இறங்கிக் குத்திய ஆலியா.. ஆத்தாடி.. வியந்து போன ரசிகர்கள்!
சென்னை: ஆலியா மானசா போட்ட குத்தாட்டம்தான் இப்போது இன்ஸ்டாகிராமை கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
பச்சை உடம்புக்காரி போடும் ஆட்டமா இது என்று அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போயுள்ளனர். அப்படி ஒரு அதகள ஆட்டமாக அது அமைந்திருக்கிறது..
ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மனதில் செம்பாவாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த ஆலியா மானசா போட்ட குத்தாட்டமும் அவர் மீண்டும் சின்னத்திரைக்கு வரப்போகும் நியூஸ் இணையதளத்தில் இப்போ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஆலியாவின் காதல்
சீரியல்களில் ஒன்றாக நடித்து பின்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்களில் செம்பா கார்த்திக். அதாங்க ராஜா-ராணி-சீரியல் மானசா சஞ்சீவ் இருவரும் செம்மையாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவங்களுக்கு பொக்கிஷமாக ஒரு குட்டி பாப்பா பிறந்திருக்கு.

மீண்டும் பழைய செம்பா
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இருவரும் குட்டி பாப்பாவுக்கு விதவிதமாக போட்டோக்கள் எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணி வருகிறார்கள்.
பாப்பாவின் அப்பா அம்மாவை பார்க்கும் ரசிகர்கள் திருஷ்டி சுத்தி போடுங்க அவ்வளவு அழகாய் இருக்கிறது ஃபேமிலி என்று சொல்ற அளவு வைரலாக பரவிக் கொண்டு வருகிறார்கள். ஆல்யா மானசா கன்சீவ் ஆக இருந்த டைம்ல நல்ல புசுபுசுன்னு மாறிவிட்டார் . இப்போ குழந்தை பிறந்த பிறகு மறுபடியும் பழைய செம்பா வாக மாறிவிட்டார்.

ஆக்டிவ் போட்டோக்கள்
அதுமட்டுமில்ல இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களுடன் போட்டோக்களை அப்லோட் பண்ணி ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை இணையதளத்தில் அப்லோட் பண்ணியதும் அவரது கணவரான சஞ்சீவ் முதல் ஆளாக அவருக்கு கமெண்ட் போட்டு விடுகிறார்.

சஞ்சீவ் மட்டும் ஆக்டிங்
இவ்வளவு ஆக்டிவாக இருக்கும் போது சஞ்சீவ் மட்டுமே ராஜா-ராணி-சீரியல் தொடர்ந்து காற்றின் மொழி என்னும் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். செம்பா மட்டும் இவ்வளவு நாளா நடிப்பை விட்டு இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் விஜய் டிவியில் நடிக்கப்போவதாக தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். அவர் மீண்டும் சீரியலுக்கு வருகிறார் என்ற செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் ஆனந்தம் அடைந்து கொண்டிருந்தார்கள்.

செம குத்து டான்ஸ்
இந்த சூழ்நிலையில் இணையதளத்தில் ஒரு பாட்டுக்கு செமையாக டான்ஸ் ஆடி பட்டையை கிளப்பி இருக்கிறார் .இதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் மழையை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டும் இல்ல விஜய் டிவி சீரியலுக்கு ஆக போட்டோ ஷூட் நடத்தி இருக்கு என்று சொன்ன ஆலியா சில புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

பாரதியின் காதலியாக மாறிய செம்மா
இதனை வரவேற்று ரசிகர்கள் கமெண்ட்கள் போட்டு இருக்கும்பட்சத்தில் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் இவரது போட்டோ அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது. அதில் பாரதியின் காதலி ஹேமாவாக இவரது போட்டோ அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதை பார்த்த கண்ணம்மா ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் தான் இருக்கிறார்கள். அப்படியே பழைய செம்பா, ஹேமா வாக மாறி மறுபடியும் சீரியலுக்கு வந்திருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications