Aranmanai Kili Serial: பொண்டாட்டியே புருஷன் காதல் கதையை கேட்டு ரசித்தால் எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியல் அர்ஜுன் ரசிகை அல்லது ரசிகரா நீங்கள்? அப்படியானால், எப்போதும் சர்க்கற நாற்காலியில் உட்கார்ந்து இருந்த அர்ஜுனை இப்போது நடக்க வைத்து காண்பிக்கிறார்கள் பார்த்து ரசியுங்கள்.

இப்போது நன்றாக நடக்க ஆரம்பித்து விட்டானான்னு கேள்வி கேட்காமல், இது அவனது ஃபிளாஷ் பேக் காட்சிகள்னு நினைச்சு பாருங்கள். உண்மையும் அதுதான். இப்போது அவனின் பின்னோக்கிய வாழ்க்கை எப்படி இருந்தது என்று காண்பிக்கிறார்கள்.

இந்த கதையை விஜயாக்கா ஜானுவிடம் சொல்ல, அர்ஜுன் பொண்டாட்டி ஜானு, இந்த காதல் கதையை கேட்டு ரசிச்சுகிட்டு இருக்கா. இப்படியும் மனைவி இருப்பார்களா என்று வியக்கத்தான் தோன்றுகிறது.

அர்ஜுன் காதலி

அர்ஜுன் காதலி

அர்ஜுன் முன்னாள் காதலி சுப்பு லட்சமி பாடகியும். ரவுடிகளை துரத்திய அர்ஜுன், அவர்கள் வீட்டுக்குள் நுழைந்த ரவுடிகளை அடிச்சு துவைக்கிறான்.அது மட்டும் இல்லாமல் அவர்கள் வீட்டு பொருட்களையும் தூக்கிப் போட்டு உடைக்கிறான். உடனே சுப்பு லட்சுமி அதை மட்டும் போட்டு உடைக்கதேள்னு தன்னுடைய ஆர்மோனிய பெட்டியை உடைக்கப் போகும் போது சொல்ல, அமைதியான அர்ஜுன், அவள் அழகில் மயங்கிப் போகிறான்.

என்னை மன்னிப்பாயா?

என்னை மன்னிப்பாயா?

உடைத்த பொருட்களை வாங்கி வந்து வச்சுட்டு, சுப்பு லட்சுமியிடம் பேசப்போனாலும், அவள் பேச மறுக்கிறாள். அவன் மன்னிப்பாயா என்று பாடல் போட்டு,அவளை தன் பக்கம் ஈர்க்க நினைக்கிறான். அப்புறம் என்ன கோயில்,குளம் என்று அவள்பின்னாடி சுத்த ஆரம்பிக்கிறான். இப்படி கதையை சுவாரஸ்யமாக சொல்கிறாள் விஜயா. ஜானுவும் அதை சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டு இருக்கிறாள்.

கஷ்டப்பட்ட ஜானு

கஷ்டப்பட்ட ஜானு

அர்ஜுன் நடக்க வேண்டும் என்று பாடு படும் ஜானுவுக்கு புருஷன் என்கிற பொஸசிவ் கொஞ்சமும் வராமல் எப்படி இருக்கும். அதோடு, வீட்டில் டைவர்ஸ் கேஸுக்கும் வேலைகள் நடந்துகிட்டு இருக்குது. இது தெரிஞ்சும் கஷ்டப்பட்டு, கணவனை நடக்க வைத்து அழைச்சுட்டு வந்த விஷயத்தை சொல்லாமல் ஒரு மனைவி எப்படி இருக்க முடியும்? கணவனிடம் கொஞ்சம்கூட சுயநலம் இல்லாமல் இப்படியும் மனைவிகள் இருக்கிறார்களா?

வேண்டாம் தெய்வமாக

வேண்டாம் தெய்வமாக

எந்த சீரியல்களிலும் பெண்ணை பெண்ணாக காண்பிக்காமல், ஒன்று பெரிய வில்லியாக காண்பிப்பது, இல்லை அதற்கும் மீறி பெரிய தெய்வம் போல காண்பிப்பது என்று மிகைப் படுத்தி காண்பிப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.பெண்கள் தியாகி இல்லை. இருக்க வேண்டிய இடத்தில், அவர்கள் தியாகியாக இருப்பார்கள்.கணவன் விஷயத்தில்,அவனை பிடித்து இருக்கும் பட்சத்தில் பொஸஸிவ்வாக பெண்கள் இருப்பார்கள் என்பதே உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+