Eeramana Rojave serial: அண்ணாமலை டிரெண்டிங் ஏலம்... இன்னும் முடியலை.. ஓடிட்டே இருக்கு!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் வரைக்கும் சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை படத்தோட ஏலம் டிரெண்டிங் இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு.
எப்போ எந்த சீரியலில் கதாநாயகன் அல்லது நாயகி எதிரியை தொழில் ரீதியா பழிவாங்க நினைக்கும்போதும் அண்ணாமலை படத்தின் ஏலக்காட்சியை கொண்டு வந்துவிட்டுவிடுகிறார்கள்.
ஈரமான ரோஜாவே சீரியலிலும் இது நடக்கிறது. விஜய் டிவியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல் இது.

ஈரமான ரோஜாவே
ஈரமான ரோஜாவே சீரியல் கதை ரொம்ப ரொம்ப சிம்பிள். விவசாய குடும்பத்தோட கதை. சொந்தத்தில் கல்யாணம் செய்தும் வரதட்சணை எதிர்பார்ப்பது, மாமியார் கொடுமை இதெல்லாம் உண்டு. அதோடு வழக்கமாக விஜய் டிவியின் சீரியல் ஃ பார்முலா மாதிரி, அண்ணன் தம்பியை கல்யாணம் செய்துக்கொண்ட அக்கா தங்கைகள் இரண்டு பேருமே இன்னும் புருஷன் கூட சேர்ந்து வாழ ஆரம்பிக்கலை

இரண்டு ஜோடிகள்
இரண்டு ஜோடிகளும் தங்களது ஜோடியுடன் எப்போது எதை பேசலாம், மனதுக்குள் இருக்கும் காதலை எப்போது எப்படி சொல்வது என்று தினம் தினம் நகர்வதுதான் கதை. இதில் மலருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என்று ஒவ்வொரு முறையும் அவன் போன் செய்யும் போதெல்லாம் ஏமாந்து அவன் வேறு எதையாவது பேசுவது என்பதே மூன்று எபிசோட் கடந்து போச்சு.

விவசாயி பிறந்தநாள்
மலருக்கு பிறந்தநாள் சொல்லாத வெற்றி, அவள் தன்னைத் தேடி வயலுக்கு வரும்போது, வயல் நடுவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மலர் என்று பயிர்களை வளர வைத்து, அதை பறக்கும் காமிராவில் காண்பித்து அசத்துவது நன்றாக இருந்தது.

ஏல தொகை
மாமனார் ஏலம் எடுக்கப் போகும்போது எப்போதும் பழி வாங்கும் அழகரை பழிவாங்க இந்த முறை புகழ் போகிறான். வெறும் 12 லட்சம் பெறும் அந்த ஏலத்தை 48 லட்சம் வரை கேட்க, எதிரி அழகரும் சலிக்காமல் 48 லட்சத்து ஒரு ரூபாய் என்க, புகழ் அத்தோடு எழுந்து விடுகிறான்.
இந்த முறை அழகர் ஏமாந்து விடுகிறானாம். இந்த அண்ணாமலை ஏல டிரென்டிங்கை இன்னும் இவிங்க விடலை.. அது சரி.. நடைமுறையில் அப்படி எங்கியாவது நடக்குதா?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications