OTT ரொம்பப் பிடிச்ச தளம் இதுதானாம்.. மக்களே அடிச்சுச் சொல்லிட்டாங்க பாருங்க
சென்னை: இது கொரோனா காலம் மட்டுமல்லிங்க.. ஓட்டி காலமும் கூட. எந்த வீட்டைப் பார்த்தாலும் ஓடிடியில் ஏதாவது ஒரு படம் ஓடிக் கொண்டே இருக்கிறது.
முன்பெல்லாம் டிவி சீரியலில் மூழ்கிக் கிடந்தார்கள் மக்கள். குறிப்பாக பெண்கள். நமக்கெல்லாம் அதுதான் விடிவு காலமாக இருந்தது என்று கூட சொல்லலாம். சமையல் செய்து கொண்டே ரோஜாவையும், தாமரையையும் ரசித்துக் கிடந்தார்கள் நம்ம வீட்டுப் பெண்கள். ஆனால் கொரோனா வந்து அவர்களது பொழுதுபோக்கில் மண்ணைப் போட்டு விட்டது.
இதையடுத்து மக்கள் இப்போது ஓடிடிக்குத் தாவி விட்டனர். அதுதான் இப்போது சிறந்த பொழுதுபோக்காக மக்களுக்கு உள்ளது. அதற்குக் காரணமும் உள்ளது. பழைய தொடர்களையும் பார்க்கலாம். புதுத் தொடர்களையும் பார்க்கலாம். பல மொழிப் படங்களைப் பார்க்கலாம். திரும்பத் திரும்பப் பார்க்கலாம். மாதம் குறைந்த கட்டணத்தில்.

அமேஸான் முதலிடம்
இப்படிப்பட்ட நிலையில் ஓடிடிதான் அனைவருக்கும் நல்ல பொழுது போக்கு அம்சமாக மாறியுள்ளது. சரி எந்த ஓடிடி தளம் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது என்பதை அறிய நமது தளத்திலேயே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினோம். அதற்குக் கிடைத்துள்ள விடைதான் இது. தமிழக மக்களைப் பொறுத்தவரை அமேஸான் பிரைம் ஓடிடி தளம்தான் ரொம்ப பாப்புலராக உள்ளது. காரணம் அதில் விதம் விதமான படங்கள், கிடைப்பதுதான். நமது வாசகர்களும் 46.94 சதவீத அளவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நெட்பிளிக்ஸ் 2வது இடம்
இரண்டாவது இடத்தில் நெட்பிளிக்ஸ் வருகிறது. இதற்கு கிடைத்துள்ள ஆதரவு 28.68 சதவீதம் ஆகும். நெட்பிளிக்ஸில் நிறைய ஆங்கிலப் படங்கள், ஆங்கிலத் தொடர்களைப் பார்க்க முடியும் அமேஸானுக்கு சரியான போட்டியாக நெட்பிளிக்ஸ் இருக்கிறது. அதன் ரீச் இன்னும் அதிகம் என்றாலும் கூட அமேஸான் உள்ளூர் படங்களை அதிகம் வைத்திருப்பதால் அதற்கு மவுசு கூடிப் போய் விட்டது. குறிப்பாக பொன்மகள் வந்தால் படம் மூலம் அமேஸான் மேலும் பாப்புலராகியுள்ளது.

சன் நெக்ஸ்ட் 3வது இடம்
சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு 8..88 சதவீத ஆதரவுடன் 3வது இடம் கிடைத்துள்ளது. சன் மூவிஸ் தயாரிப்புப் படங்கள்தான் இதில் அதிகம் இருக்கும். அதேசமயம்,சன் குழுமத்தின் அனைத்து பிரபல நிகழ்ச்சிகளையும் இதில் பார்க்க முடிகிறது என்பதால் 3வது இடத்தை மக்கள் கொடுத்துள்ளனர். சன் டிவியின் பிரபலமான சீரியல்கள் பலவற்றையும் இதில் பார்க்க முடிவது இன்னொரு சிறப்பு.

எம்எக்ஸ் பிளேயர்
டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திற்கு 6.67% ஆதரவு கிடைத்துள்ளது. இன்னொரு பிரபல ஓடிடி தளமான எம்எக்ஸ் பிளேயருக்கு 4.25% சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இந்த தளம் வேறு லெவலுக்குப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டியில் பின் தங்கி நிற்கிறது. வூட் தளத்திற்கு 1.1% ஆதரவும், ZEE5 தளத்திற்கு 3.47% ஆதரவும் கிடைத்துள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications