அமிதாப் படமும் ஓடிடி இயங்கு தளத்திலா..? செம ஜாலி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் படமும் ஓடிடி இயங்கு தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் அமிதாப் தனது இன்ஸ்டா பக்கத்தில் 37 வருடங்களுக்கு முன் எடுத்த கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கார்.

Recommended Video

    OTT யால் சினிமா THEATER அழியாது | PRODUCER THANU |பொன்மகள் வந்தாள் MOVIE ISSUE | Oneindia Tamil

    சமூக ஊடகங்களில் பெரிதாக தனக்கு லைக்ஸ் குவியவில்லை என்று வருத்தமாக பதிவொன்றை இட்டு இருக்கார் அமிதாப். அப்போது ரசிகர்கள் நீங்கள் பிகினி உடை படம் பகிர்ந்தால் உங்களுக்கு லைக்ஸ் அள்ளும் என்று தெரிவித்து இருக்கின்றனர்.

    இதை அடுத்து அமிதாப் 37 வருடங்களுக்கு முன்னர் ஒரு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படத்தை பதிவிட்டு இப்போது லைக்ஸ் குவியுமா என்று கேட்டு இருக்கார். சமூக வலைத் தளத்தில் லைக்ஸ் வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் வரை சாமானியர்கள் வரை தங்களுக்கான முயற்சிகளை செய்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

     நகைச்சுவை படம்

    நகைச்சுவை படம்

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த படத்தைப் பார்த்து பலரும் சிரித்து தங்களது நகைச்சுவையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். பிக் பி என்கிற அவரது இன்ஸ்டா பக்கத்தில் அரைகுறை உடையிலான ஒரு படத்தை அமிதாப் வெளியிட்டு இருப்பது ரசிக்கவும், சிரிக்கவும் வைத்துள்ளது.

     பிகினி இல்லை

    பிகினி இல்லை

    இந்த உடை பிகினி இல்லை என்றும், அவர் தான் அணிந்து இருக்கும் உடையை பாரா ஹுவா கினி என்றும் குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படம் அவர் மூன்று வேடங்களில் நடித்த மஹான் திரைப்படத்தில் இருந்து வந்திருப்பதாகவும், படம் வெளியாகி 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும் இன்ஸ்டாவில் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் அமிதாப்..

     படங்கள் இருக்கின்றன

    படங்கள் இருக்கின்றன

    நடித்து முடித்து இருக்கும் படங்களும், நடிக்க வேண்டிய படங்களும் இருக்கின்றன என்று கூறி உள்ள அமிதாப், லாக்டவுனால் திட்டமிட்ட படங்கள் கிடப்பில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தனது படங்கள் காத்து இருப்பதாகத் தெரிவித்து இருக்கார் அமிதாப்.

     ஓடிடி இயங்கு தளம்

    ஓடிடி இயங்கு தளம்

    அமிதாப் பச்சன் தனது இரண்டு படங்கள் எல்லா பணிகளும் நிறைவடைந்து ரிலீசுக்காக காத்து இருக்கின்றன என்று தெரிவித்து இருப்பதை பார்த்து, இந்த படங்கள் இரண்டும் ஓடிடி இயங்கு தளத்தில் வெளியாகும் வாய்ப்பும் உள்ளது என்று எதிர்பார்க்கத் துவங்கி உள்ளனர். இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+