அஞ்சலிக்கு அப்பா வேணுமாம்.. சந்திரா என்ன செய்வா பாவம்!
சென்னை: சன் டிவியின் சந்திர குமாரி சீரியலில், அஞ்சலி அப்பாவைப் பார்த்துட்டு வந்தது, சந்திராவுக்கு சங்கடமா இருக்கு.
சந்திராவை பொறுத்த வரைக்கும், அஞ்சலியின் அப்பா எப்போதும் திருந்த மாட்டார். எப்போதும் ருத்ராவுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, குடும்பத்தை கெடுப்பார்னு சந்திராவின் எண்ணம்.

எல்லா பிரச்சனையும் முடிஞ்சுது.. விவாகரத்துகுன்னு வெத்து பேப்பர்ல கை எழுத்து போட்டு குடுத்துட்டோம்.. நம்மை பிடிச்ச பீடை இனி ஒழிஞ்சுதுன்னு நிம்மதியா இருந்தாங்க சந்திரா.
இந்த சமயத்துல அஞ்சலி அவ அப்பாகிட்ட பேசினதை கேட்ட சந்திராவுக்கு, அஞ்சலியை தன்கிட்ட இருந்து புருஷன் பிரிச்சு, அவ வாழ்க்கையை கெடுத்துருவானோன்னு கவலை வந்துருது.
சரி, அஞ்சலிக்கு சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சுடலாம்னு சந்திரா முடிவெடுக்கறாங்க.இந்த சமயத்துல சந்திரா வீட்டுக்கு வந்த ரெண்டு பெண்களில் ஒரு பொண்ணு, அஞ்சலி அப்பாகிட்ட போயி பேசிட்டு வர்றா.

சந்திரா அம்மாவுக்கு உங்க கூட வாழ விருப்பம் இருக்கோ, இல்லையோ அது தெரியாதுப்பா. ஆனா, அஞ்சலிக்கு உங்க மேல பாசம் அதிகம். அஞ்சலிகிட்ட பேசுங்கப்பான்னு சொல்றா சீதா.
அஞ்சலி அப்பாவும், அஞ்சலிக்கூட பேசணும்னு விருப்பப்பட , அஞ்சலியும் யோசிச்சுட்டு கோயிலுக்கு வர்றா, எனக்கு அப்பா வேணும்தான்.. ஆனா, நீங்க அந்த ருத்ராவை விட்டு வரணும். அப்போதான் நான் உங்களை ஏத்துக்குவேன். ஆனா, அம்மா உங்க கூட சேர்ந்து வாழ சத்தியமா விருப்பப் பட மாட்டாங்கன்னு சொல்றா.

எனக்கு கொஞ்சம் டைம் வேணும் அஞ்சலின்னு சொல்றார் அப்பா, பெத்த பொண்ணு வேணுமான்னு முடிவெடுக்க, ஒரு அங்கீகாரமும் இல்லாத ருத்ரவுக்கு இவ்ளோ முக்கியத்துவமா.. சரி பார்த்துக்கலாம்னு சொல்லிட்டு கிளம்பறா அஞ்சலி.
என்னங்க இது ராதிகா சீரியலுக்கு வந்த சோதனை..கதையும் இல்லை.. பழைய ரடான் சீரியல்களை தூசி தட்டி சந்திரகுமாரி சீரியல் எடுக்கற மாதிரி இருக்குதுங்க.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications