Aranmanai Kili Serial: ரேணுகாவுக்கு எதுக்கு அர்ஜுன் பரம்பரை தாலி? .. யோசிக்க மாட்டீங்களா?
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் இது இருக்கிறது, இது இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு எல்லாம் நிறைந்த கதை. இன்னும் தெய்வம் மட்டும்தான் நேரில் வரவில்லை.
சித்தர், நாக தேவதைகள் வசிக்கும் இடம், வாசுகி பாம்பு அம்மா.பாம்பு கோயில், ஆலங்கட்டி மலை, இன்னும் ஏழு மலைகள்,புதை குழி என்று எல்லாவற்றையும் கதையின் நாயகி ஜானு பார்த்துவிட்டாள்.
இப்போது சித்தர் வந்து நீ உன் புருஷனுக்கு கால் நல்லாயிருச்சுன்னா வந்துடறேன்னு சொன்னியே ஏன் வரலைன்னு கேட்டு வேற மிரட்டுகிறார்.

பரம்பரை தாலி
எங்களது பரம்பரையில் தாலி வேண்டும் என்று சொல்லி, அர்ஜுன் ஒரு தாலி ஆர்டர் பண்றான். பட்டுப் புடவை எடுக்கிறான்.இத்தனையும் தனது மனைவி ஜானுவை அழைச்சுக்கிட்டு போயி செலெக்ட் செய்யறான்.விவாகரத்து என்று முடிவாகிவிட்ட ஜானு இதை பார்த்து என்ன நினைப்பாள்? சரி, சார் நம்ம விவாகரத்துக்குப் பிறகு வேற கல்யாணத்துக்கு ரெடியாகிட்டார் போல என்று மனம் வெதும்புகிறாள்.

தாலிக்கு குங்குமம்
ஜானு அந்த தாலிக்கு குங்குமம் வச்சு சாமிகிட்ட வை ஜானுன்னு சொல்றான் அர்ஜுன். யாருக்கோ எடுத்த தாலிக்கு நன் ஏன் சார் குங்குமம் வைக்கணும்? என்னால முடியாது சார்னு ஜானு கோவமா சொல்கிறாள். ஜானு இந்த தாலி வேற யாருக்கும் இல்லை.உன் அக்கா ரேணுகா யாரையோ காதலிக்கிறாளாம். அவளுக்கு உன் கையால இந்த தாலியையும், பட்டுப் புடவையையும் குடுத்துட்டு வான்னு சொல்றான் அர்ஜுன்.

பரம்பரை தாலி
யாரோ ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு அர்ஜுனின் பரம்பரை தாலி எதுக்கு அவன் செய்ய சொல்லணும், ஜானுவை இப்படி கிலேசப் படுத்தவா? இது கதை முழுக்க தொடராது என்று தெரிந்தும், இதை இயக்குநர் யோசிக்காமல் செய்தது எதனால்.என்னங்க கதை எழுதறீங்க. பரம்பரை தாலி பரம்பரை தாலின்னு அடிக்கடி சொல்றான். நமக்கே சரி தம்பி அருண் லவ் பண்றது ஜானுவின் அக்கா ரேணுகாவை லவ் பண்றது தெரியுமோ என்கிற எண்ணம் கூட வந்துருது.
இது தப்பு

இன்று தெரிஞ்சுக்கணும்
அர்ஜுனுக்கு தம்பி அருண் யாரை லவ் பண்றான்னு தெரியணும். அதுக்காக அவன் அர்ஜுனை பின் தொடர்ந்து சென்று, ஜானுவை அருண் யார் கூட பேசிகிட்டு இருக்கான்னு போட்டோ எடுத்துட்டு வா ஜானுன்னு சொல்ல, அவள் வேணும்னே இருட்டில் அடையாளம் தெரியாத மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டு வர்றா. என்ன ஜானு இப்படி போட்டோ எடுத்துக்கிட்டு வந்திருக்கே. நம்ம குடும்ப கவுரவத்தை கெடுக்கற மாதிரி அருண் யாரையாவது காதலிச்சான்னா அம்மா தாங்கிக்க மாட்டாங்க ஜானுன்னு ஃபீல்பன்றான் அர்ஜுன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications