Aranmanai kili Serial: அரண்மனை கிளி தல தீபாவளி இன்னும் ஆரம்பிக்கலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் இன்னும் தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பிக்கலைங்க. வேலைகள் சுறுசுறுப்பா நடந்துகிட்டு இருக்கு.

மீனாட்சி அம்மா தீபாவளி கொண்டாட்ட பொறுப்புக்களை ஜானுவிடம் ஒப்படைச்சு இருக்காங்க. அவ செய்யறதை துர்கா, விஜயாவின் மாமியார் குறை சொல்லிகிட்டே இருக்காங்க.

இவளை தீபாவளி கொண்டாட்டத்தை சரியா செய்யவிடக் கூடாது என்று சதி செய்யறா துர்கா. ஜானு மீனாட்சி அம்மா பாராட்டுதல்களுடன் தீபாவளி ஏற்பாடுகளை செய்துகிட்டு இருக்கா.

5 லட்சம் ரூபாய்

5 லட்சம் ரூபாய்

மொத்தம் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து தீபாவளி துணிமணிகள், பலகாரங்கள், பட்டாசுகள் என்று குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்பாடு செய்யணும்னு சொல்லிடறாங்க மீனாட்சி அம்மா. துர்கா பணத்தை மிச்சப் படுத்தறேன்னு விலை குறைவா புடவைகள் எடுத்துட்டு வந்துடப்போறே.. அப்புறம் நாங்க யாரும் அந்த புடவையை கட்ட மாட்டோம்னுய் சொல்றா.

ஜானு ஐடியா

ஜானு ஐடியா

ஜானு, கோயிலில் அம்மனுக்கு உடுத்தி, பிறகு ஏலம் விடும் பட்டுப் புடவைகளை ஆளுக்கு ஒன்று என்று எடுத்துட்டு வந்து குடுக்கறா. .மீனாட்சி அம்மா அம்மனுக்கு உடுத்திய புடவை என்று ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அம்மனுக்கு உடுத்திய புடவையை படையலில் வைக்கலாமா? இதுல லாஜிக் பார்க்க கூடாது.

அம்மன் புடவை

அம்மன் புடவை

மீனாட்சி அம்மா புடவைகள் எல்லாமே அம்மனுக்கு உடுத்திய பட்டுப் புடவைகள் வாங்கி வந்து அசத்தி இருக்கா. இப்போதான் எனக்கு .ஜானுவின் மேல் நம்பிக்கை வந்து இருக்குன்னு புகழறாங்க. அதோட விவாகரத்துக்கு ஏற்பாடுகள் நடத்துக் கொண்டு இருந்தாலும், அதை மறந்தது போல ஜானு அர்ஜுனுக்கு இது தலை தீபாவளின்னு வேற சொல்றாங்க.

ஜானு வீட்டில்தான்

ஜானு வீட்டில்தான்

முறையாக பார்க்கப் போனா இந்த தீபாவளி ஏற்பாடுகள் ஜானு வீட்டில்தான் நடந்து இருக்கணும்.ஜானு அப்பாவுக்கு இதை எல்லாம் ஏற்பாடு செய்ய வசதி பத்தாதுன்னுதான் அவரையும் தீபாவளிக்கு இங்கேயே வர வழைச்சுட்டேன். ஜானு சொல்ற மாதிரி தீபாவளி பலகாரங்கள் மாமி வீட்டில் ஆர்டர் கொடுத்தகு வாங்கிக்கலாம். எதிலும் தீபாவளி அதுவுமா அடுப்படியில் வேகணும்னு சொல்றாங்க.

இதில் கடுப்பான துர்கா. ஜானுவின் மேல் இருக்கும் பாம்பை வரவழைக்க பாம்பாட்டியை வச்சு மகுடி ஊத வைக்க ஏற்பாடு செய்யறா. மொத்தத்தில் அரண்மனை கிளி சீரியலில் தீபாவளி இன்னும் ஆரம்பிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+