Aranmanai Kili Serial: இதுக்குத்தான் புருஷனோட முன்னாள் காதலி கதை கேட்க கூடாது!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் கணவன் அர்ஜுனின் முன்னாள் காதலி சுப்பு லட்சுமிபற்றி விஜயா ஜானுவிடம் கூறியதும் ஒரு விதத்தில் நல்லதுதான் போலும். கதை கேட்டுக் கொண்டு இருந்த ஜானுவுக்கு பொஸசிவ் வந்துருது.
விஜயா சுப்புலட்சுமி, அர்ஜுன் காதல் விஷயம்பற்றி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஜானுவிடம் கதை சொல்லிக் கொண்டு இருந்தாள். ஜானுவும் கதையை சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டு இருந்தாள்.
கதை லவ் சீன் கொஞ்சம் ஓவராகவே சென்று கொண்டு இருக்க, இப்போதுதான் போதும்க்கா அர்ஜுன் சார் இப்படி எல்லாமா சுப்பு லட்சுமியை காதலிச்சு இருக்காரா? என்னால தாங்கிக்க முடியலேன்னு சொல்லிட்டு போறா.

அர்ஜுனை ஜானு
பார்த்தியா உனக்கும் பொஸசிவ் வந்துருச்சு. நீ அர்ஜுனை லவ் பண்றே தானேன்னு விஜயா கேட்க... எனக்கு சுப்பு மேல பொறாமையா இருக்குக்கான்னு சொல்றா ஜானு. இதைத்தாண்டி நானும் எதிர்பார்த்தேன்.எத்தனை நாளைக்குத்தான் அர்ஜுன் மேல இருக்கற காதலை மறைச்சுக்கிட்டு வாழ்த்துகிட்டு இருப்பேன்னு தனக்குத்தானே பேசிக்கறா விஜயா.

அதிகம் நான்தான்
அர்ஜுன் போட்டோவை எடுத்து கையில் வச்சுக்கிட்டு, என்ன சார் நீங்க சுப்பு லட்சுமியை இவ்ளோ ஆழமா காதலிச்சு இருக்கீங்க.அதை விட உங்களை நான் ரொம்ப ஆழமா காதலிக்கிறேன். அதை ஏன் சார் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்கன்னு சொல்லி அழறா. இதுவரைக்கும் தியாகி மாதிரி இருந்த ஜானுவின் உண்மையான மனசை வெளியில் கொண்டு வந்தது விஜயாதான்.

அர்ஜுன் சுப்பு
ஜானு கோவத்தில் ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல் இருந்த அத்தனை சாமான்களையும் தள்ளிவிட்டுட்டு அழறா. அங்கு வந்த அர்ஜுன்., ஜானு விஜயா சுப்புலட்சுமி பத்தி உன்கிட்டே ஏதாவது பேசினாளான்னு கேட்கறான்.ஜானு பேசாமலிருக்க, சொல்லு ஜானுன்னு மறுபடியும் கேட்க இவள் ஒண்ணும் இல்லை சார்னு சொல்லி மழுப்பறா .

விஷயம் ரெண்டு
கணவனோ மனைவியோ தன்னோட முன்னாள் காதலி, அல்லது காதலன் பற்றி கூறுகையில் , அது நேர்மறையாகவும் மாற வாய்ப்பு இருக்கு. எதிர் மறையாக மாறி குடும்ப அமைப்பே சீர் குலையவும் வாய்ப்பு இருக்கு..அதனால், குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை என்பது மிகமிக முக்கியம். இதைத்தான் உணர்த்துவதாக இருக்கிறது இந்த சீரியல்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications