Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூக்கு வெடச்சு.. நல்ல சிரிச்ச முகம்.. அதைப் போய் இப்படி பண்ணிட்டாரே இந்த சுரேஷ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாலியா சிரிச்ச முகமாக சுத்திகிட்டு இருந்த அனிதாவை இப்படி பண்ணிட்டாரே இந்த மொட்டை சுரேஷ் என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

இதுவரைக்கும் ஒளிபரப்பான சீசன்களில் இந்த நாலாவது சீசனில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பண்டிகைகள் அதிகமாக வந்து களைகட்ட போகிறது என்று சந்தோஷமாக நேற்று ஆரம்பித்து வைத்தார் அனிதா.

ஆனால் அந்த அழகுச் சிலை அனிதாவை கதறி அழு வைத்துவிட்டார் மொட்டை சுரேஷ் சக்கரவர்த்தி. இதனால் அனிதாவின் ரசிகர்களும், மற்றவர்களும் சுரேஷ் மீது பாய்ந்து கொண்டுள்ளனர்.

 திட்டித் தீர்க்கும் பெண்கள்

திட்டித் தீர்க்கும் பெண்கள்

அனிதாவின் ரசிகர்களும் பெண்களும் வகை வகையாக திட்டி தீர்த்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் சில நெட்டிசன்கள் அனிதாவையும் இப்படியே எவ்வளவு நாளைக்கு தான் அழுது அழுது காலத்தை ஓட்ட போறிங்க என்று கலாய்த்து வருகிறார்கள். இந்த நாலாவது சீசனில் இது வரைக்கும் இல்லாத அளவிற்கு நேற்றைய எபிசோடில் 4 மணி நேரம் விஜயதசமி கொண்டாட்டம் கொண்டாடினார்கள்.

 4 மணி நேரம்

4 மணி நேரம்

இதற்காக ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்த நிகழ்ச்சி தற்போது கிராமப்புறங்களிலும் பேசுபொருளாகி விட்டது. அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கி விட்டனர். பலர் இந்த நிகழ்ச்சியை கலாய்த்து கொண்டு இருந்தாலும் ரசிக்கும் ரசிகர்களும் கூடிக்கொண்டே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 இதெல்லாம் சரியா பாஸு

இதெல்லாம் சரியா பாஸு

ஆனால் இந்த பிக்பாஸ் ரசிகர்களிடம் நேற்று நடத்திய பிரச்சனைகள் தான் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இருந்தாலும் ரசிகர்களின் அதிகமான சப்போர்ட் இருப்பது அனிதாவிற்கு தான். அவர் பேசியது முழுமையாக சரி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல இடங்களில் இந்த மாதிரி தான் நடந்து கொண்டிருக்கிறது அதை சரியாக தான் கூறியிருக்கிறார்.

 சுரேஷுக்கு இது தேவையா

சுரேஷுக்கு இது தேவையா

நேற்று நடந்த விழாவில் சுரேஷ் சக்ரவர்த்தி சுமங்கலிப் பெண்கள் முதலில் வந்து பானையில் அரிசியை போடுங்கள் என்று கூறியிருந்தார் .அதனைக் கேட்டதும் பக்கத்திலிருந்த அனிதா சம்பத் முதலில் அரிசியை அள்ளி போட்டார். ஆனால் அதன் பிறகு நடந்த பட்டிமன்றத்தில் அனிதா சம்பத் கிராமப்புறங்களில் இன்னுமும் சிலர் கணவனில்லாத பெண்களை நிகழ்ச்சிகளில் அனுமதிப்பது இல்லை அவர்களும் கொஞ்சம் ஒதுங்கி தான் இருக்கிறார்கள்.

 அனிதாவின் போல்டு பேச்சு

அனிதாவின் போல்டு பேச்சு

அது பார்ப்பதற்கு வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் இதையெல்லாம் பார்ப்பது இல்லை. சுமங்கலி தான் ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் மனப்பான்மை மிகவும் தவறு இன்றைய நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி சுமங்கலி பெண்கள் வாங்க என்று கூறினார். அனிதா இப்படி பேசும் போது நிஷாவும், அர்ச்சனாவும் முகத்தை சுளித்து என்ன இப்படியெல்லாம் பேசுகிறார் என்று தான் கூறிக் கூறிக்கொண்டே இருந்தனர் .

 தீயை மூட்டிய சுரேஷ்

தீயை மூட்டிய சுரேஷ்

ஆனால் முடிக்கும் போது சரியாக முடித்துவிட்டார் என்று அவர்கள் அதனை அப்படியே விட்டுவிட்டார்கள், ஆனால் சுரேஷ் சக்கரவர்த்தியால் மட்டும் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இன்னமும் பழமைவாதி ஆக தான் அவர் இருந்து கொண்டிருக்கிறார். ஒரு நல்ல நாளில் இப்படி அபசகுனமாக பேசக்கூடாது என்று இவர் போர் கொடியை தூக்கி கொண்டு இருக்கிறார். ஆனால் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அனிதா நான் செய்தது தவறா என்று அங்கு இருக்கும் பலருடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 அனிதாவுக்கே ஆதரவு

அனிதாவுக்கே ஆதரவு

அனைவரும் அனிதாவுக்குத்தான் சப்போர்ட் பண்ணி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஷிவானி முதல்முறையாக தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார் . இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இவர்கள் பேசிக் கொண்டிருந்தால் இன்னும் அவர்கள் பழைய காலத்தில் தான் இருக்கிறார்கள் . அனிதா கூறியது சரிதான் என்று ஷிவானியும், ரம்யா பாண்டியனும் கூறியிருக்கிறார்கள்.

 இப்படித்தான் பேசணும்

இப்படித்தான் பேசணும்

அதுமட்டுமல்லாமல் பாலாஜியும் நீங்கள் பேசுவது தான் சரியான கருத்து சுமங்கலிப்பெண்கள் என்று கூறும்போது நான் அந்த இடத்தில் இருந்தால் இப்படி எல்லாம் அழைத்து நான் வரவேண்டும் என்றில்லை எல்லா பெண்களும் வாங்க என்று கூறியிருக்கலாம் என்று சொல்லியிருப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார். அப்படி அங்கு இருக்கும் பலரும் அனிதாவிற்கு சப்போர்ட் பண்ணுனாலும் இவர் நான் பேசினது தப்பு என்றால் என்ன மன்னித்துவிடுங்கள் என்று சுரேஷ் சக்கரவர்த்தியுடன் பேசப் போகும் போது அவர் இவரிடம் உன் காலில் விழுகிறேன் தயவு செய்து என்னிடம் பேசாதே கூறிவிட்டார்.

 மூக்கைச் சிந்திய அனிதா

மூக்கைச் சிந்திய அனிதா

இதுவரைக்கும் போல்டாக பேசிக்கொண்டிருந்த அனிதாவால் தான் பேசியது சரியா தவறா என்று கூட முடிவெடுக்க முடியாமல் பிக் பாஸ் ரூமுக்குள் வந்து அழுது கொண்டிருக்கிறார். இதை பார்த்ததும் பல ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் . நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்து விட்டீர்கள் என்று இப்போது புரிகிறது. அடுத்தவர்களையும் ஒன்றாக நினைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது .

 தீயில் எரிப்பது சரியா

தீயில் எரிப்பது சரியா

அதற்காக தன்னை தானே ஒப்பிடாதீர்கள் என்று அங்கு இருப்பவர்கள் இது அபசகுனமான பேச்சு என்று கூறியிருந்தாலும் நேற்று பிக் பாஸ் செய்தது மட்டும் நல்லா செயலா என்றும் பலர் கேள்வி கேட்டு வருகின்றனர். நேற்று நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் டாஸ்க் தனக்கு பிடிக்காதவர்கள் போட்டோவை தீயிலிட்டுக் கொளுத்துவது தான். இது மட்டும் சரியா .உயிரோடு இருக்கும் ஒருவர் புகைப்படத்தை அவர்கள் கண் முன்பே தீயிலிட்டுக் கொளுத்துவது எவ்வளவு பெரிய கேவலமான செயல்.

 சுரேஷ் தட்டிக் கேட்கலையே

சுரேஷ் தட்டிக் கேட்கலையே

அதை பார்த்து இப்படி செய்யலாமா அது அபசகுணம் என்று சுரேஷ் சக்கரவர்த்தி கூறவில்லையே . அவரும் சேர்ந்து தானே எல்லாம் செய்தார் . இப்ப மட்டும் இவர் பேசுவதை அவர் சுட்டிக் காட்டுவதற்கு இந்த பொங்கு பொங்கு ராரே என்று அனிதாவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். அதிலும் இவர் நான் ஒரு சுமங்கலி பெண்ணாக இருப்பதால் முதலில் செய்தேன். இதே இடத்தில் நான் கணவனை இழந்த பெண்ணாக இருந்தால் என் மனது எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் அப்படி என்று கேட்டது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 அழப்படாது அனிதா

அழப்படாது அனிதா

காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் இவர் திடீரென்று தன்னையே இதில் ஒப்பிட்டது பலருக்கு இது அபசகுணம் இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது என்று கூறியிருக்கிறார்கள் .அதற்குதான் ஷிவானியும் இந்த மாதிரி எல்லாம் பேசுறது அபசகுணம் அப்படி என்றெல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறது தான் இன்னும் பழமை வாதிகளாக இருக்கிறார்கள். என்னவோ போங்கம்மா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+