அனாமிகான்னு பேரை வச்சுக்கிட்டு அனாமத்தா கிஃப்ட் வாங்கிக்கறா...போங்காட்டம் பட்.. காதல்...!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஜனனியின் தங்கை அனிதா, அனாமிகான்னு பேரை மாத்தி வச்சுக்கிட்டு, அக்காவின் மச்சினன் நவீனை காதலிக்கறா.
திருமணம் சீரியலில் பெரிய அண்ணியின் அதிகாரம்தான் வீட்டில் எப்போதும் நடக்குது. இவங்க தங்கை ஆர்த்தியை நவீனுக்கு கட்டி வச்சு சொத்தை அபகரிக்க நினைக்கறாங்க.
நவீனுடன் அனிதா வேறு சிம்மில் பேசி, தன்னை அனிதாவோட ஃபிரண்ட் அனாமிகான்னு சொல்லி பேச ஆரம்பிக்கறா .நவீனும் பேச பேச அனாமிகாவை லவ் பண்ண ஆரம்பிச்சுடறான். நேரில் இப்போதைக்கு பார்க்க கூடாதுன்னு கண்டிஷன் போட்டுடறா அனாமிகா.

புடவை
அனாமிகாவுக்கு புடவை வாங்கிட்டு வந்து அனிதாவிடம் குடுத்து, அவகிட்ட குடு அனிதான்னு சொல்றான். வீட்டுல வந்து பிரிச்சு பார்க்கறா அழகான புடவை. உடனே அனாமிகாவா பேச வச்சிருந்த நம்பர்ல போன் செய்து, புடவை ரொம்ப பிடிச்சிருக்குங்கன்னு சொல்றா.

என்ன புடிக்கும்
அனாமிகா உங்களுக்கு என்ன புடிக்கும்னு சொல்லுங்க.. வாங்கி அனிதாகிட்ட குடுத்து அனுப்பறேன்னு சொல்றான். எனக்கு என்ன புடிக்கும்னு அனிதாவுக்கு தெரியும். பார்க்கவும் அனிதாவும், நானும் ட்வீன்ஸ் மாதிரிதான் இருப்போம்னு சொல்றா.அவன் அனிதாவை அழைச்சுக்கிட்டு கடைக்கு போயி இஷ்டத்துக்கு வாங்கித் தர்றான். அனிதா குஷியில் மிதக்கறா.

பார்க்க போறேன்
இப்போ எல்லாம் நான் அடிக்கடி அனிதாவைத்தான் பார்க்க போறேங்கன்னு சொல்றான். அனிதாவை பார்க்கவா எதுக்குன்னு குறும்பா சிரிச்சுகிட்டே கேட்கறா அனிதா. நீங்கதானே சொன்னீங்க.. நானும் அவளும் ட்வீன்ஸ் போல இருப்போம்னு.. அதனாலதான்னு அவன் அப்பாவியா சொல்றான்.பரவால்லை.. அவளை பார்க்க போங்கன்னு சொல்றா.

நடு வீட்டுக்கு
அனிதாவுக்கு நவீன் மேல காதல் முத்தி நடு வீட்டுக்கு வந்துதுன்னு சொல்ற மாதிரி, அவன் தன்னோட ரூமுக்கு வந்துட்டார் மாதிரி கற்பனை பண்ணிக்கறா.. அண்ணி வந்து பேசினா நவீன் பேசறது போல பிஹேவ் பண்ணி அவங்களை கட்டி பிடிச்சுக்கறா..
பாவம், காலேஜ் பொண்ணுங்களுக்கு லவ் வந்துட்டா இப்படித்தானோ...
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications