பிக் பாஸ் வீட்டில் ஆண்ட்ரியா ‘ஆசை’ பட்டது நடக்குமா..?
விஸ்வரூபம் 2 படக்குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றனர்.
சென்னை: போட்டியாளர்கள் பிக் பாஸ் 2 வீட்டை விட்டு வெளிவரும் வரை தியேட்டர்களில் விஸ்வரூபம் 2 ஓடிக் கொண்டிருக்கும் என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று விஸ்வரூபம் 2 படக்குழுவினர்களான நடிகைகள் ஆண்ட்ரியா, பூஜா குமார், பாடகர் சத்ய பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் போட்டியாளர்களைச் சந்தித்தனர். அப்போது போட்டியாளர்கள் மத்தியில் அவர்கள் பாடல் ஒன்றை பாடிக் காட்டினர்.

பின்னர் விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாம் டிரெய்லர் அகம் டிவி வழியே ரிலீஸ் செய்யப்பட்டது. படக்குழுவின் அன்புப் பரிசாக விஸ்வரூபம் 2 பட ரிலீஸ் தேதி அச்சிடப்பட்ட டிசர்ட் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டது.
பின்னர் படக்குழுவினர் வீட்டை விட்டு வெளியேறிய போது, விஸ்வரூபம் 2 படத்தைப் பார்க்க வேண்டும் என ஆவலாக இருப்பதாக போட்டியாளர்கள் தெரிவித்தனர். அதற்கு ஆண்ட்ரியா, 'நிச்சயம் நீங்கள் இந்த வீட்டை விட்டு வெளியேறும் வரை இப்படம் தியேட்டரில் ஓடும்’ என நம்பிக்கைத் தெரிவித்தார்.
விஸ்வரூபம் 2 வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் முதல் பாகம் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே ரிலீசானது. ஆனால் சொல்லிக் கொள்ளும்படி தியேட்டர்களில் ஓடவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 முடியும் வரை இப்படம் திரையரங்குகளில் ஓடும் என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். இந்தக் கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், நிச்சயம் 50 நாட்களுக்கு மேல் தியேட்டரில் இப்படம் ஓடினால் மட்டுமே பிக் பாஸ் வெற்றியாளரால் இப்படத்தைப் பார்க்க முடியும்.
பார்ப்போம், ஆண்ட்ரியா சொன்னது நடக்கிறதா என..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications