Aranmanai Kili Serial: தம்பதியாக இருந்தாலும் வெறும் காதல் மட்டுமே...!
சென்னை: விஜய் டிவியின் பல சீரியல்களில் தம்பதியராக இருந்தாலும், அவர்களுக்குள் வெறும் காதல் மட்டுமே இழையோடி வருவதை மெல்லிய வருடலாகவே காண்பித்து வருகிறது விஜய் டிவி.
இதே போல ஒரு சீரியல்தான் அரண்மனை கிளி.இருவருக்கும் முதலில் மனம் ஒப்பாமல் திருமணம் நடப்பது... பின்னர் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பது என்று.
விவாகரத்துக்கு முடிவு செய்து அதன் வேலைகள் ஒரு புறம் நடந்துகொண்டு இருக்கும், இன்னொரு பக்கம் இருவரும் காதலில் மூழ்கித் திளைக்கிறார்கள்.

மாறிய மீனாட்சி அம்மா
மீனாட்சி அம்மா ஜானுவின் மேல் இருந்த கோவத்தை மறந்து நன்றாக பேசிக்கொண்டு இருந்தாலும், ஜானுவை விவாகரத்து செய்ய வேணடாம் என்று சொல்லவில்லை. ஜானுவிடம் நிறைய பொறுப்புக்களை அவ்வப்போது ஒப்படைத்து வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகை
இந்த வருஷம் தீபாவளி பண்டிகையை ஜானுதான் ஏற்பாடு செய்து நல்ல படியாக நடத்த வேண்டும் என்று மீனாட்சி அம்மா உத்தரவு போடறாங்க. ஜானுவும் சந்தோஷமாக துர்கா,விஜயா அக்கா மற்றும் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் ஹாலில் கூட வைத்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து பேசுகிறாள்.

அதிகாலை 5 மணிக்கு
அதிகாலை 5 மணிக்கு எல்லோரும் எழுந்து கங்கா ஸ்னானம் செய்யணும்னு கண்டிஷன் போட..நடு ராத்திரி எழுந்துக்கறதா எங்களால முடியாதுன்னு சொல்றாங்க. எண்ணெய் தேய்ச்சு குளிக்கறதா.. எங்களால முடியாதுன்னு சொல்றாங்க. எல்லாரையும் சமாதானப் படுத்திட்டு, ரூமுக்கு போய் புருஷன் அர்ஜுனிடம் சொல்ல வருகிறாள்.

என் சட்டை
சார் எல்லாரும் நாளைக்கு காலையில் 5 மணிக்கு எழுந்துருவாங்க. நீங்களும் எழுந்திருக்கணும்னு ஜானு சொல்ல, நிச்சயமா என்னால எழுந்திரிக்க முடியாது ஜானுன்னு சொல்றான்.என்ன சார் நீங்களே எழுந்திருக்கலேன்னா எனக்கு ஒத்துழைப்பு குடுக்கலைன்னு தப்பா பேச மாட்டாங்களான்னு கேட்கிறாள் ஜானு.

காதல் என்றாய்
ஜானு என் பக்கத்துல படுத்துகிட்டு உன் புடவை முந்தானையில், என் சட்டையை முடிச்சு போட்டு வை. நீ எழுந்திருக்கும் போது நானும் எழுந்துப்பேன்னு சொல்றான். அவள் முந்தானையை இவனிடம் கொடுக்க அவன் முடிச்சு போடுகிறான். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications