Aranmanai kili serial: அம்மா பிள்ளை பேச்சுன்னா இப்படி இருக்கணும்....!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜானுவுடன் வாழ விரும்புவதை அர்ஜுன் அம்மாவை தனியாக அழைத்து சொல்ல, அம்மா மீனாட்சி அம்மாவின் பேச்சு பிள்ளையின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து இருக்க... அம்மா பிள்ளை பேச்சுன்னா இப்படி இருக்கணும்னு சொல்லும் அளவுக்கு இருந்தது.

விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில்தான் இந்த காட்சி மிக அருமையாக இருந்தது. ஒரு அம்மாதான் மாமியாராக மாறும்போது வேறு அவதாரம் எடுக்கறாங்க.

ஆனால், அம்மா மாமியாராக இருக்கும்போதும் அம்மாவாகவே இருந்து மகனிடம் பேசுவது மிக அருமை. இந்த சீரியல் மூலம் கத்துக்க வேண்டியது நிறைய இருக்குது.

 அருமை அர்ஜுன்

அருமை அர்ஜுன்

அரண்மனை கிளி சீரியலில் அர்ஜூனாக நடிக்கும் நடிகர் உண்மையில் எந்திரம் இருக்கும் அந்த சக்கர நாற்காலியில் மிக லாவகமாக வலம் வருவது இயல்பாக இருக்கிறது. இதற்கென மனிதர் தனி பயிற்சி எடுத்து இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ரொம்ப நல்லா நடிச்சு இருக்கார்.

 அர்ஜுன் ஜானு

அர்ஜுன் ஜானு

ஜானுவை திருமணம் ஆன புதிதில் வெறுத்த அர்ஜுன் ஜானுவை டைவர்ஸ் பண்ணுவதாக முடிவு எடுத்துடறான். அம்மா மீனாட்சி அம்மாவும் மகனின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் உன் விருப்பம் அர்ஜுன் என்று சொல்லி அனுமதி குடுத்துடறாங்க.

 மாற்றிய ஜானு

மாற்றிய ஜானு

கொஞ்சம் கொஞ்சமாக அர்ஜுன் மனதில் இடம் பிடித்த ஜானு, மீனாட்சி அம்மாவின் மனதிலும் இடம் பிடித்து விடுகிறாள். என்றாலும் மகனின் விருப்பம் எதுவோ அதுதான் தனது முடிவு என்று மீனாட்சி அம்மா பேசாமல் இருந்துடறாங்க. ஜானுவின் மீது அன்பு, கனிவு காண்பிக்கறாங்க.

 அர்ஜுன் மீனாட்சி அம்மா

அர்ஜுன் மீனாட்சி அம்மா

தான் ஜானுவுடன் வாழ விரும்புவதை அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கும் அர்ஜுன், அம்மாவை தனியாக ஒரு இடத்துக்கு வர சொல்றான். அம்மா சொல்லு அர்ஜுன் தனியா வர சொன்னே வந்துட்டேன்.. பேசுன்னு சொல்றாங்க. அம்மா ஜானுவை முதலில் மலை உச்சியில் இருந்து பார்த்தேன்.. இன்னிக்கு அவளுக்கு பக்கத்தில் இருந்து அவளை பார்த்து புரிஞ்சுக்கிட்டேன்மா..

உண்மையா சொல்லணும்னா அவ கூட நான் வாழ விரும்பறேன்.. எனக்காக அவ எவ்ளோ தியாகம் செய்து இருக்காம்மான்னு சொல்றான்.

 நாளைக்கு முடிவு

நாளைக்கு முடிவு

ஆமாம் அர்ஜுன் எனக்கும் ஜானுவின் மேல ரொம்ப நம்பிக்கை வந்துருச்சு. ஆனால், நாளைக்கு டைவர்ஸ் கேஸ் வருது. அதை நினைச்சா கஷ்டமா இருக்குன்னு சொல்றாங்க. அம்மா இப்போ நான் என்ன முடிவு எடுக்கட்டும்னு அர்ஜுன் கேட்க, உன் விருப்பம்தான் அர்ஜுன். உன் விருப்பத்துக்கு ஏற்பத்தான் என் முடிவும் இருக்கும்னு சொல்றாங்க. அம்மா நான் ஜானுகூட இந்த வாழ்க்கையை வாழ விரும்பறேன்னு சொல்றான்.

சரி.. டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிடலாம்னு சொல்லி அம்மாவை என்ன பேசணுமோ அதை அறிவுரையா சொல்றாங்க. நிஜமா அம்மா பிள்ளை பேச்சுன்னா இப்படித்தான் இருக்கணும்னு பார்க்கற எல்லாருக்குமே தோணும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+