Anbudan Kushi Serial: அன்புடன் குஷி... இது டப்பிங் சீரியல் இல்லே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியல் மார்வாடி குடும்ப கதை. இதில் நாயகி மற்றும் சில பெண்கள் நார்த்தில் இருந்து வந்த நடிகைகள் போலும். செட்டப் மட்டும்தான் மார்வாடி குடும்பம் போல் இருக்கிறது.
பிரஜன் நாயகனாக நடிக்கிறார்.. பார்க்கும் மக்களுக்கு இது டப்பிங் சீரியலோ என்று கூட எண்ணம் வரும். இதை அறிந்துதானோ என்னவோ விஜய் டிவியின் ட்வீட்டர் பக்கத்தில் இது டப்பிங் சீரியல் இல்லே என்று சீரியல் குழுவை சேர்ந்தவர்கள் சொல்வதை பதிவிட்டு உள்ளார்கள்.
அன்புடன் குஷி சீரியல் ஆரம்ப எபிசோட் ராஜஸ்தானில் ஷூட் செய்தது போல் இருந்தது. அடுத்தடுத்த எபிசோட்கள் அவர்கள் சொன்னது மாதிரி சென்னையில் ஷூட் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருது.

மார்வாடிஸ் வாழ்க்கை முறை
அன்புடன் குஷி சீரியலில் மார்வாடிகள் வாழ்ககை முறையில் அவர்கள் கதையை சீரியலாக்கி இருக்கிறார்கள். மார்வாடி குடும்பத்தில் வேலை செய்யும் தமிழ் பையன் நாயகனாக நடிக்க, மார்வாடி குடும்ப பெண் நாயகியாக நடிக்க இவர்கள் எப்படி ஒன்னு சேருவார்கள் என்பதுதான் கதை. நாயகி குஷியாக நடிக்கும் பெண் மார்வாடி பெண்போல இருக்கிறார். மார்வாடி குடும்ப வழக்கத்தின் படி அனைவரும் கூட்டு குடும்பமாக வசிக்கிறார்கள்.

வீட்டுப் பெரியவகள் முதலில்
வீட்டுப் பெரியவர்கள் முதலில் சாப்பிட வேண்டும். அடுத்துதான் இளம் தலைமுறையினர் சாப்பிட வேண்டும் என்பது அவர்களது குடும்ப பழக்கம் போலிருக்கிறது. ஆனால், குழந்தைகளுக்கு எப்படி என்று தெரியவில்லை. பசிக்கும்போதே ஊட்டிவிட்டு விடுவார்களா, இல்லை அவர்களும் பெரியவர்கள் சாப்பிட்ட பின்னர்தான் சாப்பிட வேண்டுமா என்பது தெரியவில்லை.

குஷி சாப்பிட உட்காருகையில்
குஷி வீட்டு பெரிய மனுஷி தீதி முன் டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார, தீதி குஷி நீ போய் உன் அம்மாவை வர சொல்லு என்று அனுப்பி வைக்கறாங்க. அவள் சரி தீதி என்று தட்டுடன் போக, பிளேட்டை வச்சுட்டு போன்னு சொல்றாங்க. அவள் வச்சுட்டு மம்மா எனக்கு பசிக்குது மம்மா என்று சொல்ல, வீட்டுப் பெரியவங்க முதலில் சாப்பிடட்டும்.. நீ அப்புறமா சாப்பிடுன்னு சொல்றாங்க மம்மா. பசிக்குது மம்மா என்றாலும் பிறகுதான் சாப்பிட வேண்டும்.. அதுதான் கட்டளை.

பழக்க வழக்கம்
அவர்கள் குடும்ப பாரம்பரிய பழக்க வழக்கம் என்றால் அதை மாற்ற என்ன செய்ய முடியும்? அப்படி சாப்பிடுவதால் இளம் வயதினர் ஒன்றும் குறைந்து போகப் போவதில்லை. அதே போல அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த பெண்கள் அனைவரும் சமையல் கலையில் சிறந்தவராக இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் பாரம்பரிய சுவீட், காரங்கள் என்று அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டு விழா பண்டிகை என்றால் அவர்களே இதை தயார் செய்ய வேண்டும். இதுதான் அவர்கள் குடும்ப பாரம்பரிய பழக்க வழக்கம்.

மாற்ற வேண்டும் என்றால்?
பெண்கள் படிக்க கூடாது, விருப்பத்துக்கு ஏற்ப உடைகள் அணியக் கூடாது என்று கட்டுப்பாடு எல்லாம் இல்லை. கல்யாணம் ஆகும் வரை பெண்கள் தனக்குப் பிடித்த உடைகளை அணியலாம். திருமணத்துக்குப் பின்னர் மாமனார் மாமியார், கணவன் ஆசைப்படித்தான் அவர்கள் நடந்துக்கொள்ள வேண்டும். இதை எல்லாம் ஒரு சீரியல் மூலம் நாம் மாற்ற வேண்டும் என்றால்....?
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications