Aranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா? இதெல்லாம் ஒரு...!
சென்னை: பள்ளியில் ரேகிங்..கல்லூரியில் ரேகிங் இவ்வளவு ஏன் வேலை பார்க்கற இடத்துலகூட ரேகிங் பார்த்திருப்போம். குடும்பத்துல ரேகிங்.. இது கொஞ்சம் புதுசுதான்.
அர்ஜுனின் தம்பி அருணுக்கு கல்யாணம். அருண் அத்தைப் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறான்.அந்த அத்தைப் பெண்ணோட ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கு வராங்க.
எல்லாரும் படிச்ச பொண்ணுங்க... புடவை உடுத்தி, பூ வச்சு அழகா இருக்கற ஜானுவை பார்க்கும் போதே இவ உங்க வீட்டு வேலைக்காரியான்னு கேட்கறாங்க.

ஆங்கிலம் முதலில்
முதலில் ஜானுவுக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு கிண்டல் பணறாங்க. அவ அர்ஜுன் கிட்ட கத்துக்கிட்டு பொளந்து கட்டறா. அடுத்து ஸ்பூன்.ஃபோக், கத்தி வச்சு சாப்பிடத் தெரியாதுன்னு ஜானுவை கேலி பண்றாங்க. ஜானு ட்ரை பண்ண அது தட்டில் இருந்து தெறிச்சு வெளியில் விழுது. இதுக்கு எல்லாரும் சிரிக்கறாங்க.

அர்ஜுன்தான் அப்போதும்
அப்போதும் அர்ஜூன்தான் கையில் சாப்பிடறதுதான் ஆரோக்கியம்னு சொல்லு ஜானு. அப்போதுதான் சாப்பிடும் உணவு செரிக்கும்னு சொல்லு..சாப்பிடும்போது பேசக் கூடாது, சிரிக்கக் கூடாதுன்னு சொல்லி, அப்படி செய்தால் ஹார்ட் அட்டாக் கூட வந்துரும்னு சொல்லுன்னு சொல்லித் தர்றான்.

ஆடு ஜானு
எங்ககூட டான்ஸ் ஆடு ஜானுன்னு கேர்ள்ஸ் கூப்பிட்டு ஜானுவை டான்ஸ் ஆட வைக்க, அவளை புடவைத் தடுக்கி விழச் செய்யறாங்க. உன் புடவையாலதான் ஆட முடியலைன்னு கிண்டல் செய்து சிரிக்கறாங்க. அப்போதும் ஜானுவுக்கு அர்ஜுன்தான் சப்போர்ட் பன்றான்.

ஜானுவுக்கு டிரவுசர்
அர்ஜுனின் அத்தைப் பெண்ணின் ஃபிரண்ட்ஸ் டிரஸ் எடுக்க ஷாப்பிங் போறாங்க. அப்போ வேணும்னே ஜானுவுக்கு பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா போட்து பிரபலம் ஆன குட்டி டிரவுசரை வாங்கி வந்து ஜானுவை போட்டுக்க சொல்லுங்க அர்ஜுன் சார்னு சொல்றாங்க. அர்ஜுனும் ஜானு அவங்க கொடுக்கற டிரஸை போட்டுக்கோன்னு சொல்றான்.

டிரவுசர் சார்
சார் குட்டி டிரவுசர் குடுத்து போட்டுக்க சொல்றாங்க சார். நன் எப்படி சார் அதை எல்லாம் போடுவேன்னு சொல்றா. நீ அவங்க மூக்கை உடைச்சு விடு ஜானு.. அதுக்குத்தான் உன்னை அவங்க கிட்டே அனுப்பி வச்சேன்னு சொல்றான். ஜானுவும் உடைகளின் அருமை பெருமைகளை எடுத்து சொல்லி, அவர்களின் மூக்கை உடைக்கிறாள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications