Aranmanai Kili Serial: யாரு அந்த சுப்பு லட்சுமி... ஜானுவும் விளையாடி பார்க்கிறாளே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ஜானுவும் அர்ஜுனை சற்று சீண்டி பார்ப்பது மிக நன்றாக சுவாரஸ்யமாக இருக்கிறது. அடுப்படியில் ஜானு வேலை பார்த்து கொண்டு இருக்க அங்கே வருகிறார் நந்தினி அக்கா.

ஜானு ரொம்ப நல்லவளாக இருப்பதை பற்றி ரொம்பவும் அலுத்துக் கொண்ட நந்தினி, உன்னை மாதிரி நல்ல பேரை எடுக்கணும்னா நானும் லாஸ்லியா மாதிரி ஒரு ஓரமா ஒதுங்கி இருந்துக்கணும். அதைத் தவிர என்னால ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சொல்றா.

கடைசியில் அர்ஜுன் நடக்கும்போது எவ்ளோ நல்லா இருந்துச்சு இந்த குடும்பம். அதுவும் எல்லாம் இந்த சுப்புலட்சுமியால வந்ததுன்னு ஒரு பெயரை விட்டுட அதையே பிடிச்சுக்கறா ஜானு.

சுப்புலட்சுமி யாருக்கா?

சுப்புலட்சுமி யாருக்கா?

அக்கா இப்போ சொன்னீங்களே சுப்பு லட்சுமின்னு அவங்க யாருக்கா? எனக்கு இப்பவே நீங்க அதை சொல்லணும்னு கேட்கறா. நான் பெரிய கர்நாடக பாடகி சுப்புலட்சுமி அம்மாவைப் பத்தி சொன்னேன்னு சமாளிக்க, இல்லை என்கிட்டே எதையோ மறைக்கிறீங்க.எனக்கு இன்னிக்கு நீங்க அர்ஜுன் சார் வாழ்க்கையில இருந்த சுப்பு லட்சுமி பத்தி தெரிஞ்சாகணும்னு.. நந்தினிக்கா சொல்லுங்கன்னு கேட்கறா ஜானு.

அர்ஜுன் ஃபைட்டர்

அர்ஜுன் ஃபைட்டர்

இப்போ இப்படி அமைதியா இருக்கானே அர்ஜுன்.அவன் இந்த மாதிரி வாய்ப்பே இல்லை. பெரிய ஃபைட்டர் தெரியுமா? ஒரு நாள் ரவுடிங்க அர்ஜுன் ஜாகிங் போகும்போது தொந்திரவு பண்ணி இருக்காங்க. அப்போ அர்ஜுன் அடிச்சு துவைக்கும் போது, ரவுடிங்க ஒரு வீட்டுக்குள்ளே புகுந்துட்டாங்க. அந்த வீடு யாருதுன்னு பார்த்தால், சுப்பு லட்சுமி வீடு போலிருக்கு. அவங்க அப்பாவும்,அம்மாவும் கத்த, ரூமைத் திறந்துகிட்டு ஒரு உருவம் வந்து அதை போடாதீங்கோன்னு ஒரு குரல் வருது.

உடைச்சுடாதேள் பிளீஸ்

உடைச்சுடாதேள் பிளீஸ்

ப்ளீஸ் அது இருந்தால்தான் நான் பாட முடியும். அதை மட்டும் போட்டு உடைச்சுடாதேள். நேக்கு உயிரே போயிடும்னு அவள் சொல்ல, அவள் அழகில் மயங்கி நின்ற அர்ஜுன், அந்த ஆர்மோனிய பெட்டியை அப்படியே வச்சுடறான். மறு நாளே சுப்பு லட்சுமி வீட்டுக்கு உடைத்த பொருட்கள் எல்லாம் புதிதாக வந்து இறக்கறாங்க. முடிச்சுட்டு போகையில், உங்க கையால எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி குடுங்கன்னு கேட்டு வாங்கி குடிச்சுட்டு ரொமான்ஸா பார்க்கறான்.

சார் ரூமில்

சார் ரூமில்

அக்கா கதையை அப்படியே நிறுத்துங்க. அர்ஜுன் சார் ரூமில் என்னவோ சத்தம் கேட்குது. நான் போய் பார்த்துட்டு அங்கே இருக்கேன்.நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு எனக்கு போன் பண்ணுங்கன்னு சொல்றா ஜானு. அர்ஜுன் ரூமுக்குள் போய் என்னாச்சு சார்னு கேட்டுகிட்டு இருக்க, நந்தினி போன் பண்றங்க.

சொல்லுடி சுப்புலட்சுமி எப்படி இருக்கே... அப்படியா ரொம்ப சர்பிரைசா இருக்கே.ட்ரீட் குடுப்பே இல்லன்னு அர்ஜுன் ஆச்சரியப்படும்படி கதைவிட.நந்தினி என்ன இவ லூசு மாதிரி பேசறான்னு நினைச்சுக்கறா.

அர்ஜுன் ஜானுவை கூப்பிட்டு பக்கத்தில் நிற்க வச்சு...ஜானு அந்த சுப்புலட்சுமி யாருன்னு கேட்கறான்.ஆஹா, திட்டம் வொர்க் அவுட் ஆயிருச்சு டோய்னு மகிழ்ச்சி ஜானுவுக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+