும்போது இந்த சந்தோசமான நிகழ்ச்சி நடந்து இருக்கிறது. இருவரும் தங்களுக்கு கடவுள் கொடுத்த வரமாக குழந்தையை பெற்றெடுக்க விரும்பி ஆலியா தொடர்ந்து நடிப்பதை தள்ளி வைத்திருக்கிறார்.

 அயிலா குட்டி

அயிலா குட்டி

தன்னுடைய குழந்தையை கவனமுடன் பெற்றெடுப்பதில் முழு நேரத்தையும் செலவிட்டு இருக்கிறார். தற்போது இவர்களுக்கு அயிலா என்ற அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களிருவரும் இந்த பெண் குழந்தையை அவ்வளவு பாசமாக பார்த்து வளர்த்து வருகிறார்கள். அந்த குட்டி பாப்பா இப்போ கண்களை பார்த்து நன்றாக சிரிப்பதற்கும் சைகைகளை புரிந்து கொள்வதற்கும் ஆரம்பித்திருக்கிறது. பாப்பா பிறந்து 5 மாதத்தில் ஆலியா தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகளை தேட ஆரம்பித்து விட்டார்.

 மீண்டும் நடிக்க வரும் ஆலியா

மீண்டும் நடிக்க வரும் ஆலியா

இந்த நிலையில் இணையதளத்தில் தான் மீண்டும் விஜய் டிவியில் நடிக்கப்போவதாக ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து இருந்தார் .இதைத் தொடர்ந்து ரசிகர்கள் இவர் எந்த சீரியலில் நடிக்கப்போகிறார் என்று காத்து இருக்கின்றனர். புது சீரியலுக்கு சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் .இது போதாதென்று தன்னுடைய மகளுடனும் இருவரும் போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணி வருகிறார்கள்.

 செம என்ஜாய்தான்

செம என்ஜாய்தான்

இதைப்பார்த்த இவர்கள் இருவரின் ரசிகர்களும் கமெண்ட்களையும் லைக்குகளையும் வாரி வழங்கி வருகிறார்கள். இந்த லாக்டோன் டைம் ல யும் இவர்கள் என்ஜாய் பண்ணி கொண்டுதான் இருக்கிறார்களாம். அதுவும் சஞ்சீவ் தான் ரொம்பவும் என்ஜாய் பண்ணி இருக்கிறாராம் .ஆல்யாவை காதலிக்கும் போது அவர் கூடவே இருக்க மாட்டார். ஆனால் தற்போது கூடவே இருக்கிறார் மேலும் ஒரு குட்டிப் பாப்பாவும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்று ரொம்பவும் சந்தோஷப் பட்டிருக்கிறார்.

 பெரும் மகிழ்ச்சி

பெரும் மகிழ்ச்சி

இவர்களுடன் நேரத்தை செலவழிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறதாம். அதுமட்டுமில்லாது இவருக்கு வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ரொம்ப பிடிக்குமாம் அவங்க வீட்டை எப்பவும் துடைத்துக் கொண்டும் வீட்டில் அலங்காரங்களை ஏற்படுத்தி மாடலாக வைத்துக் கொள்வதிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறாராம். ஆனால் அவருக்கு எதிர்மறையாக ஆலியா வீட்டில் வேலை செய்வதற்கு கொஞ்சம் கள்ளத்தனம் பண்ணிக்கொண்டு இருப்பாராம்.

 டபாய்க்கிறாராம் ஆலியா

டபாய்க்கிறாராம் ஆலியா

அதுவும் எப்பவும் சாப்பிட்டுக்கொண்டு வீட்டில் வேலை செய்யாமல் இருக்கிறார் என்றும் சஞ்சய் கிண்டலடிக்கிறார். இவர்கள் இருவரும் இவ்வளவு சந்தோஷமாக இருக்கும்போது ஆலியா மட்டும் நான் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் ரொம்பவும் நல்லா இருந்திருக்கும் திருமணம் செய்ததால் நிறைய கமிட்மெண்ட் இருக்கிறது.

வெறுமனே காதலித்துக் கொண்டிருந்தால் ரொம்பவும் சந்தோஷமாக இருந்திருப்பேன் என்று சஞ்சீவைப் பார்த்து பதிலுக்குக் கிண்டலடிக்கிறார். இதை பார்த்த சஞ்சீவ் ஒரு நிமிடம் அப்படியே ஷாக் ஆகி விட்டார். இந்த வார்த்தை சற்றும் எதிர்பார்க்காமல் இவர் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இப்படித்தான் ஜாலியாகவும் கலகலப்பாகவும் சஞ்சீவ், ஆலியா கல்யாண வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+