அர்ஷ் யாரை போல் இருக்கிறார்?.. ரசிகர் கேள்விக்கு டக்கென பதில் அளித்த ஆல்யா மானசா! ரசிகர்கள் உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டாவதாக மகன் பிறந்த நிலையில் அவர் யாரை மாதிரி இருக்கிறார் என்ற கேள்விக்கு ஆல்யா மானசா சூப்பரான ஒரு பதிலை எழுப்பியுள்ளார்கள்.

ராஜா ராணி சீரியலில் சின்னய்யா சின்னய்யா என சஞ்சீவை அழைத்து அவருடன் ஜோடியாக நடித்தவர் ஆல்யா மானசா. இவர்கள் இருவருக்கும் சின்னத்திரையில் கெமிஸ்டிரி வொர்க்கானது போல் நிஜத்திலும் ஆனது.

இதையடுத்து இருவரும் காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து ஆல்யாவுக்கு ஐலா எனும் பெண் குழந்தை பிறந்தது.

ஓய்வு

ஓய்வு

இதற்கு அடுத்து சிறிது நாட்கள் ஓய்வு எடுத்த ஆல்யா மானசா ராஜா ராணி பார்ட் 2வில் நடித்து வந்தார். நடிகர் சித்துவுடன் சந்தியா எனும் கேரக்டரில் நடித்து வந்தார். அது போல் சஞ்சீவும் கயல் சீரியலில் பிஸியானார். ராஜா ராணி பார்ட் 2 சீரியல் சீரியஸாக போய் கொண்டிருந்தது.

ஆல்யா

ஆல்யா

இதனிடையே ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார். எனினும் அவரால் இயன்ற வரை நடித்தார். இதையடுத்து டெலிவரி நாள் நெருங்கிய போது அவர் சீரியலிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மாடல் அழகி ரியா அந்த சீரியலில் நடித்து வருகிறார்.

ஆல்யாவும் சஞ்சீவும்

ஆல்யாவும் சஞ்சீவும்

ஆல்யாவும் சஞ்சீவும் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பர். அது மட்டுமல்லாமல் ரசிகர்களோடும் அவ்வப்போது உரையாடுவர். அந்த வகையில் தங்களுக்கு இரண்டாவதாக பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்க போகிறீர்கள் என கேட்டனர்.

மகன் பிறந்தால்

மகன் பிறந்தால்

அதற்கு சஞ்சீவ் மகன் பிறந்தால் அர்ஷ் என்றும் மகள் பிறந்தால் ஒரு பெயரையும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சில நாட்களில் ஆல்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவருக்கு மகன் பிறந்தார். சஞ்சீவ் சொன்னபடி குழந்தைக்கு அர்ஷ் என பெயரிட்டார். இந்த நிலையில் ஆல்யா மீண்டும் ராஜா ராணி 2 வுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

ஆனால் அவரோ தன்னால் முடியாது என சொல்லிவிட்டார். இதையடுத்து ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர் அர்ஷ் யாரை மாதிரி இருக்கிறார் என கேள்வி எழுப்பினார்.

ஆல்யா பதில்

ஆல்யா பதில்


அதற்கு ஆல்யா, சந்தேகமே இல்லை என்னை மாதிரிதான் என் குழந்தை இருக்கிறது என்றார். ஐலா என்றால் நிலா வெளிச்சம் என்றும் அர்ஷ் என்றால் ஹீரோ என்றும் அர்த்தம் என்றார். அது போல் அவருக்கு சுக பிரசவமா இல்லை அறுவை சிகிச்சையா என்ற கேள்விக்கு அறுவை சிகிச்சை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+