நீங்க முதலில் டிவி சீரியலில் நடிச்சீங்கதானே... இசைப்புயல்!
சென்னை: சன் டிவியில் இசைப்புயல் எ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய போது, அவரை நகைச்சுவை நடிகர் விவேக் நேர்காணல் கண்டதை மறு ஒளிபரப்பு செய்தார்கள்.அப்போதுதான் விவேக்கைப் பார்த்து ரஹ்மான் நீங்க முதலில் டிவி சீரியலில் நடிச்சீங்கதானே என்று கேட்டார்.
இரண்டு கையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுகளை வாங்கி வந்த நேரம், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் அவரை போட்டி போட்டுக்கொண்டு நேர்காணல் செய்தன.
அந்த நேரத்தில் சன் டிவிக்காக ரஹ்மானை நேர்காணல் செய்து இருந்தார் நடிகர் விவேக். இருவரும் பல விஷயங்கள் குறித்து சுவாரஸ்யமாக பேசினார். மறு ஒளிபரப்பிலும் நிகழ்ச்சி பார்க்கக் நன்றாகவே இருந்தது.

இசை தெரபி சிரிப்பு தெரபி
மனம் ஒரு மாதிரி சோகமா இருக்கும்போது இசை தெரபி சரி வரும்னு படிச்சு இருக்கேன்...இது உண்மையா சார் என்று விவேக் ரஹ்மானைப் பார்த்து கேட்க, நிறைய படிப்பீங்க போல இருக்கே என்று கேட்டு ரஹ்மான் சிரித்தார். உங்களை பார்க்க வரும்போது இதை எல்லாம் தெரிஞ்சுக்காம வர முடியுமா என்று விவேக் சிரித்தார்.

தமிழ் படங்களின் நகைச்சுவை
தமிழ் படங்களின் நகைச்சுவை உங்களுக்கு பிடிக்குமா? எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்று கேட்டார் விவேக். தமிழ் படங்களின் நகைச்சுவை ரொம்ப நல்லா இருக்கும். உங்க காமெடி நிறைய பார்ப்பேன். நீங்க முதலில் டிவி சீரியலில் நடிச்சீங்க இல்லேன்னு கேட்டார். ஆமாம்னு சொன்னார் விவேக்.

கேபி சார்
ஒரு நாள் கேபி சார் என்னை கூப்பிட்டு, இந்த இசையை கொஞ்சம் கேளுடான்னு சொல்லி என்னை உட்கார வச்சார். அப்போது அந்த இசையை கேட்டுட்டு, என்ன சார் ரொம்ப சாதாரணமா இருக்குன்னு கேட்டேன். சாதாரணமா இருக்குல்ல.. நிச்சயம் ஜெயிக்கும்டான்னு சொன்னார். அந்த டியூன்தான் நீங்க போட்ட சின்ன சின்ன ஆசை பாடலின் டியூன் என்று சொன்னார் விவேக்.

சிரிச்சு சகஜமா
என் இசையில் பாட வரும் புது பாடகர்கள் ரொம்ப பயந்து பயந்து வருவாங்க. சகஜ நிலைக்கு வரவே முடியாத மாதிரி இருப்பாங்க. இப்படி இருந்தால், இவர்களிடம் இருந்து நல்ல திறமையை வெளிக்கொணர முடியாதுன்னு சொல்லி, அவங்ககிட்டே சகஜமா சிரிச்சு பேசுவேன். அப்புறம்தான் ரெக்கார்டிங் எல்லாம் என்று சொன்னார் ரஹ்மான். புது இயக்குனர்கள் கூட அப்படித்தான் பயந்து பயந்து வருவாங்க.. அவர்களையும் சிரிச்சு பேசி சகஜமாக்கித்தான் உட்கார வச்சு பேசுவேன் என்று சொன்னார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications