Aranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்!
சென்னை: தொலைக்காட்சி சீரியல்களில் ஆரம்பத்தில் பொறுப்பு துறப்பு என்று ஒரு ஸ்லைட் போடுவார்கள். அதில் இந்த நிகழ்ச்சி வெறும் கற்பனை கதையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்படுபவை அல்ல என்று இருக்கும்.
ஆனால், இப்போது விஜய் டிவியின் தாழம்பூ மற்றும் அரண்மனை கிளி சீரியலில் முதல் விளம்பர இடைவெளியிலும் புதுவிதமாக ஒரு பொறுப்பு துறப்பு, மற்றும் ஸ்க்ரோலிங் வேறு போடுகிறார்கள்.
இரண்டு சீரியல்களுமே இயற்கைக்கு புறம்பானதுதான் என்றாலும், வெறும் கற்பனையே என்று மக்களுக்கு நினைவு படுத்துவது நன்றாகத்தான் இருக்கிறது.

விஜய் டிவி சீரியல்
அரண்மனை கிளி சீரியலில் சிவனின் ஆல கால விஷத்தைத் தாங்கிய ஒரு பாம்பு வந்து உன்னைத் தீண்டும். அதன் விஷம் உன் உடம்பில் 30 நாட்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும். 30 வது நாள் உன் உயிர் போவதற்குள் நீ இந்த காட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று ஜானுவிடம் சித்தர் சொல்கிறார்.

நாக பூஜை வீட்டில்
துர்கா வேண்டும் என்றே வீட்டில் நாக பூஜை செய்ய வேண்டும். நமது வீட்டில் யார் மீதோ பாம்பு இருக்கிறது என்று கூறுகிறாள்.சரி துர்கா உன் ஆசைப்படி நாக பூஜை செய்துக்கோ என்று மீனாட்சி அம்மாவும் சொல்லிவிட ஜானுவின் மீதுதான் நாக சர்ப்பம் இருக்கிறது.அது வெளியில் தெரிந்துவிடும் என்று ஜானு வீட்டில் பூஜை நடக்கும் நேரத்தில்இருக்கக் கூடாது என்று கிளம்ப நினைக்கிறாள்.

தாழம்பூ சீரியல்
இப்படி நாக உலகம் என்று பாம்பை மையமாக வைத்து தாழம்பூ சீரியலும் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இயற்கைக்கு புறம்பாக ஒளிபராப்பாகும் சீரியல், மூட நம்பிக்கையை மக்களின் மனதில் வளர்த்து விடும் நோக்கத்துக்காக ஒளிபரப்படுவது இல்லை வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சி மட்டுமே.

காலம் காலமாக
நமது பண்டைய தமிழர்கள் காலம் காலமாக இது போன்ற கற்பனைக் கதைகளை சொல்லி, இதை ஒரு பொழுது போக்காவே மாற்றி உள்ளனர்.அதன் அடிப்படையில் பொழுது போக்குக்காக மட்டுமே ஒளிபரப்பப் படுகிறது இந்த தொடர் என்று ஆரம்பத்திலும் முதல் விளம்பர இடைவேளை ,சீரியல் ஒளிபரப்பாகும்போது ஸ்க்ரோலிங் என்று போட்டும் தெளிவுப் படுத்துகிறார்கள்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications