Aranmanai kili serial: கையில சாப்பிட்டாத்தான் ஜீரணமாகும்னு சொல்லு ஜானு!
சென்னை: பணக்காரங்க ஏழைங்களை ராகிங் பண்றது எப்படின்னு சினிமா மற்றும் டிவி சீரியல்களைப் பார்த்து கத்துக்கலாம். இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அரண்மனை கிளி சீரியல் ஒரு ரகம்.
காரணம் அன்றாட வாழ்வியலில் பணக்காரங்களை ஏழைகள் சந்திக்கும் கால நேரம் அமைவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. பள்ளிகளில் அனைவரும் சரிசமம் என்கிற சூழலில் பள்ளிக் குழந்தைகளிடம் இதை காண்பது அரிது.
கல்லூரிகளில் மாணவ மாணவிகள் இப்படி ஏழைகளை கேலி செய்வது என்பது அரிதாக அங்கங்கு நடப்பது கண்டிருக்கிறோம். ஆனால், குடும்பங்களில் பணக்கார மருமகள், ஏழை மருமகள் பாகுபாடு இன்னும் இ ருப்பது உண்மைதான்.

கலாய்க்கற விருந்தாளிகள்
பணக்கார வீட்டில் விருந்தாளிகள் வீட்டில் வாழும் ஏழை மருமகளை கலாய்ப்பது என்பது இருக்கலாம். ஆனால், இந்த இளம் வயசு பெண்ணின் தோழிகள் வந்து கலாய்ப்பது என்பது புதுவிதமாக இருக்கிறது. அருண் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணின் தோழிகள் ஜானுவை கிண்டல், கேலி என்று கலாய்க்கிறார்கள்.

டான்ஸ் ஜானு
ஜானுவை டான்ஸ் ஆட கூப்பிட்டு அவள் தடுக்கி விழுகிறாள். அதை பார்த்து இந்த இளம் பெண்கள் சிரிக்கிறார்கள். ஜானு தனி அறையில் வந்து அழுகிறாள்.வழக்கம் போல அர்ஜுன் வந்து சமாதானம் செய்து, டான்ஸ் ஆடறது மட்டும்தான் பெரிய விஷயமா? உன்னை மாதிரி அவங்களுக்கு சமைக்கத் தெரியுமா? எல்லாருக்கும் எல்லாம் தெரியணும் என்கிற அவசியம் இல்லை ஜானுன்னு சொல்லிட்டு போறான்.

டான்ஸ் தெரியாதா?
எனக்கா டான்ஸ் ஆட தெரியாது.. இப்போ காட்டறேன் பாருங்கன்னு தனியா ரூமில் ஆடிப் பார்க்கிறாள். நன்றாக ஆடிக்கொண்டு இருந்தவள் திடீரென்று விழுந்து கால் சுளுக்கிக் கொள்கிறது. அந்த நேரம் பார்த்து விஜயா ஜானு ஜானுன்னு கூப்பிட்டுக்கொண்டே வர, ஜானு புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்துக் கொள்வது ரொம்ப இன்னொசென்டாக இருக்கிறது. விஜயா வந்து என்ன ஜானுன்னு கேட்க, ஒண்ணும் இல்லக்கா ஏசி அதிகமா இருக்குது.. குளிருதுன்னு சொல்றா.

ஃபோக் ஸ்பூன்
சாப்பிடும்போது ஜானுவை உட்கார சொல்லி விருந்தாளி தோழிகள் கூற, அர்ஜுனும் உட்காரு ஜானுன்னு சொல்கிறான். ஜானு சாப்பிட உட்காருகிறாள். கையில் சாப்பிடுவதை பார்த்து, என்ன ஜானு உனக்கு ஃபோக்.ஸ்பூன், நைஃப் இதெல்லாம் வச்சு சாப்பிடத் தெரியாதான்னு கேட்க, அவளும் அதை எடுத்து சாப்பிட ஆரம்பிக்கிறாள்.வடை தெறிச்சு தட்டைத் தாண்டி விழுது, அனைவரும் சிரிக்கிறார்கள்.

நல்ல ஜீரணம்
இது பழசுதான்.. ஆனாலும் ஜானு என்கிற பெண் இந்த சீரியலில் இப்படி கஷ்டப்படுவது என்பதை சீரியல் ஆர்வலர்கள் உச்சு கொட்டிப் பார்க்கிறார்கள். அப்போதுதான் அர்ஜுன் சொல்கிறான், ஜானு கையில் சாப்பிட்டால்தான் ஆரோக்கியமாக உணவு ஜீரணமாகும் என்று சொல்லிக் கொடுத்து வளர்ந்த பொண்ணு. அதோட இந்த ஸ்பூன் போன்ற அயிட்டங்கள் எல்லாம் மத்தவங்கள் வாயில் வச்சு சாப்பிட்டது என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்டவ. சாப்பாட்டை அவ கையில் எடுத்துதான் சாப்பிடுவாள் என்று சொல்கிறான்.
உண்மை..நல்ல விஷயம்தானே!
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications