Aranmanai Kili Serial: எனக்கு போக நேரம் வந்துருச்சும்மா... ஐயோ பாவம் ஜானு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியல், கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், புல்லலானாலும்புருஷன் என்று காலத்தின் பின்னோக்கி கதையை காண்பிக்கிறார்கள்.

என்றாலும், கணவன் ஒன்றும் கெட்டவன், குடிகாரன் இல்லை என்றாலும், அர்ஜூனால் நடக்க முடியாது. ஆனால்,பணக்காரன், இப்போதைக்கு ஒரு கணவனாக வாழ தகுதி அற்றவன்.

என்றாலும் அர்ஜுனின் அம்மா மீனாட்சி அம்மா தனது மகனுக்கு மனசாட்சியே இல்லாமல்,ஒரு ஏழைப் பெண்ணை பிடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கறாங்க.இது சரியா?

விவாகரத்து கல்யாணம்

விவாகரத்து கல்யாணம்

அக்கா ரேணுகா அர்ஜூனால் நடக்க முடியாது. அவனுடன் வாழ முடியாது என்று கல்யாண மண்டபடத்தை விட்டு ஓடிவிட, அடுத்து, தங்கை ஜானுவை அவளிடம் கூட கேட்காமல், கல்யாணம் நின்று போனால் கவுரவம் என்னாவது என்று யோசிச்சு மீனாட்சி அம்மா கல்யாணம் பண்ணி வச்சுடறாங்க.

சேவகி ஜானு

சேவகி ஜானு

அர்ஜுனுக்கு ஒரு சேவகி போல ஜானு வேலை செய்கிறாள், அவனது காலை எப்படியாவது நடக்க வைத்துவிட வேண்டும் என்று சித்தர் ஆஸ்ரமம் போகிறாள், வாசுகி பாம்பு, ஆலங்கட்டி மலை என்று பல கதைகளைச் சொன்னாலும், பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.மனிதாபிமானம் கணவன் மீது இப்போது காதலாக மாறுகிறது.

இப்போது தேவை

இப்போது தேவை

மனிதாபிமானம் இல்லாத இப்போதைய கால கட்டத்தில் இப்படிப்பட்ட கதைகள் பெண்களுக்காக இருந்தாலும் சரி, ஆண்களுக்காக இருந்தாலும் சரி... தேவைத்தான் படுகிறது. செக்ஸ் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை உணர்த்துவதாக இந்த சீரியல் கதை இருக்கிறது.

பாம்பு சித்தர்

பாம்பு சித்தர்

மனிதர்களில் சித்தர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சித்தர்களை நம்புபவர்களுக்கு தெய்வமும் உண்மை, பாம்பும் உண்மை. அவர் காலத்தை நம்பித்தான் தீருவார்கள்.அதே போல் பேய்,ஆவி இருப்பதும் உண்மை முன்னோர்கள் தெய்வமாக வாழந்து கொண்டு இருக்கிறார்கள் என்று நம்பி வாழ்வதும் அவர்களைப் பொறுத்தவரை உண்மைதான்.

சென்டிமென்ட்

சென்டிமென்ட்

சகுனம், சென்டிமென்ட், தெய்வ நம்பிக்கை என்று ஒருவர் வாழ்ந்தால்,இப்படி வாழக்கை நடப்பதும் சாத்தியமே...பார்க்கப் போனால் ஜானு இப்படிப்பட்ட பெண்ணாக வாழ்வது பெருமைப் படக் கூடிய விஷயம்.இதில்கேலி செய்ய ஒன்றும் இல்லை. அர்ஜுன் நன்றாக நடக்க வேண்டுமென்று சித்தர் கூப்பிடும் இடத்துக்கு யாரிடமும் சொல்லாமல் கிளம்பத் தயாராகி விட்டாள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+