பிரபல நடிகை சாலையோரத்தில் புரண்டு கிடந்த கோலம்.. மோசமான நிலைமையில் மீட்ட போலீஸ்.. யார்னு தெரியுமா?
சென்னை: பிரபல நடிகை சாலையோரத்தில் மோசமான நிலைமையில் கிடந்துள்ளார்.. கடுமையான அழுத்தத்திற்கும் ஆளாகியிருக்கிறார்.. சற்று மனரீதியான பாதிப்புக்கும் ஆளாகியிருக்கிறார்.. இத்தனை காலம் இந்த நடிகை எங்கிருந்தார்? என்றே தெரியாத நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.. சாலையோரத்தில் நிலைகுலைந்த நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.. தற்போது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு, சிகிச்சையும் தர முடிவாகியிருக்கிறது. இதைக்கேள்விப்பட்டு சக நடிகர் நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர்.. யாரிந்த நடிகை? மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, இந்த நடிகை பற்றி சொல்வதென்ன?
மேற்கு வங்காளம் மாநிலம் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ளது அமிலா பஜார் என்ற பகுதி.. இங்கு கருப்பு சட்டை,ஷார்ட்ஸ் அணிந்து ரோட்டோரத்தில் ஒரு பெண் அமர்ந்திருந்தார்..

நான் ஒரு நடிகை
கையில் பேனா வைத்து கொண்டு, ஆங்கிலத்திலும், பெங்காலியிலும், "நான் ஒரு நடிகை" என்று திரும்ப திரும்ப தனக்குள் சொல்லிக் கொண்டேயிருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கருதி பலரும் அவரை கடந்து சென்றுவிட்டனர்.. ஒருசிலர் அவர் நிஜமாகவே நடிகையா என்று கூகுளில் தேடினார்கள்.
அப்போதுதான், அதேபெண் ராயல் லுக்கில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்... பிரபல முன்னாள் பெங்காலி நடிகை சுமி ஹர் சவுத்ரி என்பது தெரியவந்தது..
இவர் ஒரு காலத்தில் டிவி சீரியல்களிலும் முன்னணி நடிகையாக இருந்தவர்..
டிவி பிரபலம்
'த்விதியோ புருஷ்' (Dwitiyo Purush) என்ற க்ரைம் படத்தில் நடித்து புகழ் பெற்றவர்.. பாலிவுட் ஸ்டார் நசீருதீன் ஷாவுடனும் நடித்து அசத்தியவர்.. 'காஷி கதா: எ கோட் சாகா' என்ற படங்களிலும், ருப்சகோர் மோனர் மனுஷ், துமி ஆஷே பாஷே தக்லே போன்ற பிரபலமான சீரியல்களிலும் முன்னணி ஹீரோயினாக நடித்தவர். இதனால், டிவி சீரியல்களில் இவருக்கென மக்கள் கூட்டம் தனியே உண்டு..
அன்றைய காலத்தில் வருடக்கணக்கில் ஓடிய சீரியல்களிலும் நடித்து பட்டிதொட்டியெங்கும் பெயர் வாங்கியவர். ஒருகட்டத்தில் சினிமா, டிவியில் பிசியாக இருந்துவிட்டு, பிறகு விலகிவிட்டார்.. அதற்கு பிறகு என்ன ஆனார் என்றே தெரியாத நிலையில், மேற்குவங்காளத்தின் தெருக்களில் தற்போது சுற்றி வருவது தெரியவந்துள்ளது..
விசாரணை தீவிரம்
இந்த விவரம் அறிந்ததுமே, சிலர் நேற்று முன்திம் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.. போலீசாரும் விரைந்து வந்து, நடிகையை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. கொல்கத்தாவின் பெஹாலா பகுதியைச் சேர்ந்தவர், இந்த பகுதிக்கு எப்படி? ஏன் வந்தார்? ஏனிந்த நிலைமை என்று தெரியவில்லை.. நடிகையிடம் விசாரித்தாலும், அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. அதனால், அவரது உறவினர்கள், குடும்பத்தினரை தேடி வருகிறார்கள்.
நடிகையை இந்த கோலத்தில் பார்த்ததுமே , அவருடன் நடித்த சக நடிகர், நடிகைகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்..
ஆங்கிலம் - பெங்காலி
இந்நிலையில் ,Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "கொல்கத்தாவின் புறநகர் பகுதியில், தனக்குதானே இந்த நடிகை ரோட்டில் பேசிக் கொண்டிருந்தார்..ஆனால், அவரது உச்சரிப்பு சரியாக இல்லை.. ஆங்கிலம், பெங்கால் மொழியில் அரைகுறையாக பேசினார்..
கையிலிருந்த நோட்டில், Actress, actress என்று கிறுக்கினார்.. பிறகுதான் இவர் பிரபல நடிகை சுமி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.. இதை கண்டுபிடித்தது அங்கிருந்த 3 இளைஞர்கள்தான்.. உடம்பில் சின்ன சின்ன காயங்கள் இருக்கிறதாம்.. மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது..
எனவே, மகளிர் அமைப்பை சேர்ந்த பெண்மணி ஒருவர், சுமியிடம் பேச்சு தந்தபோதுதான், குடும்ப தோல்வி, காதல் தோல்வி, தன்னை சுற்றியுள்ளவர்கள் ஏமாற்றியது, என அரைகுறையாக சுமி சொல்லியிருக்கிறார்..
மகளிர் அமைப்பினர்
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மகளிர் அமைப்பை சேர்ந்த அந்த பெண், கடுமையான மன அழுத்தத்திற்கு சுமி ஆளாகியிருக்கிறார்.. சுமிக்கு கட்டாயமாக சிகிச்சை தர வேண்டியிருக்கிறது என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது... சுமிக்கு கவுன்சிலிங் தந்தபிறகுதான், அவரது பிரச்சனைகளை கேட்டறிந்து, அவரது குடும்பத்திடமும் பத்திரமாய் கொண்டுபோய் சேர்க்க வேண்டியிருக்கிறது" என்கிறார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications