வேட்டியை மடிச்சுக் கட்டி.. துள்ளிய கொண்டையுடன்.. இறங்கிக் குத்திய அனிதா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினமும் சண்டை போட்டுக் ரசிகர்களை இரிட்டேட் பண்ணி கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று தான் கொஞ்சம் சூடு பிடித்திருக்கிறது. கொண்டை துள்ளத் துள்ள அனிதா சம்பத் போட்ட ஆட்டம்தான் ஹைலைட்டே.

அனிதாவின் ஆட்டத்தைப் பார்த்து பல ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அனிதாவின் வேட்டி கட்டும் ஆசை ஒரு பக்கம் நிறைவேறியது எந்றால், மறுபக்கம் தூக்கி வாரிய குதிரைக் கொண்டை துள்ளத் துள்ள அவர் போட்ட ஆட்டம் செம.

பிக் பாஸ் 4 ஆரம்பித்ததிலிருந்து இந்த வீட்டிற்குள் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதுவும் ஹைலைட்டாக போய்க் கொண்டிருப்பது அனிதா சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை தான்.

செய்கை சூப்பரப்பு

செய்கை சூப்பரப்பு

இப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த செயல்தான் வைரலாக பரவி வருகிறது .அதுவும் இப்படியெல்லாமா என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசனில் ரொம்பவும் ரசித்த ரசிகர்கள் அதற்கு பிறகு வரும் சீசன்களில் அந்த அளவிற்கு ரசிக்கவில்லை. ஏனென்றால் அது முதல் சீசனில் இருப்பவர்கள் உண்மையாக இருந்தார்கள். ஆனால் அதற்கு பிறகு சீசன்களில் கலந்து கொள்பவர்கள் எல்லாம் நன்றாக விஜய் டிவியால் டிரெய்னிங் கொடுக்கப்பட்டு வீட்டிற்குள் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கருதி வருகிறார்கள்.

பார்த்துப் பார்த்து

பார்த்துப் பார்த்து

அவர்கள் செய்யும் செயல்களை வைத்து இவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று கண்டுபிடிக்க முடியாத அளவில் இவர்கள் ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருக்கிறார்கள். நாலாவது சீசனில் இருக்கும் நிகழ்ச்சியாளர்கள் அனைவருமே நன்றாக இதற்கு முன்பு உள்ள சீசன் களை பார்த்து டிரெய்னிங் எடுத்து தான் வந்து இருக்கிறார்கள் போல. அந்த அளவிற்கு பார்த்து பார்த்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிழிக்க வந்த சுரேஷ்

கிழிக்க வந்த சுரேஷ்

இவர்களில் முகத் திரையை கிழித்து உண்மையான முகத்தைக் காட்டும் பொறுப்பை பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்திக்கு கொடுத்திருக்கிறது போல. அவர்தான் அனைவரிடமும் வம்பிழுத்து இந்த நிகழ்ச்சியை கொஞ்சம் சுவாரஸ்யமாக கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். அந்த மாதிரிதான் டிவி செய்தியாளராக அறிமுகமாகி திரைப்படங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் அனிதா சம்பத் இந்த வீட்டிற்குள் வந்ததும் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பும் இருந்தது.

அவரா இவரு

அவரா இவரு

அவருக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் வந்த சண்டையில் வைத்து இவரா இப்படி எல்லாம் இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு பல ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் இவரை ரசித்து கொண்டுதான் வருகிறார்கள் .இவர் செய்யும் செயல்களையும் இவருடைய எக்ஸ்பிரஸனையும் ரசித்து வருகிறார்கள். அந்த மாதிரிதான் இவர் தற்போது ஆடிய ஆட்டத்தைப் பார்த்து பல ரசிகர்கள் கொண்டுவருகிறார்கள்.

சமாதானம் ஆயாச்சா

சமாதானம் ஆயாச்சா

இதுவரைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருந்த சுரேஷ் சக்கரவர்த்தியுடன் க்யூட்டான ஒரு ஆட்டத்தை போட்டிருக்கிறார். அவருடைய ஆட்டத்தை பார்த்து சக நிகழ்ச்சியாளர்களும் துள்ளி குதித்து கொண்டாடி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு ரசித்து ஆடியிருக்கிறார். ஏ சின்ன மச்சான் என்னும் பாட்டுக்கு அனிதா சம்பத்தும் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அதுல அந்த ஆண்டிப்பட்டி அனிதா யாரு மச்சான் என்னும் லைனில் இவர் கொடுக்கும் எக்ஸ்பிரஸனை பார்த்து அந்த வீட்டிற்குள் இருக்கும் ரம்யா பாண்டியன் அனிதா அனிதா என்று கத்துகிறார்.

குலுங்கி குலுங்கி ஆட்டம்

குலுங்கி குலுங்கி ஆட்டம்

அதற்கு சுரேஷ் சக்கரவர்த்தி தனது தொப்பையை குலுக்கி அந்த ஆண்டிப்பட்டி அனிதா அத்தை பொண்ணு அது அஞ்சாங்கிளாஸ் படிக்கும் சின்ன பொண்ணு என்று அனிதாவின் கன்னத்தை தடவி கொஞ்சுகிறார். அதை பார்த்ததும் பல ரசிகர்களுக்கு வயிறு எரிந்து அவருக்கு கமெண்டுகளை போட்டுத் வருகிறார்கள். இவ்வளவு நாள் வரைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருந்த அனிதா சம்பத் இன்று சுரேஷ் சக்கரவர்த்தியை கட்டித்தழுவி மாஸ் காட்டியிருக்கிறார்.

துள்ளிய கொண்டை

துள்ளிய கொண்டை

வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவருடைய மாஸ் கெட்டப்புக்கு மாறியதால் பல ரசிகர்கள் துள்ளிக் குதித்து ரசித்து வருகிறார்கள். இவருடைய க்யூட்டான வேட்டியை மடிச்சு கட்டி ஆடிய ஆட்டத்துக்கு பல ரசிகர்கள் விழுந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு கமெண்ட்களை குவித்து வருகிறார்கள். தினமும் சண்டை போட்டுக் ரசிகர்களை இருட்டேட் பண்ணி கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி இன்று தான் கொஞ்சம் சூடு பிடித்திருக்கிறது. அனிதாவின் வேட்டி கட்டும் ஸ்டைலும், ஆடும் போது அங்கு துள்ளும் கொண்டையும் மாஸாக தான் இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+