Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம்பட்டி ரங்கராஜுக்கு கல்யாணமா? இந்த விஐபி-யை காதலிக்கிறாரா? இவர் சொல்றது நிஜமா? ஒன்னும் புரியலயே

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, கிரிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொள்வார் என பேச்சு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக அடிபட்டு வருவதாக, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சேனல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு மனைவி ஸ்ருதியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 2 பேரும் விவாகரத்து செய்ய போவதாகவும் தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், திடீரென புது சர்ச்சை ஒன்று ரங்கராஜை சுற்றி கிளம்பியிருக்கிறது.
சலசலப்பை உண்டுபண்ணிய பதிவு

Television Madhampatti Rangaraj Cook

அதாவது, பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "காதலர் தினத்தை மாதம்பட்டி ரங்கராஜுடன் கொண்டாடினேன், அவர் எனக்கு பூ வாங்கி தந்தார்" என்றும் பதிவிட்டிருந்தார்..

அத்துடன் தன்னுடைய பெயரை "ஜாய் ரங்கராஜ்" என்றும் எழுதிய போட்டோவை ஷேர் செய்திருந்தார்.. இதைப்பார்த்ததுமே, பலரும் இவர்கள் 2 பேரும் காதலிக்கிறார்களா? என்று சந்தேகத்துடன் கேள்விகளை கேட்க துவங்கியிருக்கிறார்கள்.

பெரிய பெரிய விசேஷங்கள்

அதுமட்டுமல்ல, மாதம்பட்டி ரங்கராஜுக்கு, ஆடை வடிவமைப்பாளராக ஜாய் கிரிஸில்டா பணியாற்றி வருகிறாராம்.. இவர்தான், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும், மாதம்பட்டிக்கு ஆடைகளை வடிவமைத்திருந்தாராம்.. அப்போது ஏற்பட்ட நட்பு, இப்போது காதலாக மாறியிருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், பெரிய மனிதர்கள், பெரிய சமையல்காரர்களை அழைத்து விருந்து படைக்க சொல்வார்கள்.. அதில், மாதம்பட்டி ரங்கராஜ் இன்று ஃபேமஸாக இருக்கிறார்.. பொதுவிழாக்கள், கல்யாணம், பூப்பெய்தல், உள்ளிட்ட விழாக்கள் என பெரிய பெரிய வீட்டு விசேஷங்களில் இவர்தான் சமையல் விருந்து உபசரிப்பு.

விருந்து உபசரிப்பு - பத்திரிகையில் பெயர்

பத்திரிகைகளிலேயே விருந்து உபசரிப்பு- மாதம்பட்டி ரங்கராஜ் என்றுதான் போடுகிறார்கள். டைரக்டர் சங்கர் மகள் திருமண வரவேற்பிற்கும் மாதம்பட்டி ரங்கராஜ்தான் திருமண உபசரிப்பு செய்திருந்தார்..

இவர் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்.. கோவையை சேர்ந்தவர். மெஹந்தி சர்க்கஸ் படத்தில் இவர் ஹீரோவாக அறிமுகமானார்.. ஆனால், அந்த படம் பெரிய அளவில் சக்ஸஸ் ஆகவில்லை. ஆனால், நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தார்.

அதற்கு பிறகு ஒரு படம் நடித்தார்.. அது ஓடவில்லை.. இதற்கு பிறகு, இந்த நடிகைதான் வேண்டும் என்று கெத்து காட்டியதால், அடுத்த படத்திலிருந்து தூக்கப்பட்டார்.

நிலுவையில் உள்ளது வழக்கு

மாதம்பட்டி ரங்கராஜ், கோவையை சேர்ந்த ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்தவர்.. ஸ்ருதி, திமுக மகளிர் அணி செயலாளராக பணியாற்றியவர்.. சமூக சேவையும், சமூக விழிப்புணர்வுகளையும் செய்து வருகிறார்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்..

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஸ்ருதியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.. விவாகரத்துக்கான மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், குடும்ப கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

விரைவில் 2வது திருமணம்?

ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் சினிமாவில் அதிகம் பழகியதன் காரணமாக, நிறைய பெண்களின் தெடர்பு ஏற்பட்டுள்ளது.. அந்தவகையில், விதவை மற்றும் கணவனை விவாகரத்து செய்தவர்கள் உள்ளிட்டவர்களுடன் நட்பு கொண்டிருந்தார்.

தற்போது காஸ்ட்யூம் டிசைனர் கிரிஸில்டாவை காதலித்து வருகிறார். இவருடன்தான், வெளிநிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.. My Women என்றும் கிரிஸில்டாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.. எனவே, மனைவியுடன் விவாகரத்து முடிந்ததும், கிரிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொள்வார் என பேச்சு அடிபட்டு வருகிறது" என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+