ஒல்லியா இருந்தாலும் நான் கில்லி மாதிரி.. கிறங்கடிக்கும் அரண்மனைக்கிளி ஜானு!
சென்னை: அரண்மனைக் கிளி சீரியலில் ஜானு கேரக்டரில் நடித்துள்ள மோனிஷா அஷ்ரக் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கட்டி வைத்திருக்கிறார்.
சினிமாக்களில் நடிக்கும் நடிகைகளை போலவே சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. சீரியல்களிலும் புதுப்புது இளம் கதாநாயகிகள் அறிமுகமாகி கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் அரண்மனைக்கிளி சீரியல் ஜானுவாக நடிக்கும் மோனிஷா தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். பாந்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறார் மோனிஷா.

வேலைக்காரப் பெண்ணாக இருந்து
இந்த சீரியலில் இவர் வீட்டு வேலைக்காரப் பெண்ணாக இருந்து இக்கட்டான சூழ்நிலையில் அர்ஜுனை திருமணம் செய்வார். திருமணத்திற்கு பிறகும் இவர் சார் என்று கூப்பிடுவது மற்றும் திருமணத்திற்கு பிறகு அர்ஜூனின் மீது காதல் வருவது அந்த குடும்பத்தின் ஒற்றுமைக்காக போராடுவது போன்ற கேரக்டர்கள் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து இருக்கிறதாம்.

விரதம் இருந்து உருக்கம்
இந்த சீரியலில் அர்ஜுனின் கால் சரியாவதற்காக இவர் இருக்கும் விரதங்களும் மாமியாரின் அன்பை சம்பாதிப்பதற்காக இவர் எடுக்கும் ஒவ்வொரு செயல்களும் ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளுகிறார்கள். மேலும் இந்த சீரியல் இவருக்கு அறிமுகம் சீரியலாக இருந்தாலும் தன்னுடைய திறமையை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் கேரளாவை சேர்ந்த வராம். ஆனால் தமிழ் அழகாக பேசுகிறார்

கேரளாவுக்கு ரிட்டர்ன்
இவருக்கு திருமணம் முடிந்து இவருடைய குடும்பம் எல்லாம் கேரளாவில் வசித்து வருகிறது. இவர் சென்னையில் இருந்து படப்பிடிப்புகளில் பங்கேற்கிறா். ஷூட்டிங் முடிஞ்சு அவ்வப்போது சென்னையிலிருந்து கேரளாவிற்கு பிளைட் மூலமாக போவாராம் . இது கஷ்டமாக இருந்தாலும் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்காகவும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார். மோனிஷாவுக்கு பிடித்தமான உணவு மீன் தானாம். கேரளா ஸ்டைலில் செய்தால் சப்புக் கொட்டி சாப்பிடுவாராம்.

ஒல்லிக் குச்சி உடம்பு
சென்னையில கேரளாவைப் போல பிரஷ்ஷான மீன் கிடைக்காததால் இவருக்கு கொஞ்சம் வருத்தமாம். சென்னையில் இருக்கும்போது அவருடைய பிடித்தமான பிரஷ்ஷான மீனையும் புட்டு வெள்ளையப்பம் ரொம்ப மிஸ் பண்ணுவாங்களாம். சாப்பாடு விஷயத்தில் மோனிஷா டயட் எல்லாம் இருப்பதில்லையாம். அவருக்குப் பிடித்ததை சாப்பிட்டு சந்தோஷமா தான் இருக்கிறாராம். இவரின் அழகின் ரகசியம் என்ன என்று கேட்டால் இது எங்க அம்மா பாட்டி கிட்ட இருந்து வந்ததுன்னு சொல்லியிருக்கிறார்.

ஒல்லியா இருந்தாலும் கில்லிதான்
நான் டயட்டும் இருப்பதில்லை எக்சர்சைஸ் பண்ணுவதில்லை எவ்வளவு சாப்பிட்டாலும் என் உடம்பு ஒல்லியாக தான் இருக்கிறது. அதனால் எனக்கு சந்தோஷம்தான் என்று சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்ல இவருடைய முடி நீளமான கருகருவென அடர்த்தியாக இருக்கிறது. இது இவருக்கு ஒரு கூடுதல் பிளஸ் தான். சினிமாக்களில் நடிகைகள் தங்களுடைய முடிகளை வெட்டி கலரிங் பண்ணி கொண்டு இருக்கும்போது சில நடிகைகள் மட்டும் இவ்வளவு நீளமான முடியை வைத்திருப்பது ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

போட்டோக்கள் வலம்
தற்போது இவர் கேரளாவில் இருக்கிறார். லாக்டோன் என்பதால் சென்னையில் இருந்து கேரளாவிற்கு வந்து குடும்பத்துடன் இருக்கிறார். சூட்டிங் இல்லாத நேரத்தில் இப்போ போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். இவருடைய போஸ்டுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இவருடைய போட்டோஸ்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கிளுகிளுப்பாகத்தான் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications