Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்களுக்கு வயசு கூடாதா.. ஆனந்தம் கவிதாவை பார்த்து ஆனந்தமாக கலாய்க்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆனந்தம் சீரியலில் நடித்த கவிதாவைப் பார்த்து ரசிகர்கள், உங்களுக்கு வயசு கூடவே கூடாதா மேடம் என்று சந்தோஷமாக கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

சீரியல் பார்த்தபடி கத்திரிக்காய் வெட்டி எத்தனை நாளாச்சு.. சோறு பொங்கி எத்தனை நாளாச்சு.. அரட்டை அடிச்சு எத்தனை நாளாச்சு.. அழுது எத்தனை நாளாச்சு.. இப்படித்தாங்க நம்ம வீட்டு பெண்கள் புலம்பிக் கொண்டுள்ளனர்.

காரணம் புது எபிசோட் வந்து 3 மாதமாசயிப் போச்சு.. இப்போது ஓடுவது எல்லாமே பழைய காட்சிகள்தானே.. இந்த நிலையில்தான் இன்ஸ்டாகிராமிலும், டிவிட்டரிலும் நடிக நடிகையரைக் காண மக்கள் அலை மோதுகின்றனர்.

போனே சரணம்

போனே சரணம்

இந்த லாக்டோன் டைம்ல வீட்டில எல்லாரும் வேலை வெட்டி இல்லாமல் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில் இருக்கிறோம் . இந்த சூழ்நிலையிலும் பொழுது போகாம என்ன செய்யணும் தெரியாம எல்லாரும் போன நோண்டிட்டு இருக்கிறார்கள். எல்லா வீட்டிலும் இது தான் நடக்குது. ஆனால் சினிமா பிரபலங்கள் சூட்டிங் இல்லாத அதனால் வீட்டிலேயே போட்டோஸ் எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணிட்டு வருகிறார்கள்.

அழகிய போட்டோக்கள்

அழகிய போட்டோக்கள்

இதுதான் இப்ப இருக்கிற ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கிறது அந்த வகையில் கவிதா அவர்களும் விதவிதமாக வீடியோஸ் போட்டோ அப்லோட் பண்ணி விடுகிறார் இது இணைய தளங்களில் பரவி வருகிறது. ஆனந்தம் சீரியல் மூலமாக தமிழ் சினிமாவில் சீரியலில் அறிமுகமான கவிதா சேலம் போனாங்க ஆனா இப்ப இருக்கிறது எல்லாம் சென்னையில்தான். சென்னையில் நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கும்போது அவங்க வீட்டை விட்டு வெளியில் வர முடியாது.

டிக்டாக்கும் போச்சு

டிக்டாக்கும் போச்சு

அதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து டிக் டாக் கில் வீடியோவும் இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டுக்கொண்டு இருந்தாங்க. இப்போ டிக் டாக் தடை செஞ்சதுல பழைய டிக் டாக் வீடியோஸ் எல்லாத்தையும் இன்ஸ்டாகிராமில் அப்லோட் பண்ணிட்டு வராங்க. இதை பார்த்து ரசிகர்கள் உருகி உருகி அடடா அடடா என்று உச்சுக் கொட்டிக் கொண்டுள்ளனர். அந்தளவுக்கு அவரது டிக் டாக் வீடியோஸ் வெறித்தனமா இருக்கிறது.

நிஜத்திலும் ஹோம்லி

நிஜத்திலும் ஹோம்லி

சின்னத்திரை வெள்ளித்திரை என்று எல்லா கதாநாயகிகளும் கையிலெடுத்து இருக்கிற ஒரே ஆயுதம் போட்டோஷூட். சிலர் கவர்ச்சியாகவும் சிலர் ஹோம்லியாகவும் போட்டோக்களை எடுத்து டெய்லி அப்டேட் பண்ணி இருக்காங்க. அதுல இவங்க ஹோம்லி லுக்கு ரசிகர்களுக்கு ரசிக்கத்தக்க தாக இருக்கிறதாம்.

நீளமான கருத்த முடி

நீளமான கருத்த முடி

இவருடைய நீண்ட , கருத்த முடி தான் இவருக்கு பிளஸ் பாயின்ட். 1983இல் பிறந்திருந்தாலும் இன்றும் இளமையோடு தான் இருக்கிறார். அவருடைய மகள் அவருக்கு தோளுக்கு மேல வளர்ந்தாலும் இவர் இன்னும் அதே ஆனந்தம் கவிதாவா க்யூட்டாகவே இருக்கிறார். இவர் ஆனந்தம் நாடகத்தில் பெண்களின் மனதைக் கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதன் பிறகு வள்ளி, நீலி, கல்யாணம் முதல் காதல் வரை அப்படி பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

பாசிட்டிவ் நெகட்டிவ்

பாசிட்டிவ் நெகட்டிவ்

பாசிட்டிவ் கேரக்டரில் மட்டுமல்லாமல் சில சீரியல்களில் நெகட்டிவ் கேரக்டரிலும் கலக்கியிருக்கிறார் கவிதா. இதுவும் ரசிகர்களுக்கு பிடித்துதான் இருக்கிறது. வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் கவிதா அவருடைய மகள் ரேயா வுடன் புகைப்படங்களை எடுத்து தள்ளுகிறா.ர் அதுவும் இருவரும் ஒரே காஸ்ட்யூமில் கலக்குகிறார்கள். இதைப்பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் அக்கா தங்கச்சி போல இருக்கின்றன என்று ஜொள்ளு விடுகிறார்கள்.

வேலை நல்லா பார்ப்பார்

வேலை நல்லா பார்ப்பார்

இவருடைய மகள் தோளைத் தாண்டி வளர்ந்ததனால் பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் இருக்கிறது. மேலும் அவருக்கு வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் சமையல் பண்ணுவது தோட்டத்தை கவனிப்பது ரொம்ப பிடிக்குமாம். வீட்டு மாடியில் ஒரு அழகான தோட்டத்தில் உருவாக்கியிருக்கிறார் அதிலும் நின்று விதவிதமாக போட்டோ எடுத்து ஜமாய்க்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+