Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனிருத்தின் தொட முடியாத உயரம்.. சாய் வரவால் சரியுதா பிரம்மாண்டம்? ரூ.10 கோடியும், 10 படமும் எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத, புதிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர் 10 படங்கள் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.. அந்தவகையில், அனிருத்துக்கு போட்டியாக சாய் அபயங்கர் வந்துள்ளதாகவும், இதனால் அனிருத்தின் மார்க்கெட் கீழே விழத்துவங்கி விட்டதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.. இந்நிலையில், இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.. ஒருவரது திறமைக்கு மட்டுமே இங்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அந்த தன்னுடைய பேட்டியில் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

அனிருத் தற்போது டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார.. 'கூலி, ஜனநாயகன், மதராஸி, லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2' உள்ளிட்ட படங்களுக்கும், தெலுங்கில் 'கிங்டம், மாஜிக், த பாரடைஸ்' போன்ற படங்களுக்கும், ஹிந்தியில் 'கிங்' படத்திற்கும் இசையமைத்து வருகிறார்..

Television anirudh Sai Abhyankar

இவரது படங்களுக்கான இசை உரிமையை இசை நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்கி கொண்டிருக்கின்றன.. எனவேதான்,10 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறாராம்.. ஆனால், புதிதாக ஒப்பந்தமாகும் படங்களுக்கு, அனிருத் சம்பளத்தை உயர்த்தி கேட்கிறாராம்.

அனிருத் மீதான வெறுப்பு

அதிக சம்பளத்தை அனிருத் கேட்பதாலும், ஏற்கனவே அனிருத் மீதான வெறுப்பு காரணத்தினாலும்தான், பலரும் சாயை நாடி சென்று கொண்டிருக்கிறார்களாம்.

இந்நிலையில்தான், பிரபல பாடகர்கள் திப்பு-ஹரிணி ஜோடியின் மகன் சாய் அபயங்கருக்கு ஒரே நேரத்தில் 10 படங்கள் கமிட் ஆகியிருக்கிறதாம்.. இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத சாய் அபயங்கரை, எப்படி 10 படங்களுக்கு புக் செய்தார்கள்? என்பது கோலிவுட்டில் வியப்பை தந்து வருகிறது.

அதிக சம்பளத்தை அனிருத் கேட்பதாலும், ஏற்கனவே அனிருத் மீதான வெறுப்பு காரணத்தினாலும்தான், பல பிரபலங்கள் சாயை நாடி செல்கிறார்களாம்..

அனிருத்துக்கு போட்டி?

இந்நிலையில்தான், Aagayam Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள வலைப்பேச்சு அந்தணன், "அனிருத்துக்கு மிகப்பெரிய ஃபேன் பேஸிஸ் உள்ளது.. அவரது படங்களுக்கு படங்களுக்கு எப்போதுமே ஒரு பிசினஸும் உள்ளது.. அனிருத் ஒரு படத்துக்கு இசையமைத்தால், அந்த பாடல்களை வாங்குவதற்கு மிகப்பெரிய நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.. எனவே, அனிருத் மார்க்கெட் அப்படியேதான் இருக்கிறது..

சாய் அபியங்கர் என்பவர் இனிமேல்தான் திரைக்குள் வந்து, பாடல்களை இசையமைத்து, அது மக்களிடம் சென்று, அவர் இன்னொரு அனிருத்தாக மாறும்போதுதான், இந்த பயம் வரும்.. அதுவரை அனிருத்துக்கு பாதிப்பில்லை..

ஒரே நேரத்தில் ஏழு படங்களுக்கு கமிட் செய்யப்பட்டுள்ளார் சாய் அபியங்கர்.. ஆனால், ஒருவரை சிபாரிசு செய்து , உயரத்துக்கு கொண்டுவர முடியாது..

வரிசையாக படங்கள்

இன்று அட்லி என்பவர் இந்தியாவில் முக்கியமான இயக்குனராக மாறிவிட்டபிறகு, அவருக்காக ஒரு கூட்டம் வரிசையில் நிற்கத்தான் செய்வார்கள்.. அதுபோல, சாய் அபியங்கர் என்பவர், அனிருத்திடம் இருந்தவர்தான்.. இசையமைக்கும்போது, அனிருத்தின் ரோல் என்ன? சாய் ரோல் என்ன? இவர்களின் தனித்தனி ஒர்க்கிங் ஸ்டைல் என்ன? என்பதையெல்லாம் கண்காணித்தவர்கள் இருக்கலாம்.. எனவே திறமையின் அடிப்படையில் 7 படங்கள் கமிட் செய்யப்பட்டிருக்கலாம்.

மார்க்கெட்டில் ஒருவர் வருவதற்கான சூழ்நிலை, அறிகுறி தெரிந்தாலே போதும், அவரை உடனடியாக திரையில் உச்சத்தில் உட்கார வைத்து விடுவார்கள். இதுதான் சாய் விவகாரத்தில் நடந்துள்ளது..

பேரழகன் - சாய் அபயங்கர்

இன்றைய இளைஞர் கூட்டத்தை கவரும் அளவுக்கு பாடல்களை போட்டிருக்கிறார் சாய்.. அவரது தனி பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய ஹிட்.. அதுமட்டுமல்ல, நடிகராகவும் வரக்கூடிய அளவுக்கு பேரழகனாக இருக்கிறார்.. ஆல்பம் பாடல்களில் அவரே பாடுகிறார், டான்ஸ் ஆடுகிறார்.. இது இன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடித்துவிட்டது.. அதனாலும் அவருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.. இதை தவறு என்றும் சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+