அனாமிகான்னு உண்மையாவே ஒரு பொண்ணு வந்துட்டாளே...அப்போ நான் யாரு?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் திருமணம் சீரியலில் சந்தோஷ் ஜனனி தம்பதியாகியும் இவங்களுக்குள்ள இருக்கா இல்லையான்ற நூல் மாதிரி ஒரு மெல்லிய காதல் இழையோடிட்டு இருக்கு.
இதுக்கு நடுவுல சந்தோஷின் தம்பி நவீன் மேல, ஜனனியின் தங்கை அனிதாவுக்கு காதல் வந்துருது.விளையாட்டுத்தனமா ஏதாவது செய்யணும்னு நினைச்ச இந்த பொண்ணு வேற ஒரு சிம் கார்டு வாங்கி அனாமிகா,அனிதாவோட ஃபிரண்டுன்னு சொல்லி பேச ஆரம்பிக்குது.

நவீனும் அனிதாவோட ஃபிரண்டுன்னு நல்லா பேச ஆரம்பிச்சுடறான். அது காதலா மாறிடுது.நவீனுக்கு அனாமிகாவை நேரில் பார்க்கணும்னு ஆசை.எத்தனையோ தடவை கேட்டும், அனிதா மறுத்துடறா.
ஒரு வழியா நவீன் என்ன சொன்னாலும் சரி.. இத்தனை நாள் அனாமிகாவா நடிச்சு காதலிச்சது நான்தான்.நீ இப்பவும் என்னை காதலிக்கிறியான்னு கேட்டுடணும்னு நேரில் சந்திக்க ஒத்துக்கறா.

தன்னுடைய தோழியுடன், நவீனை சந்திக்க காஃபி ஷாப் போறா.அங்கே நவீன் எதிர்பார்ப்போட உட்கார்ந்திருக்கறதை மறைஞ்சு நின்னு பார்க்கறா. ஒரு வழியா மனசை திடப்படுத்திகிட்டு உள்ளே போனா..பயங்கர ஷாக்.

அங்கே ஒரு அழகானப் பொண்ணு நவீனை நோக்கி வர்றா..கிட்ட வந்து கையை நீட்டி ஹாய் நான்தான் அனாமிகான்னு சொல்லி சிரிக்கறா.நவீனும் வழியறான்.. கை குடுக்கறான். எப்படி இருக்கும், இத்தனை நாள் அனாமிகாவா நவீனை காதலிச்ச அனிதாவுக்கு.

பாவம் உடைஞ்சு போறா..அனாமிகா டிராமா எப்படிடி வெளியில போயிருக்கும்னு தோழிகிட்ட அழுது புலம்பிகிட்டு இருந்தவ.. வீட்டுக்கு வந்து செத்துடலாம்னு நினைக்கறா. அப்போதான் நவீன் போன் பண்ணி,அனாமிகாவை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு அனிதா.உனக்குத்தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்னு சொல்றான்.

இப்போ அந்த அனாமிகா யாருன்னு கண்டு பிடிக்கணும்னு இருக்கா அனிதா. இருந்தாலும் பாவம்..நவீனை அடைய முடியாமல் போயிருமோன்னு அழுது புலம்பறா.
விளையாட்டு வினையாகும்னு சும்மாவா சொன்னாங்க...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications