Aranmanai kili serial: இவ்ளோ நாள் கழிச்சு சுப்புலட்சுமி வர்றாளே விளையாட்டு வினையாகிப்போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் அர்ஜுனின் சுப்புலட்சுமி காதல் கதை இன்னும் முடிந்த பாடில்லை.அதை இன்னும் சொல்லுங்க சொல்லுங்க என்று விஜயாவிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறாள் ஜானு.

விஜயாவும் சுவாரஸ்யமாக அர்ஜுனின் முன்னால் காதலி பற்றியும், அவனின் வீர தீர பராக்கிரமம் கூடிய சுப்புலட்சுமி மீதான காதல் விஷயத்தையும் ரசிக்கும்படி கதையாக சொல்லிக்கொண்டு இருக்கிறாள் விஜயா.

திடீர்னு கதையை நிறுத்திவிட்டு, பாப்கார்ன் கூல்ட்ரிங்க்ஸ் கொண்டு வா போன்னு விஜயா கேட்க... அக்கா பாதியில கதையை நிறுத்தாதீங்க அக்கா சொல்லுங்கன்னு ஜானு கெஞ்சறா.

காதல் கதையை

காதல் கதையை

ஏண்டி... உனக்கு கஷ்டமா இல்லை... உன் புருஷன் காதல் கதையையே இவ்ளோ இன்ட்ரஸ்ட்டா கேட்கறியே... உன்னை பார்த்த பாவமா இருக்குடீன்னு விஜயா சொல்றாங்க. கஷ்டமா எல்லாம் ஒண்ணும் இல்லக்கா. அவருக்கு எது என்னென்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்க கேட்கறேன் அக்கா சொல்லுங்கன்னு கேட்கும்போதே துர்கா வந்துடறா.

அடுப்பில் குக்கர்

அடுப்பில் குக்கர்

அக்கா அடுப்பில் குக்கர் வச்சுட்டு மறந்துட்டேன். பாருங்க உங்க கூட பேசிக்கிட்டே உட்கார்ந்துட்டேன். நான் போறேன்க்கான்னு ஜானு எழுந்து போக.. அடியேய்..நீ கேட்டேன்னு நான் சூப்பரா கதை சொல்லிக்கிட்டு இருக்கேன்.திடீர்னு கிளம்பறேன்னு விஜயாவும் கத்திட்டு பார்க்க, அங்கே துர்கா நிற்கிறாள். ஓ.. இதுதானா சங்கதின்னு மனசுக்குள்ள பேசிக்கறா.

நல்லாருக்கா விஜயா

நல்லாருக்கா விஜயா

இது உனக்கே நல்லாருக்கா விஜயான்னு துர்கா கேட்க.. என்ன மொட்டையா கேட்கறே..விஷயத்தை சொல்லி கேளுன்னு சொல்ல, ஜானு இன்னும் கொஞ்ச நாளில் டைவர்ஸ் வாங்கிட்டு போகப் போறா. அவகிட்டே இப்படி நெருக்கமா பழகினா, அவள் இந்த வீட்டை விட்டு போகும்போது வருத்தப்பட மாட்டாளான்னு கேட்க, அதை நம்ம முடிவு பண்ண கூடாது. அவ இந்த வீட்டை விட்டு போறாளா.. இல்லை யாரு வீட்டை விட்டு போகப் போறாங்கன்னு கடவுள்தான் முடிவு பண்ணுவார்னு கிண்டலா சொல்லிட்டு போறா.

சுப்பு லட்சுமி ஆட்டோவில்

சுப்பு லட்சுமி ஆட்டோவில்

இப்படி பேசிக்கொண்டு இருக்கையில், ஒரு ஆட்டோவில் சுப்பு லட்சுமி ரொம்ப கோவமா வந்துகிட்டு இருக்கா. பார்த்தால் அர்ஜுன் வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி, அதிலிருந்து இறங்கி, யாருங்க யாருங்கன்னு கேட்க கேட்க பேசாமல் உள்ளே போயி, கிச்சனில் என்ட்ரி கொடுக்க, அங்கு இருந்த விஜயா ஏய் சுப்பு லட்சுமி என்று கூப்பிட, அதற்கு பேசாமல் ஜானுவின் அருகில் சென்று நின்று, அவளது கழுத்தில் கிடக்கும் தாலியை எடுத்து பார்க்கிறாள்.

இதுக்கு பேர்தான் விளையாட்டு வினையாகிப் போச்சுன்னு சொல்றது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+