Web Series: வெப் சீரீஸ் களத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்...?
சென்னை: வெப் சீரீஸ் களத்தில் இயக்குநர் முருகதாஸும் கலக்க வந்துவிட்டார். சீரியலில் புகழின் உச்சிக்கு போன வாணி போஜன் இவரின் வெப் சீரீஸில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் ஆவது ஆரம்ப காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் வெப் சீரீஸ்களும் இப்போது இடம்பிடிக்கத் துவங்கி உள்ளன.
முருகதாஸ் தயாரிப்பில் ஒரு வெப் சீரிஸ் உருவாக இருக்கிறதாம். இந்த வெப் சீரீஸை முருகதாஸின் உதவியாளர் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

உறுதி செய்யவில்லை
இயக்குநர் முருகதாஸ் வெப் சீரிஸ் தயாரிக்க உள்ளார் என்றும். அதை அவரின் உதவி இயக்குநர் இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் கசிந்து வந்தாலும், யாரும் இன்னும் தங்களது சமூக வளைத் தளங்களில் உறுதியான தகவல்கள் இதுக் குறித்து பகிரவில்லை.

லாக்டவுன் காலம்
இப்போது லாக்டவுன் அமலில் இருக்கும் இந்த காலத்தில் வெறும் வாய் பேச்சுக்கள் மூலம் இந்த பேச்சு வார்த்தை நடந்து இருக்கிறது. பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் வெப் சீரிஸ் தயாரித்து வழங்கினால் வாங்கி ஒளிபரப்ப பிரபல ஓடிடி இயங்கு தளங்கள் தயாராக இருக்கின்றன.

சினிமா அவகாசம்
ஒரு சினிமாவை இயக்கி திரைக்கு கொண்டு வர இப்போதான காலக்கட்டங்களில் அனுமதியே இல்லை. வெப் சீரீஸ் என்றாலும் கூட இதே நிலைதான். என்றாலும், இதில் எதாவது விதிவிலக்கு இருக்கும்.. அதை வைத்து விரைவில் ஷூட் செய்து விடலாம் என்று முருகதாஸ் திட்டமிட்டு இருக்கிறார்.

நடிகை வாணி போஜன்
நடிகை வாணி போஜன், தமிழ், தெலுகு என்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது தெலுங்கு படங்கள் இப்போது ரிலீசுக்குத் தயாராக இருக்கின்றன. அந்த படங்கள் ஓடிடி இயங்கு தளத்தில் வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் இவரை வெப் சீரீஸில் கமிட் செய்ய முருகதாஸ் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications