அனிதா கையில் கப்பு.. அப்படியே சிலிர்த்துப் போன சனம்.. உருகும் ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடியதில் ரொம்ப போல்ட் ஆகவும் தைரியமாகவும் விளையாடி வீட்டை விட்டு வெளியே வந்த அனிதா சம்பத்தும் சனம் ஷெட்டியும் அந்த வீட்டிற்குள் ஒற்றுமையாக தான் வலம் வந்து கொண்டிருந்தனர்.
தற்போது அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் வெளியிட்டிருக்கிறார் அதைப் பார்த்து அதற்கு சனம் கமெண்ட் போட்டிருக்கிறார் .இந்த இந்த போட்டோஸ்கள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக அனைவரின் மனதிலும் நல்ல ஒரு இடத்தில் இருந்தவர் அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மூலை முடுக்கு முதல் அனைத்து ரசிகர்களிடமும் இவருக்கு பேரும் புகழும் வாங்கிக் கொடுத்திருக்கிறது.

வித்தியாசமான முகம்
செய்தியாளராக இருந்த போது இவரை ரசித்த ரசிகர்கள் கூட இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இவரது பேச்சை கேட்டு கொஞ்சம் அதிர்ந்துதான் போயிருந்தார்கள். இருந்தாலும் இவர் போல்டாக இருக்கிறார் நடிக்காமல் உண்மையாக இருக்கிறார் என்று இவருக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து வந்துகொண்டிருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் இவர் மீதும் சிலருக்கு வெறுப்பு வந்து விட்டது.

சரிதான்
கடைசியாக இவர் ஆரியுடன் போட்ட சண்டையின் காரணமாக ரசிகர்கள் இவரை வெளியேற்றி விட்டாலும் அவருடைய ரசிகர்கள் நீங்கள் செய்தது சரிதான் என்று இவருக்கு ஆறுதல் அளித்து வந்து கொண்டிருந்தனர். அதுபோலத்தான் சனம் ஷெட்டியும் ஆரம்பத்திலிருந்து அனைவருடனும் பாசமாக இருக்கும் நிலையில் பாசமாகவும் தனது உரிமைக்காக கொஞ்சம் சண்டை போட்டுக்கொண்டும் இருந்து கொண்டிருந்தார்.

சிலருக்கு வெறுப்பு
இதனால் இவரை ரசிக்கும் ரசிகர்கள் அளவிற்கு வெறுக்கும் ரசிகர்களும் இருந்தனர் .அதனால் இவரும் பாதியிலே இந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார் .இவர்கள் இருவருக்கும் தற்போது பிக் பாஸ் ஃபைனலின்போது கொடுத்த விருது களோடு போட்டோ எடுத்திருக்கிறார்கள் .இந்த போட்டோவை தற்போது அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ
இவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் கமெண்ட் மழைகளை கொட்டி வருகிறார்கள். தமிழகத்தில் தற்போது தான் மழையின் தாக்கம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது .ஆனால் இந்த போட்டோவிற்கு ரசிகர்களின் கமெண்ட் மழை குறையவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் ஆறுதலை அளித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .

சிலிர்த்துப் போன சனம்
இந்த போட்டோவை பார்த்து மெய்சிலிர்த்து போன சனம் ஷெட்டியும் தன்னுடைய பங்குக்கு ஒரு கமெண்டை போட்டிருக்கிறார். அதில் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நான் பார்த்ததிலே தைரியமான மற்றும் நேர்மையான பெண் நீங்கள்தான் வாழ்க்கையில் சந்தோசமாக இப்படியே இருக்க வேண்டும் என்றும் உங்கள் கணவருடன் ரொம்ப சந்தோசமாக வாழவேண்டும் என்றும் என்னுடைய பெஸ்ட் பிரண்டு என்றுமே நீங்கள் தான் என்றும் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார்.

ஹேப்பி டியர்!
சனத்தின் இந்த கமெண்டுக்கு அனிதா சம்பத்தும் தேங்க்ஸ் டியர் என்று கூறியிருக்கிறார். இவர்களைப் பார்த்ததும் மேலும் குஷியாகி போன ரசிகர்கள் நீங்கள் இரண்டு பேரும் மட்டும் தான் நிஜமான சிங்கபெண்கள் நீங்கள் தான். உண்மையாகவே உங்களது கேரக்டரில் இருந்திருக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள் .அதிலேயும் சிலர் உங்கள் இருவருடன் ஆரியும் இருந்திருந்தால் நேர்மையின் சிகரமாக நீங்கள் இருந்து இருந்திருப்பீர்கள் .

ஆரி இல்லாதது வருத்தம்தான்
ஆனால் ஆரி இல்லாதது ஒரு வருத்தமாக இருந்தாலும் உங்கள் இருவரையும் ஒன்றாக பார்க்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள். என்னதான் இந்த வீட்டிற்கு நாங்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தாலும் வெளியே வந்த பிறகு அனைவரும் ஒன்றாக நன்றாக பேசிக் கொண்டுதான் இருக்கிறோம் .

எப்பவும் பெஸ்ட்
எல்லோரும் நாங்கள் எப்பவும் பெஸ்ட் பிரண்ட் ஆக இருப்போம் என்று இவர்கள் கூறிவந்தாலும் ஆரி வின்னர் ஆனதும் முதலில் கைதட்டியவர்கள் இவர்கள்தான். அனைவரும் அமைதியாக அமர்ந்து இருக்கும் போது இவர்கள் இருவரும் தான் உண்மையான சந்தோஷத்தை கொண்டாடினார்கள் என்றும் இவர்களுடைய ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications