அண்ணனுக்குப் பிறந்த நாள்.. ஓடி வந்த தங்கச்சி.. நோ அழுகாச்சி!
சென்னை: பிக் பாஸ் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்தாலும் தினமும் பல்வேறு சண்டைகளை தான் ப்ரோமோவில் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நேற்று இரவு ஜித்தன் ரமேஷின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். அதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருந்த இவர்கள் கரெக்டாக 12 மணிக்கு பிக்பாஸ் கேக் அனுப்ப இவர்கள் வெட்ட ஒரு கூத்து தான்.
தனக்கு முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை. என்னுடைய நடிப்பு நன்றாக செயல்படுத்த முடியவில்லை. அதனால் இந்த வீட்டிற்குள் வந்து என்னுடைய திறமையை நிரூபிக்கலாம் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் பலரில் ஜித்தன் ரமேசும் ஒருவர்.

ஜித்தன் ரமேஷ் எதற்கு
ஜித்தன் ரமேஷ் எதற்காக இந்த வீட்டிற்கு வந்து இருக்கிறீர்கள் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்கும் போது கூட கூறியிருப்பார் . நான் பொது இடங்களுக்கு சென்றால் அனைவரும் இது ஜீவாவின் அண்ணன் தானே என்று கேட்கிறார்களே தவிர என்னுடைய பெயரை எல்லாரும் மறந்து விட்டார்கள். அதனால் ரசிகர்களின் மனதில் என்னுடைய பெயரும் இருக்க வேண்டும் என்று தான் வந்தேன் என்று சொல்லியிருந்தார்.

அண்ணன் ஜித்தன்.. நிஷா தங்கை
இந்த வீட்டிற்குள் இவரும் நிஷாவும் அண்ணன் தங்கையாக பாசமழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இவர் ஒரு முறை நிஷாவிடம் சண்டை போடும்போது கூட ரொம்பவே பீல் பண்ணி நிஷா இவரிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். அதுவும் அவர் மண்டையை சொரிந்து கொண்டு சின்ன குழந்தை போல ஆக்டிங் வேற இவரிடம் பண்ணிக் கொண்டிருந்தார். தற்போது இவருக்கு பிறந்தநாள் என்று சொல்வதும் பிக் பாஸ் கேக் அனுப்பினதும் முதல் ஆளாக ஓடி சென்று அவர் தான் கேக் பார்சலை எடுத்துக்கொண்டு வருகிறார்.

மாறி மாறி வெறுப்பு
அதுவரைக்கும் மாற்றி மாற்றி ஓட்டு போட்டு வெறுப்பேற்றி கொண்டிருந்த இவர்கள் பிறந்தநாள் என்றதும் தங்களுடைய கோபங்களையும் பிரச்சனைகளையும் தூக்கியெறிந்துவிட்டு ஆளாளுக்கு ஓடிச்சென்று ஜித்தன் ரமேஷ் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வாழ்த்துக்களை போழிந்து கொண்டிருந்தார்கள். சூப்பரான கேக்கையும் வெட்டி நைட் டைம்ல என்ஜாய் பண்ணி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது தான் பிக் பாஸ் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி டிவியில் ஜித்தன் ரமேஷின் தம்பியான ஜீவாவின் வாழ்த்துக்களை ஒளிபரப்பியது.

அண்ணனுக்கு தம்பி வாழ்த்து
ஜீவாவும் அவருடைய அண்ணனுக்கு வாழ்த்துக்களையும் கூறி இந்த வீட்டில் ரொம்ப நாட்கள் இருந்து விளையாட்டில் வென்று வா என்று ஆசீர்வாதங்களையும் கூறியிருக்கிறார் .அதுவும் அனைவரும் மிஸ் யு ரமேஷ் என்று வீடியோவில் கூறியிருந்தார்கள் .இதைப் பார்த்து அவர் அழுவாரா என்று அனைவரும் அவர் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கும்போது அவர் சந்தோஷமாக கைகூப்பி தேங்க்யூ மட்டும் சொல்லி முடித்துவிட்டார்.

கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டமாக இருந்தாலும் சரி அனைவரும் வீடியோக்களில் தங்களது குடும்பத்தை பார்த்து அழுகாச்சி சீன் தான் நடக்கும். ஆனால் இவர் கொஞ்சம் தைரியமாக நடந்து கொண்டார். எப்படியோ வாரத்துக்கு ஒரு பிறந்தநாள் கொண்டாடி நன்றாக என்ஜாய் பண்ணி கொண்டிருக்கும் இவர்களில் ஜித்தன் ரமேஷ்க்கும் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதுவும் பலர் இவர் மட்டும்தான் இந்த வீட்டுக்குள்ள சீன் போடாம அவருடைய வேலையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் இவருக்கு ஆதரவாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications