ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்துக்கும்.. மோகினி டே விவாகரத்திற்கும் சம்பந்தம் இல்ல! வழக்கறிஞர் பேட்டி
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா சார்பாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை விவாகரத்து செய்தியை சாய்ராவின் வழக்கறிஞர் வந்தனா அறிவித்திருந்தார். அதே நேரத்தில் ஏ.ஆர். ரஹ்மானிடம் வேலை பார்க்கும் மோகினி டே தன்னுடைய விவாகரத்தை அறிவித்திருந்தார். இந்த நிலையில் சாய்ரா வழக்கறிஞர் வந்தனா இது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவருடைய மனைவி சாய்ரா இருவரும் விவாகரத்து செய்வதாக வழக்கறிஞர் வந்தனா மூலம் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார். அடுத்த சில மணி நேரங்களில் ரஹ்மானிடம் பேசிஸ்டாக வேலை செய்யும் மோகினி கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதற்கு பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வழக்கறிஞர் வந்தனா இது பற்றி பேசி இருக்கிறார்.

அதில் ரஹ்மானின் பாசிஸ் மோகினி டே விவாகரத்திற்கும் ரஹ்மானின் விவாகரத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்று கேட்ட கேள்விக்கு அவர், "இல்லை இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சாய்ராவும் ரஹ்மானும் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இந்த விவாகரத்து. இரண்டு செய்திகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து வந்தனாவிடம் ரஹ்மானிடம் சாய்ரா விவாகரத்தில் ஜீவனாம்சம் எதுவும் கேட்கிறாரா? என்று கேட்ட கேள்விக்கு "இல்லை அவர்கள் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை" என்று கூறியிருக்கிறார். அதோடு இது இருவரும் சேர்ந்து எடுத்த இணக்கமான பிரிவு என்று கூறியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து சாய்ராவின் அறிக்கையில் "வலி மற்றும் வேதனை" என்று குறிப்பிட்டு இருந்தார். அது பற்றி கேள்வி கேட்டபோது வந்தனா "விவாகரத்து அவர்கள் இருவருக்கும் ஒரு வேதனைக்குரிய முடிவுதான். விவாகரத்து கொண்டாடப்பட வேண்டிய சந்தர்ப்பம் அல்ல. இவர்களுடைய திருமணத்தில் சாய்ரா ஏற்ற தாழ்வுகளை சந்தித்துள்ளார். அதோடு விவாகரத்துக்கு பின்னால் உள்ள உண்மையான காரணத்தைப் பற்றி விவாதிக்க சுதந்திரம் இல்லை" என்றும் கூறியிருக்கிறார்.
அடுத்ததாக கடந்த ஜூலை மாதம் நடந்த அம்பானி திருமணத்தில் ரஹ்மானும் சாய்ராவும் சிவப்பு கம்பளத்தில் ஒன்றாக போஸ் கொடுத்தனர். அது வெளி உலகத்திற்காக இருவரும் பொறுத்துக் கொண்டு அப்படி போஸ் கொடுத்தார்களா? என்று வழக்கறிஞர் வந்தனாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பேசுகையில் "இருவரும் அப்படிப்பட்டவர்கள் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில் இரண்டு பேரும் மிகவும் உண்மையானவர்கள் தான்" என்று கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ரஹ்மான் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பில் #arsairabreakup என்ற ஹாஷ்டேக் பயன்படுத்தியது பற்றி சாய்ரா வருத்தப்பட்டாரா? என்று வந்தனாவிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அவர் நோ கமெண்ட்ஸ் என்று கூறியிருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications