"கொழுந்தனாருடன்" போட்ட குத்தாட்டம்.. கலகலக்கும் ஆலியா வீடியோ!
சென்னை: சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி பல நடிகைகள் ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது நீண்ட காலம் நீடிப்பதில்லை.
கொஞ்ச நாள் கழித்து திருமணம் முடிந்ததும் அம்மா ரோலில் மாமியார் ரோலில் நடிக்க வாய்ப்பு வந்துவிடுகிறது. ஆனால் இப்ப இருக்கிற நடிகைகள் அந்த மாதிரி எல்லாம் போகவில்லை.
எல்லாருமே அட்வான்ஸாக தான் இருக்கிறார்கள் . கல்யாணம் முடிஞ்சு குழந்தை பிறந்தாலும் நான் நடிச்சா ஹீரோயினி தான் என்று பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். அந்த மாதிரிதான் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக புகழின் உச்சிக்கு சென்ற ஆலியா மானசா தற்போது கலக்கி வருகிறார்.

செம கலக்கல்
சிலருக்கு முதல் சுற்றில் அந்தளவு எடுபடாது. இரண்டாம் சுற்றில் கலக்குவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் முதல் சுற்றிலும் பெருமளவில் கலக்கிவிட்டு இரண்டாம் சுற்றில் களம் இறங்கினாலும் எனக்கு ஈடு கொடுக்க யாருமில்லை என்று கலக்கி வருகிறார்கள் .அந்த மாதிரி தற்போது ஆலியா மானசாவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

செம்பா
முதல் சுற்றில் ராஜா ராணி செம்பா என்றாலே கிறங்கி போகும் அளவிற்கு ரசிகர்களை வசியப்படுத்தி வந்த இவர் அதன்பிறகு காதலித்து திருமணம் முடிந்தாலும் திருமணத்திற்கு பிறகும் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலும் முடிந்த பிறகு கொஞ்ச நாளில் நடிப்புக்கு பிரேக் விட்டிருந்தார்.

கல்யாணத்திற்குப் பிறகு அசத்தல்
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் களத்தில் குதித்திருக்கும் இவரைப் பார்த்து ரசிகர்களை அம்மாடி என்று வாயில் கை வைக்கும் அளவிற்கு வேற லெவல் கலக்கி வருகிறார்.. ஒரு மாதத்திற்குள் 10 கிலோ குறைத்து இளமை ததும்ப ததும்ப மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார் தற்போது ராஜா ராணி இரண்டு சீரியலிலும் கலக்கி வருகிறார்.

நாங்களும் கலக்குவோம்ல
அவர் ஒரு புறம் ஜொலிக்க அவரது கணவர் ஒருபுறம் காற்றின் மொழி சீரியலிலும் நடித்து வந்தாலும் ரசிகர்கள் இவர்கள் இருவருமே நன்றாக தான் ரசித்து வருகிறார்கள் .தற்போது இளம் கதாநாயகிகளை பொறாமைப்படும் அளவில் அழகாக உருவெடுத்து வந்தாலும் நானும் குமரி தான் என்று கலக்கலான ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு நிரூபித்து வருகிறார்.

கொழுந்தனாருடன் குத்தாட்டம்
இவர் செய்யும் சேட்டைகள் வீடியோக்களையும் இவரும் இவரது கணவரும் மாற்றி மாற்றி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணி வருகிறார்கள் .இதை பார்த்ததும் ரசிகர்கள் அடப்பாவமே இது ஆலியா மானசா எந்த அளவு இறங்கி குத்தி இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். தற்போது ராஜா ராணி 2 சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த சீரியலின் கொழுந்தனார் உடன் இவர் போட்ட ஆட்டம் தான் வைரலாக பரவி வருகிறது.

கலகலக்கும் நடனம்
இவரது டான்ஸ் வீடியோக்களை இவரது கணவர் வெளியிட்டதை பார்த்து பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். ஆனால் அதற்கு அவர் எதுவும் பதில் சொல்லவில்லை என்றாலும் ரசிகர்களே ஆலியாவுக்கு சப்போர்ட் பண்ணி வருகிறார்கள். அவரவர் திறமையை காட்டுகிறார் அதில் பார்க்கும் உங்கள் கண்களுக்கு என்னவாம் என்று ரிப்பீட் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

சூப்பரப்பு
குழந்தை பிறந்து கொஞ்ச நாளைக்குள் நடிக்க வந்தது மட்டுமல்லாமல் இந்த அளவிற்கு குத்து குத்தி ஆட்டம் போட்டிருக்கிறார். இவருடைய ஆட்டத்தை பார்த்து கல்யாணத்துக்கு முன்னாடி இருந்ததை விடவும் இப்பதான் செமையா பண்ணுகிறீர்கள் என்று ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். சும்மா சொல்லக் கூடாது.. நல்லாவே ஆடியிருக்கிறார் ஆலியா.


Click it and Unblock the Notifications
