Aranmanai Kili Serial: மறுபடியும் ஜானுவுக்கு கடுமையான விரதம்.. பக்தி சோதனையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியல் நாயகன் அர்ஜுன் ஒரு கார் விபத்தில் சிக்கி அவனால் நடக்க முடியாமல் போகிறது. வீல் சேரில் இருந்துதான் எல்லா வேலைகளையும் அர்ஜுன் செய்து வருகிறான்.

தோட்டத்தில் வேலை செய்யும் வேலையாளின் இரண்டாவது மகள் ஜானகியை அர்ஜுனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார் மீனாட்சி அம்மா. ஜானுவின் படிச்ச அக்காவை நிச்சயம் செய்திருந்த நிலையில், அவள் அர்ஜுனை பிடிக்கவில்லை என்று யாருக்கும் தெரியாமல்போயிட,

அப்போது உடனடியாக ஜானுவை கல்யாணம் செய்து வச்சுடறாங்க மீனாட்சி அம்மா. இருந்தாலும், படிக்காத ஜானு அர்ஜுனுக்கு செட்டாக மாட்டாள் என்று விவாகரத்து செய்யவும் முடிவு எடுத்து வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.

அர்ஜுன் சார் நடக்க

அர்ஜுன் சார் நடக்க

அர்ஜுன் சார் எழுந்து நடக்கணும் என்று காடு, மேடு, மலை என்று சுத்தி வந்து மூலிகை பறிச்சுக்கிட்டு வர்றா. துர்காவின் சதியால் வைத்தியம் தட்டி தட்டி போகிறது. நாக தேவதை கோயிலில் தேவதைக்கு வாக்கு ஒண்ணு கொடுத்துட்டு வந்து. ஜானு வேண்டுதலை நிறைவேற்ற வாசுகி பாம்பு வந்து அர்ஜுனின் காலை தீண்டி அவனை நடக்க வச்சுருது.

வீட்டில் வேணாம்

வீட்டில் வேணாம்

வீட்டில் யாருக்கும் சொல்ல வேணாம் சார்.. உங்களால் நல்லா நடக்க முடியும் போது சொல்லிக்கலாம்னு ஜானு சொல்ல, நடக்க முடிந்ததை வீட்டில் சொல்லவில்லை.இதனால் ஜானுவின் அருமை மீனாட்சி அம்மாவுக்கு தெரியவில்லை. அர்ஜுன் ஜானு நல்லா இருக்கணும்.. அவ சின்ன பொண்ணு..நல்ல பையனா பார்த்து கல்யாணம் செய்துகிட்டு வாழட்டும்னு விவாகரத்துக்கு சம்மதிக்கிறான்.

அக்கா ரேணுகா

அக்கா ரேணுகா

ஜானுவின் அக்கா ரேணுகா திரும்பி வந்து மீனாட்சி அம்மாவை பழி வாங்க போறேன்னு அர்ஜுனின் தம்பியை காதலிக்க ஆரம்பிக்கிறாள். அவளது ஒரே நோக்கம், மீனாட்சி அம்மா வீட்டுக்கு மருமகளா போய் அவங்களை பழி வாங்கணும் என்பதுதான். ரேணுகாவின் அப்பாவுக்கு இந்த காதல் விஷயம் தெரிஞ்சு அவர் பொண்ணையே ஆணவ கொலை மாதிரி விஷம் வைத்து சாகடிக்க நினைக்கிறார்.

ஜானு துர்கா

ஜானு துர்கா

துர்காவுக்கு அர்ஜுன் தம்பி காதலிப்பது ஜானுவின் அக்கா ரேணுகாவைத்தான்னு தெரிஞ்சும், அவளும் சேர்ந்து மீனாட்சி அம்மாவை பழி வாங்க இது பற்றி வீட்டுக்குச்சொல்லாமல் இருக்கிறாள். அனால், இது தெரிந்த ஜானு, அக்காவை திட்டிட்டு கிளம்புகிறாள். அப்போது பார்த்து கார் நின்றுவிட தன்னை யாரோ அழைப்பது போல இருக்கிறது ஜானுவுக்கு.

சித்தர் வாக்கு

சித்தர் வாக்கு

குரல் கூப்பிட்ட திசையில் போயி பார்க்க ஒரு காடு மாதிரி வருகிறது.அந்த காட்டில் ஒரு சித்தர் வந்து உன் புருஷன் நடந்தா எதை வேணும்னாலும் செய்வேன்னு சொன்னியே அந்த வாக்கை மறந்துட்டியான்னு கேட்டு மிரட்டறார். ஜானு இன்னொரு கடுமையான விரதம் பக்தி போருக்கு ஆயத்தமாக வேண்டும் போல கதை நகர்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+