Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரண்மனை கிளி ஜானுவா இது.. வேற லெவலா இருக்கே.. ரசிகர்களுக்கு கிடைச்ச ஜாங்கிரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல்களில் படு பவ்வியமாக சேலையில் கலக்கிக் கொண்டிருந்த மோனிஷா இணையதளங்களில் இப்ப போட்டிருக்கும் போஸ்ட்கள் வைரலாக பரவி வருகிறது. அரண்மனைக்கிளி சீரியல் நடித்த ஜானுவா இது என்று ரசிகர்கள் உச்சுக் கொட்டி வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி சீரியலில் ஜானு என்ற ஜானகி யாக நடித்துக்கொண்டிருந்த மோனிஷா கேரளாவில் வயநாட்டில் பிறந்தவர். இவருடைய தந்தை ஒரு ஸ்கூலில் பிரின்ஸ்பல் ஆக இருக்கிறார். இரண்டு அண்ணன்களுக்கு ஒரே தங்கையான பாசமான சமத்துப் பொண்ணாக இருந்திருக்கிறார்.

இவர் ஸ்கூல் காலேஜ் படிக்கும்போது டான்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டு கலக்கியிருக்கிறார். அதன் பிறகு காலேஜ் முடித்து விட்டு மனதில் மனோரமா என்ற மலையாள சேனலில் ஒளிபரப்பான மஞ்சுருகும் காணம் என்ற சீரியல் தான் முதலில் அறிமுகமானார் .

 ஜானு குட்டி

ஜானு குட்டி

இந்த சீரியலில் மோனிஷா ஜானு குட்டி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலமாக மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து ஒன்றும் ஒன்றும் முன்று என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன்பிறகுதான் இவருக்கு ஒரு டாப்பர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விஜய் டிவியில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 தமிழ் சீரியல்

தமிழ் சீரியல்

அரண்மனைக்கிளி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது முதலில் கொஞ்சம் தயங்க தான் செய்திருக்கிறார். இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு இவருக்கு அந்த பயம் கொஞ்சம் கூட இல்லாமல் காணாமல் போய்விட்டதாம். அவருக்கு மலையாளம் என்றதால், தான் முதலில் தமிழ் பேசத் தெரியாத காரணத்தினால்தான் பயந்த்திருக்கிறார். இப்போது சரளமாக தமிழ் பேசுகிறார்.

 கேரளா டூ தமிழ்நாடு

கேரளா டூ தமிழ்நாடு

இதுவரைக்கும் கேரளாவில் இருந்து சென்னை வந்து தான் நடித்துக் கொண்டு போய்ருக்கிறார் .ஆனால் தற்போது இவரால் வரமுடியவில்லை. சீரியலும் முடித்து விட்டதால் வீட்டிலேயே இருக்கிறாராம். இவர் இவருடைய கல்லூரி நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும் போது இந்த லாக்டோன் வந்ததும் ஒருவிதத்தில் நல்லாதான் என்ஜாய் பண்ணி கொண்டு இருக்கிறார்.

 வீட்டிலேயே போட்டோஷூட்

வீட்டிலேயே போட்டோஷூட்

வீட்டில் இருந்து போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தில் ரசிகர்களை கதிகலங்க வைத்திருக்கிறாராம் .இவர் இதுவரைக்கும் சீரியலில் படு பவ்வியமாக அமைதியின் சொரூபமாக நடித்துக்கொண்டிருந்தார். உண்மையிலேயே தமிழ் மக்கள் இவர் கேரக்டர் இதுவேதான் என்று நினைத்து விட்டார்கள் அந்த அளவிற்கு இவர் கேரக்டரில் இணைந்து நடித்திருப்பார் .ஆனால் தற்போது இவர் போட்டிருக்கும் போஸ்டர்கள் ரசிகர்களை பார்த்து ஷாக் ஆகி விட்டார்களாம்.

 போட்டோ ஷூட் டிரெண்ட்

போட்டோ ஷூட் டிரெண்ட்

இணையதளத்தில் இப்போ இருக்கிற டிரண்டு போட்டோஷூட்டை இவரும் பின்பற்றி வருகிறார். நடிகர்கள் மக்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்பதில் முழு கவனமாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள். அந்த வழியிலே இவரும் இப்போ கடைப்பிடிக்கிறாராம். சில புகைப்படங்கள் சேலை கட்டிக்கொண்டு விதவிதமான நகை அலங்காரத்தோடு ஜொலிக்கிற மாதிரி போட்டோஸ் போட்டிருக்கிறார்.

 நெக்குருகும் ரசிகர்கள்

நெக்குருகும் ரசிகர்கள்

அதை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் ரசித்து கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். சேலைகளில் கலக்கிக் கொண்டிருந்த இவர் ஹோம்லியாக மட்டுமல்லாமல் தண்ணால் கவர்ச்சியிலும் கலக்க முடியும் என்று நிரூபிக்கும் வகையில் அரை டவுசர்யோடு மேலே போட்டிருக்கும் சட்டை பட்டன்களை திறந்து விட்டு படு ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோஸ் போட்டு இருக்கிறார் .இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் ஷாக்காகி போனார்களாம்.

 பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்

பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்

சில ரசிகர்கள் இவரை பல்வேறு கோணங்களிலும் ரசிச்சு கமெண்ட்களை போட்டிருக்கிறார்கள். அதுவும் அவர் கேரள சாயலில் புடவை கட்டிக்கொண்டு கையில் குழந்தையோடு கொடுத்திருக்கும் போஸ் வேற லெவல் இருக்கிறதாம். அவருக்கும் கேரள மாடல் புடவை மற்றும் கேரள அலங்காரமும் படு தூக்கலாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிகிறார்கள். என்னதான் சொல்லுங்க மோனிஷா மோனிஷாதான் என்று ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+