என் கொழுந்தியாள் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியே என் பாட்டை திருடிட்டாங்க.. வேதனையில் ஆண்டனிதாசன்
சென்னை: என் கொழுந்தியாள் ராஜலட்சுமியே அப்படி பண்ணிட்டாங்க, எங்கள் அடையாளத்துல வாழ்றாங்க என ஆண்டனிதாசன் வேதனையடைந்தார்.
தமிழ் சினிமாவில் நாட்டுப்புற பாடல்களின் மூலமாக பிரபலமடைந்தவர் அந்தோணிதாசன். இவர் பல கச்சேரிகளையும் தெருகூத்து நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இவர் சூது கவ்வும் படத்தில் காசு பணம் துட்டு என்ற பாடலை பாடியுள்ளார்.

அதன் பின்னர் பல படங்களில் பாடியுள்ளார். இவர் பாடகி உஷா உதுப்புடன் பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடலை தவிர கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா படத்தில் நடித்திருந்தார். இவர் தஞ்சை மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர். இவரது தந்தை நாதஸ்வர வித்வான்.
இவர் விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அனிருத் ஒரு பாடலை பாட அழைத்ததற்காக அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இவர் சந்தோஷ் நாராயணன், அனிருத், ஹிப்ஹாப் தமிழா, சித்தார்த் விபின், விஷால் சந்திரசேகர் உள்ளிட்டோருடன் செயல்பட்டுள்ளார். ஹிப் ஹாப் தமிழாவுடன் தமிழி என்ற ஆல்பம் பாடலையும் பாடியுள்ளார்.
இவர் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் அவர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்த காலத்தில் பாடல்களை எழுதிய பாடகர்களின் தகவல்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன்.
ஏனென்றால் என்னுடைய மனைவி எழுதிய பாட்டு ஒன்றை என்னுடைய கொழுந்தியாள் ராஜலட்சுமி விஜய் டிவியில் பாடினார். அப்போது அவர் இந்த பாடல் தனது சகோதரி எழுதியது என சொல்லவில்லை. இதனால் அந்த பாடல் அவருடையது போல் பார்க்கப்பட்டது. சோசியல் மீடியாவிலும் வைரலாக பரவியது. விஜய் டிவியில் நான் என் மனைவியுடன் போய் கேட்டேன்.
அதற்கு அவர்கள் நீங்கள் இந்த பாடலை பதிவு செய்திருக்கிறீர்களா என கேட்டனர். நான் திறமையை வெளிகாட்ட வேண்டும் என்றுதான் அப்படி செய்தேன். மற்றபடி இப்படியெல்லாம் நடக்கும் பாடலை பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. எந்த சூழலிலும் அந்த பாடல் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என வேதனையுடன் அந்தோணிதாசன் தெரிவித்தார்.

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தனது கணவர் செந்தில் கணேஷுடன் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் போட்டியிட்டவர்கள் எல்லாம் சினிமா பாடல்களை பாட இந்த ஜோடியோ நாட்டுப்புற பாடல்களை பாடி நடுவர்களை மகிழ்வித்தார்கள். அந்த சீசனில் இவர்கள் டைட்டிலையும் வென்றார்கள்.
அதன்பிறகு சின்ன மச்சான் பாடல், சாமி பாடல் எல்லாம் இவர்களுக்கு கிடைத்தன. விருமனில் கூட ராஜலட்சுமி பாடுவதாக இருந்தது. ஆனால் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதியே அந்த பாடலை பாடிவிட்டார். ராஜலட்சுமியும் செந்தில் கணேஷும் யூடியூப் சேனலை தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று கச்சேரி நடத்துகிறார்கள். ராஜலட்சுமி லைசன்ஸ் எனும் படத்தில் துப்பாக்கி ஏந்திய படி நடிக்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications