எதிர்ப்புகளை கடந்து.. 25வது நாளில், அமரன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? சிவகார்த்திகேயன் மாஸ்
சென்னை: தமிழ் சினிமாவில் அரிதாக காண கிடைக்கும் ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவான ஒரு படம் 'அமரன்'. இந்தப் படம் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதி வீர மரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த, ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை நெஞ்சை உருக்கும் வகையில் சித்தரித்தது.
இந்த திரைப்படத்தில், காஷ்மீரிலுள்ள மக்களில் சிலர், தீவிரவாதிகளுக்கு உடந்தையாக செயல்படுவதாக காட்டப்பட்டது. இதை எஸ்டிபிஐ போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. இதனிடையே அமரன் திரையிடப்பட்ட, நெல்லை அலங்கார் திரையரங்கில் ஆளில்லாத நேரத்தில் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது யூசுப் ரசின் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டம் மட்டுமின்றி, மத நல்லிணக்கத்துக்கு பாதக செயல் என்ற பிரிவும் சேர்க்கப்பட்டது. தற்போது அவர் சிறையிலுள்ளார். இதனால் சற்று பதற்றம் ஏற்பட்ட போதிலும், அமரன் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என்பது ரிப்போர்ட்டில் தெரியவருகிறது.
இந்தப் படம், வெளியான முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து 10 நாட்களில் ரூ. 200 கோடியையும், 20 நாட்களில் ரூ. 300 கோடியையும் கடந்து சாதனை படைத்தது. தற்போது, 25 நாட்களைக் கடந்த நிலையில், அமரன் படம் உலகளவில் ரூ. 314 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம், படக்குழுவினர் ரூ. 85 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமரனுக்கு பிறகு வெளியான கங்குவா திரைப்படம் அனைத்து பிரிவு ரசிகர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால் பல தியேட்டர்களில் அமரன் திரையிடும் காட்சி அதிகரிக்கப்பட்டு, கங்குவா படம் தூக்கப்பட்டுள்ளதும் வசூல் வளர்ச்சிக்கு ஒரு காரணம்.
சிவகார்த்திகேயன், இதற்கு முன்பு காமெடி கலந்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால், 'அமரன்' படத்தில் அவர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ராணுவ வீரராக அவரது தோற்றம், உடல்மொழி மற்றும் நடிப்பு அனைத்தும் பாராட்டப்பட்டது.

சாய் பல்லவி, முகுந்தின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸாக நடித்திருந்தார். அவரது அழகான தோற்றம், இயல்பான நடிப்பு மற்றும் கண்களில் பேசும் காதல் ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்தது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் நிறுவனம் ராஜ்கமல் பிக்சர்ஸ் தயாரித்தது. தயாரிப்பு மதிப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. படத்தின் ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன.
'அமரன்' படம் ஒரு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் உணர்வுபூர்வமாக சொல்லியது. இது ஒரு வீரனுக்கு அஞ்சலி மட்டுமல்லாமல், நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்யும் ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுபடுத்துகிறது. தேசப்பற்று பிளஸ் குடும்ப சென்டிமென்ட் ஆகியவை இணைந்து அமரன் திரைப்படத்தை, வேட்டையனை விட அதிகம் வசூலித்த படமாகவும், சிவகார்த்திகேயனின் முதலாவது 300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய படமாகவும் மாற்றியுள்ளது.
சரி, உங்களுக்கு படம் பிடித்திருந்ததா, இல்லையா?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications