Aranmanai Kili Serial: வெள்ளி கொலுசு மணி...ஜானுவுக்கு கொடுப்பினை இல்லையா?
சென்னை: ஜானு அர்ஜுன் உதாரண ஜோடி மாதிரி இருந்தாலும் உள்ளுக்குள் விவாகரத்து என்கிற பிரச்னை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
ஜானுதான் உங்களை பிரிஞ்சாலும், உங்க நினைப்புலதான் சார் நான் வாழுவேன்னு சொல்லிகிட்டு இருக்கா. அர்ஜுன், தன்னை பிரிஞ்சால் ஜானு இன்னும் நல்லா வாழ்வா.
கால் நடக்க முடியாத தன்னிடம் அவள் மாட்டிக்கொண்டு கஷ்டப்படுவதை விட ,அவளுக்கு நாமே நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தர்றது நல்லதுன்னு நினைக்கிறான் அர்ஜுன்.

கொலுசு ஜானுவுக்கு
ஜானுவுக்கு ஆசையாக கொலுசு வாங்கிட்டு வந்து தர்றான் அர்ஜுன். ரொம்ப பிடிச்சு இருக்கு சார்.. நிஜமா என்னக்காக நீங்களே வாங்கினீங்களா சார்னு கேட்கிறாள்.ஆமாம் ஜானு நானே உனக்காக செலக்ட் பண்ணினேன்னு சொல்றான் அர்ஜுன்.என்னால நம்பவே முடியலை சார்.. இவ்ளோ அழகான டிசைன் செலக்ட் பண்ணி இருக்கீங்கன்னு குதூகலிக்கிறாள் ஜானு.

ஜானு கொலுசு
ஜானு உன் காலை காமி ஜானு நானே உன் காலுக்கு கொலுசை போட்டு விடறேன்னு சொல்றான். வேணாம் சார்..என்கிட்டே குடுங்க நானே போட்டுக்கிட்டு வந்து உங்ககிட்ட காமிக்கறேன்னு சொல்றா.என்ன ஜானு எல்லாரும் புருஷன்தான் தனக்கு கொலுசை மாட்டிவிடணும்னு ஆசைப்படுவாங்க.காமி ஜானு நானே போட்டு விடறேன்னு சொல்றான்.

நானே போட்டு
இல்லை சார் நானே போட்டுக்கிட்டு வந்து காமிக்கறேன்னு ஜானு சொல்ல, இல்லை நான் விட மாட்டேன்.நான்தான் உனக்கு போட்டுவிடுவேன் என்று அடம் பிடிக்கிறான் அர்ஜுன். ஜானு பிடிவாதமாக வேணாம் சார் நானே போட்டுக்கறேன்னு சொல்றா.

ஆசை இல்லையா?
அவளுக்கு மட்டும் புருஷன் கையால் கொலுசு போட்டுக்க ஆசை இருக்காதா என்ன, ஆனால், அவள் காலில்தான் ஆலகால விஷம் கொண்ட நாகம் வந்து கடித்து விஷத்தை கக்கிவிட்டுப் போயிருக்கிறதே. அதனால் ஒரு மாதத்துக்குள் விஷம் உடல் முழுக்க பரவி, உயிர் போகும் அபாயத்தில் இருக்கிறாள். இப்போதே கால் ஊதா நிறத்தில் மாறி வருகிறது.அந்த காலை எப்படி அவள் அர்ஜுனிடம் காண்பிப்பாள்?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications