Aranmanai kili serial: வாசுகி பாம்பு அர்ஜுனை நடக்க வச்சுருச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ஒரு விபத்தில் நடக்க முடியாமல் இத்தனை வருஷம் இருந்த அர்ஜுன் இப்போது வாசுகி பாம்பின் சிகிச்சையால் நடக்க ஆரம்பிச்சுட்டான்.

அர்ஜுனின் மனைவி ஜானு, படாத பாடு பட்டு காடு, மலை, புதைகுழி என்று அத்தனையிலும் மாட்டி தப்பிச்சு போராடி பூஜைகளை செய்து முடித்தாள், கடைசியில் நாக தேவர்கள் வசிக்கும் வனத்துக்கும் போயிட்டு வந்துடறாங்க.

வனத்தில் நாக தேவர்கள் சொல்படி அத்தனை பூஜைகளையும் செய்து, கடைசியாக வாசுகி எனும் ஐந்து தலை பாம்புக்கும் பூஜை செய்துட்டு வந்துடறா ஜானு.

அம்மாவுக்கு பிடிக்கலை

அம்மாவுக்கு பிடிக்கலை

ஜானு தனது மகன் அர்ஜுனை இப்படி ஆஸ்ரமம், மூலிகை, வைத்தியம் , பூஜை ,புனஸ்காரம் என்று இழுத்துக்கொண்டு அலைவது அர்ஜுன் அம்மா மீனாட்சி அம்மாவுக்கு பிடிக்கலை. ஜானுவை வந்து திட்டிட்டு, அர்ஜுனை அழைச்சுட்டு போக நினைக்கறாங்க. போலீஸ் வந்தும் கூட இதை நடக்க விடாமல் செய்துடறா ஜானு. இதனால் செம கோபத்தில் இருக்காங்க மீனாட்சி அம்மா.

அஞ்சு தலை பாம்பு

அஞ்சு தலை பாம்பு

அஞ்சு தலை கொண்ட வாசுகி பாம்பு வந்து அர்ஜுனின் கால்களை பின்னி பிணைந்து, அவனை நடக்க செய்துவிட்டு போகிறது. இது தெரியாமல் அவன் மயக்கத்திலும் , பயத்திலும் கிடக்க, மகன் பாம்பை பார்த்து அலறுவதை பார்க்க ஓடோடி வந்த மீனாட்சி அம்மாவை போன பாம்பு திரும்பி வந்து கொத்திருது. அவங்களை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போயிட்டு, வீட்டுக்கு கூட்டிகிட்டு போயிடறா துர்கா.

நன்றாக நடக்கிறான்

நன்றாக நடக்கிறான்

வாசுகி பாம்பு அர்ஜுனை தீண்டிவிட்டு போக, அர்ஜுன் நன்றாக நடக்க ஆரம்பித்து ஊருக்கும் கிளம்பறாங்க. அம்மா உன் மேல கோபத்துல இருப்பாங்க ஜானு.ஆனா, நான் நடக்கறதைப் பார்த்த உடன் அவங்களே உன்னை வாழ வைப்பாங்க பாரேன்னு அர்ஜுன் சந்தோஷமா சொல்றான். சார் வேணாம்...அம்மாகிட்ட சொல்லாதீங்கன்னு கேட்கறா ஜானு.

ஜானு எதுக்கு

ஜானு எதுக்கு

எதுக்கு ஜானு அம்மாகிட்ட உண்மையை மறைக்கணும்னு அர்ஜுன் கேட்க, எனக்கு தோணுது சார், எங்கியோ யாருக்கோ நீங்க எழுந்து நடக்கறது பிடிக்கலை. இதை என்னால சரியா சொல்ல முடியலை. நம்மை தடுக்க யாரோ முயற்சி செய்தும், ஏதோ ஒரு சக்திதான் நம்மை இந்த அளவுக்கு காப்பாத்தி கொண்டு வந்து இருக்கு. அதை நல்லா தெரிஞ்சுக்கிட்ட பிறகு அம்மாகிட்ட சொல்லலாம் சார்.எனக்கு இதை வாக்கா குடுங்கன்னு கேட்கறா ஜானு.

கதையில் அப்புறம் எப்படித்தான் டிவிஸ்ட் வைக்கறதாம்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+