Aranmanai Kili Serial: தன்னை நிராகரிச்ச பொண்ணுக்கு அர்ஜுன் தாலி வாங்கித் தர்றானே!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியல் கதை, இப்போதுதான் முக்கியமான கட்டத்துக்கு வந்திருக்கிறது என்று சொல்லலாம்.
அதாவது அர்ஜுன் ஜானு விவாகரத்து விவகாரம் சூடு பிடிக்கத் துவங்கி இருக்கு. அதே சமயம் ஜானுவின் மனசில் இப்போதைக்கு ஒரு பொஸசிவ் வந்திருக்கு. தன் புருஷனை யாருக்கும் விட்டுத் தர கூடாது என்று.
அர்ஜுனிடம் சொல்ல வரும்போது அவளுக்கு தொண்டையில் பேச்சு வர மாட்டேங்குது. எதுவோ பேச வந்து எதையோ செய்துவிட்டு போவது போல இன்னும் அர்ஜுனிடம் பேச தைரியம் வராதவளாக இருக்கிறாள்.

பரம்பரை தாலி
ஜானுவை ஷாப்பிங் போகலாம் வான்னு அழைச்சுக்கிட்டு போறான் அர்ஜுன். எதுக்கு சார் இப்போ ஷாப்பிங்ன்னு ஜானு கேட்க, ஒண்ணும் இல்லை.. பேசாம வான்னு சொல்லி அழைச்சுட்டு போறான். அங்கே போயி, ஒரு கல்யாண புடவை எடு ஜானுன்னு சொல்றான். கல்யாண புடைவையா டைவர்ஸ் பண்ணிட்டு உடனே சார் இன்னொரு கல்யாணத்துக்கு தயாராகிட்டாரான்னு நினைக்கிறாள்.

பரம்பரை தாலி
தாலிக்கு ஆர்டர் பண்ணி இருக்கேன் ஜானு. அவர்தான் போன் செய்தார். தாலி ரெடியாகிருச்சாம்... நம்ம பரம்பரை தாலி மாதிரிதான் செய்து இருக்காராம். வீட்டுக்கு போனதும் வர சொல்லி இருக்கேன் ஜானுன்னு சொல்றான். ஓ.. பரம்பரை தாலிக்கு வேற ஆர்டர் குடுத்தாச்சா... சார் உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியாது சார்னு தனக்குத் தானே பேசிக்கறா.

அர்ஜுன் விஜயாக்கா
என்னடி போகும்போது குதூகலமா போனே.. இப்போ மூஞ்சை இப்படி வச்சுக்கிட்டு வர்றேன்னு கேட்கறா. விஜயாக்கா எனக்கு மனசு சரி இல்லைக்கான்னு சொல்றா.. என்னாச்சு விவரமா சொல்லுடீன்னு கேட்கறா விஜயா. அக்கா ஷாப்பிங் போன இடத்தில் கல்யாண புடவை, தாலின்னு வாங்கினாருக்கா.எதுக்குன்னு கேட்டால் சொல்ல மாட்டேன்னு சொல்றார். இன்னிக்கு இதை பத்தி பேசாம விட மாட்டேன்க்கான்னு சொல்லிட்டு மாடிக்கு கோவமா போறா.

என் தங்கம்
இப்படி சொல்லிட்டு போடி என் தங்கம்.. இப்போதுதான் உன் புருஷன்னு நினைப்பே உனக்கு வர ஆரம்பிச்சு இருக்குன்னு சொல்றா விஜயா. சார்..என்னால் உங்களை விட்டு போக முடியாது சார். உங்க கூட மட்டும்தான் சார் என் வாழ்க்கைன்னு சொல்ல வந்துட்டு, பேசாம நிக்க, என்ன ஜானு நிக்கறேன்னு கேட்கறான் அர்ஜுன்.

ஏன் குங்குமம்
சார், கல்யாண புடவையும், தாலியும் வாங்கினீங்களே அது யாருக்கு" இந்த தாலீக்கு நான் ஏன் குங்குமம் வைக்கணும்னு கேட்கிறாள் ஜானு. அந்த தாலி உங்க அக்கா ரேணுகாவுக்கு ஜானு. அவளுக்கு நாமதான் தாலி வாங்கணும். ரேணுகாவுக்கு கல்யாணம் தெரியுமான்னு கேட்கறான்.
ரேணுகா மீனாட்சி அம்மாவை பழி வாங்க அர்ஜுனின் தம்பியை காதலிக்கிறாள். முதலில் அர்ஜுனுக்கு பேசி முடித்து,அர்ஜுனை பிடிக்காமல் ஓடிப்போனவள் ரேணுகா.தன்னை நிராகரிச்ச ரேணுகாவுக்கு தாலி வாங்கித் தர்றான் அர்ஜுன். பெரிய மனசுதானே!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications