Aranmanai Kili Serial: ஜானு.. வெட்கமாயிருக்கு.. அப்படி இப்படின்னு சொல்லக்கூடாது!
சென்னை: எப்போது கல்யாணம் முதல் காதல் வரை என்று விஜய் டிவியில் ஒரு சீரியல் ஒளிபரப்பினார்களோ அது முதல் அதையே தீம் வச்சு விஜய் டிவியின் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
அதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால் கட்டாய கல்யாணம் நடந்துவிடும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகி, முதலில் காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அந்த காதல் மட்டும் தொடர்ந்து, புருஷன் பெண்டாட்டி இன்னும் ஒன்று சேராமல் இருப்பார்கள். இது அரண்மனை கிளி சீரியலிலும் தொடர்கிறது.

பிடிக்கிறது ஜானுவை
அர்ஜுனுக்கு ஜானுவின் அக்கா ரேணுகாவைத்தான் முதலில் பேசி முடித்தார்கள். அவள் அர்ஜுனை கால் நடக்க முடியாதவன் என்று விட்டுவிட்டு போக, அடுத்த நிமிஷத்தில் அவளின் தங்கை ஜானுவுடன் அர்ஜுன் கல்யாணத்தை அர்ஜுன் அம்மா நடத்தி வைக்கறாங்க. இருந்தாலும், அர்ஜுனுக்கு மட்டும் இல்லை. மீனாட்சி அம்மாவுக்கும் ஜானுவை பிடிக்கவில்லை.

பிடிக்கிறது ஜானுவை
ஜானுவை இப்போது அர்ஜுனுக்கு பிடித்துப் போகிறது. ஆனால், அம்மாவுடன் சேர்ந்துகொண்டு, ஜானுவை விவாகரத்து பண்ணிவிடலாம் என்று, ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இருந்தாலும், ஜானு, அர்ஜுன் ஒருவர் மேல் ஒருவர் வைத்து இருக்கும் பாசம், காதல் என்பது நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

வருகிறவர் போகிறவர்
வீட்டுக்கு வருகிறவர் போகிறவர் எல்லாம் ஜானுவை கலாய்க்கும் அளவுக்கு கதையை கொண்டு போகிறார்கள். அதில் ஒருத்தி, ஜானுவை நான் வீட்டை விட்டு விரட்டி விட்டுத்தான் போவேன்னு சொல்கிறாள். இதெல்லாம் கதைக்கு ஒட்டாமல் இருந்தாலும் மக்கள் ரசிக்கிறார்கள்.

கூடாது வெட்கம்
ஜானு தன்னைத் தீண்டிய தெய்வ நாகத்தின் விஷம் தனது உடலில் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது என்று அறிந்து, உடம்பு அசதியாக இருக்கிறதே என்று படுத்து இருக்கிறாள்.அப்போது அர்ஜுன் போன் வருகிறது. எடுத்து பேச, ஜானு உனக்கு ஒரு சர்ப்ரைஸ்..

என்ன அதுக்கு
அதை நான் உனக்கு சொல்லும்போது வெட்கமா இருக்குன்னு சொல்லக் கூடாதுன்னு சொல்றான். என்ன சார்னு ஜானு கேட்க, நீதானே நான் எது கேட்டாலும் செய்வேன்னு சொன்னே அதுதான்னு சொல்றான் அர்ஜுன்.
அதுக்காக எது வேணுமானாலும் செய்ய சொல்வீங்களா சார்னு கேட்கிறாள். இல்லை ஜானு ஒரு ஜீன்ஸும் லேட்டஸ்ட் டிசைன் டாப்பும் வாங்கி இருக்கேன்.அதை நீ போட்டுக்கிட்டு, நம்ம வீடு முழுக்க சுத்தி வரணும்னு கேட்கிறான்.

அழகான டாப்ஸ்
போங்க சார், எனக்கு வெட்கமா இருக்குன்னு ஜானு சொல்ல, என்னை உனக்கு பிடிக்கும் தானே..நான் சொன்ன எதையும் கேட்பே இல்லே. உன்னை பட்டிக்காடுன்னு கிண்டல் அடிக்கறவங்க முன்னால நீ ஸ்டைலா ஜீன்ஸ் போட்டுக்கிட்டு வீட்டை சுத்தி வரணும் ஜானு.அதுதான் என் ஆசைன்னு சொல்றான்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications