Web Series: வம்சம்ல ரம்யா கிருஷ்ணனுக்கே இப்போதான் கல்யாணம் ஆச்சு!
சென்னை: ZEE5 Originals இயங்கு தளத்தில் அமெரிக்கா மாப்பிள்ளை என்று ஒரு வெப் சீரிஸ். அதில் நாயகனுக்கு கல்யாணம் செய்துக்கொள்ள விருப்பம் இருக்காது. இதற்கு அவனின் நண்பனும் உடந்தையாக இருக்கிறான்.
என்ன சொல்லியும் கேட்காத அப்பாவிடம், யாரை வைத்து கல்யாணம் வேண்டாம் என்று ஸ்ட்ராங்கா சொல்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறான்.அப்போதுதான் உடன் இருக்கும் நண்பன் ஒரு கடுப்பில் கேட்கிறான்...
கல்யாணத்துக்கு உனக்கு என்னடா அவசரம்? வம்சம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுக்கே இப்போதுதான் கல்யாணம் ஆச்சுன்னு சொல்றான்.

கிட்டி டெல்லி கணேஷ்
நடிகர் கிட்டிதான் நாயகனின் அப்பா...இவரின் நண்பர் டெல்லி கணேஷ். இருவரும் நன்றாக நடித்து இருக்கும் இந்த வெப் சீரீஸ், முக்கியமாக சொல்ல வேண்டுமே ன்றால் டீசன்ட்டாக இருக்கிறது. ஆங்கிலத்தில் சில கெட்ட வார்த்தைகளை ஹீரோ பேசுகிறார். அதுவும் கல்யாணம் வேண்டாம் என்கிற கடுப்பில்.

நடிகை காயத்ரி
விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் நடித்த காயத்ரி, இந்த வெப் சீரீஸில் நடித்து இருக்கார்.இந்த வெப் சீரீஸ் எடுக்கப்பட்ட காலக்கட்டத்தில் ஓரிரு படங்களில் நடித்து வந்தவர் என்பதால் அப்போது இந்த வெப் சீரீஸ் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

ரம்யா கிருஷ்ணன் வம்சம்
சன் டிவியில் தங்கம் சீரியலுக்குப் பிறகு, வம்சம் சீரியலில் நடித்துக்கொண்டு இருந்தார் நடிகை ரம்யா கிருஷணன். அப்போது ராதிகா சீரியல்கள், ரம்யா கிருஷ்ணன் சீரியல்களை வீட்டில் அனைவரும் ரசித்து பார்த்து வந்த காலக்கட்டம்...அதனால் ஹீரோ இது போன்ற வசனங்கள் சீரீஸில் பேசி இருப்பார்.

ஆரம்ப கால வெப்சீரீஸ்
அமெரிக்கா மாப்பிள்ளை வெப் சீரீஸ் ஆரம்ப காலத்தில் ஷூட் செய்யப்பட்டது என்பதால், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இல்லை. தவிர டெல்லி கணேஷ், கிட்டி என்று இரு பெரும் நடிகர்கள் நடித்து இருப்பதால தரமான வெப் சீரீஸாக இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications