Amaran OTT: ஒரே வாரத்தில் வசூலில் கெத்து காட்டும் "அமரன்".. எந்த ஓடிடியில், எப்போது ரிலீஸ்னு பாருங்க
சென்னை: சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.. இந்த படம் திரையரங்குகளில் இன்னும் சில வாரங்கள் ஓடும் என்றாலும், ஓடிடிக்கு எப்போது வரும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு, எடுக்கப்பட்டுள்ள படம்தான் அமரன்.

காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவப் படை வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.. முகுந்த்தாக சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.. ராஜ்குமார் பெரிய சாமி டைரக்ஷனில் உருவாக்கப்பட்டுள்ள, இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்...
எதிர்பார்ப்பு: இது நம்முடைய ராணுவ வீரரின் உண்மைக்கதை என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு படப்பிடிப்பு நாட்களிலிருந்தே ரசிகர்களுக்கு ஏற்பட்டு வந்தது..
ஒரு பக்கம் தேசப்பற்று, மறுபக்கம் உருகவைக்கும் காதல் என மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்... சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவியும் சேர்ந்து, தங்களது நடிப்பில் ஒட்டுமொத்த மக்களையும் கட்டிப்போட்டிருப்பதாக விமர்சனங்களும் பதிவாகி வருகின்றன.
அமரன் படம்: தீபாவளியன்று வெளியாகி, முதல் 4 நாட்களிலேயே 150 கோடி ரூபாய் வசூலை அசால்ட்டாக தொட்டுவிட்டது அமரன் படம். ஆனால், இந்தப்படம் வெளியாகும் முன்பே ப்ரீ புக்கிங்கில், அதற்கு மேல் வசூலில் திரும்பி பார்க்க வைத்தது.. தமிழகத்தில் மட்டும் தினம் தினம் 8 கோடிக்கு மேல் வசூலை பெற்று, இதுவரை ரூ. 80 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்திய அளவில் 5 நாட்களில் 93.35 கோடியும், உலகளவில் 100 கோடியைக் கடந்து 140.6 கோடி ரூபாயும் வசூலை எட்டிவிட்டதாம்.

அதுமட்டுமல்ல, நாடு முழுவதும் சுமார் 1000 முதல் 1200 தியேட்டர்களில், அமரன் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாம்... எமோஷனல் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளதே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
ஓடிடி ரிலீஸ்: 'அமரன்' மற்றும் 'லக்கி பாஸ்கர்' படங்களின் ஓடிடி குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டு படங்களும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியினை நெட்பிளிக்ஸ் தளம் வெளியிடும் என தெரிகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு, நல்ல படம் பார்த்த உணர்வை அந்த படம் கொடுத்துள்ளதாக, அனைத்து மீடியாக்களுமே பாசிட்டிவ் கருத்துக்களை சொல்லி வருவது, படத்தை பார்க்காதவர்களுக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தி கொண்டிருக்கிறது. எனவே, இந்த படம் ஓடிடிக்கு எப்போது வரும்? எந்த ஓடிடி தளத்தில் வெளியாக போகிறது? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இதுகுறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
எப்போது வெளியீடு: அமரன் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றிருக்கிறதாம்.. இன்னும் சில வாரங்களில் அதாவது டிசம்பர் முதல் அல்லது 2து வாரத்தில் இந்த படம் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்னவே லக்கி பாஸ்கர் படத்தையும், Netflix ஓடிடி தளம் தான் வெளியிட இருக்கிறது.. இப்போது அமரன் படத்தையும் நெட்ஃபிளிக்ஸ் பெற்றிருக்கிறது.. விடுமுறை கொண்டாட்டத்தை குறி வைத்து இந்த 2 படங்களையும் நெட்ஃபிளிக்ஸ் களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications