பேபி பம்ப் தெரிய.. கடற்கரையில் எமி ஜாக்சன் எடுத்த போட்டோ.. ஆமா டிரஸ் எங்கே? குழம்பி கேட்ட ரசிகர்கள்
சென்னை: பிரபல நடிகை எமி ஜாக்சன், கடற்கரையில் எடுத்த போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதைப்பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு வாழ்த்துக்களையும், ஆசிகளையும் சொல்லி வருகிறார்கள்.
லண்டனை சேர்ந்தவர் எமி ஜாக்சன். 17 வயதிலேயே மாடலிங் துறைக்கு வந்துவிட்டார்.. பிறகு அழகி போட்டியிலும், மிஸ் இங்கிலாந்து போட்டியிலும் கலந்து கொண்டார்.. இதில் எமி ஜாக்சன், 2வது இடம் பிடித்தார்.

இதற்கு பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்தினார்.. அந்தவகையில், தமிழில் "மதராசபட்டினம்" படம் மூலம் அறிமுகமாகி, ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.. தொடர்ந்து ஷங்கரின் ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உள்பட படங்களில் நடித்தார்...
இதற்கிடையே இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை எமி நிச்சயதார்த்தம் செய்தார்.. இவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.. அந்த குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயரிட்டு மகிழ்ந்தார் எமி... ஆனால், இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, ஏராளமான கருத்து வேறுபாடுகள் எழுந்தன.. இதனால், அவரைவிட்டு பிரிந்துவிட்டார் எமி ஜாக்சன்.
மீண்டும் காதல்: இதற்கு பிறகு ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார்... பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்துகொண்டார்.. இதற்கு பிறகு, எமி ஜாக்சன் 2வது முறையாக கர்ப்பமாக உள்ள தகவலை, கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தார்.. 2வது கணவர் எட் வெஸ்ட்விக்குடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களுடன் அந்த தகவலை வெளியிட்டிருந்தார்.
எப்போதுமே, தன்னுடைய மகனுடன் நேரம் செலவழிக்கும் பல போட்டோக்களை எமி தொடர்ந்து பதிவிட்டு வந்த நிலையில், இப்போது கர்ப்பமாக உள்ள எமி ஜாக்சன், மீண்டும் போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார்.. ஆனால், பிகினி மட்டும் அணிந்து போஸ் தந்துள்ளார்.. இந்த போட்டோவை அவர் ஷேர் செய்துள்ள நிலையில் இதைப்பார்த்த பலரும், எமி ஜாக்சன் ஆடையின்றி போட்டோவுக்கு போஸ் தந்தீர்களா? என்று கிண்டலாக கேட்டு வருகிறார்கள்.
ஸ்கின் டிரஸ்: காரணம், ஸ்கின் டிரஸ் என்று சொல்லக்கூடிய தோலின் நிறத்திலேயே அந்த உள்ளாடைகளை அணிந்துள்ளார்.. அதேபோல, முகத்தைத் திருப்பிக் கொண்டு போஸ் தந்துள்ளார் எமி ஜாக்சன்.

அதேபோல, தன்னுடைய வயிற்றின் மீது நீர் நிறைந்த கண்ணாடி டம்ளரை வைத்து, டம்ளர் நிற்கின்றதா என்று டெஸ்ட் செய்கிறார்.. இதை அவரே வீடியோவும் எடுத்து ஷேர் செய்து, "நான் இப்போதைக்கு ஒல்லியாக இருக்கிறேன் என்று சொலல முடியாது" என்று கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
வைரல்: கர்ப்பிணியாக உள்ள எமி ஜாக்சனின் இந்த போட்டோ, வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "அடுத்தது மகள்தான், நல்லபடியாக பிறக்கட்டும்" என்று வாழ்த்து சொல்லி வருகிறார்கள்... கடற்கரையில் கர்ப்பிணி எமி ஜாக்சன் எடுத்த இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications